பப்பிள் கம் (Bubble gum) வரலாறு என்ன தெரியுமா?

பப்பிள் கம் (Bubble gum) பற்றிய யாரும் அறியாத சுவாரஸ்யமான மற்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!
பப்பிள் கம் | Bubble gum (chewing gum)
பப்பிள் கம் | Bubble gum (chewing gum)AI Image
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மரப்பிசின்களிலிருந்து தொடங்கிய பப்பிள் கம், இன்று சிந்தடிக் ரப்பர் மற்றும் சக்கரையுடன் பல சுவைகளில் தயாராகிறது. சக்கரை இல்லாத கம் பற்களை சுத்தம் செய்து சலைவா சுரப்பை ஊக்குவிக்கிறது. வயிற்றில் ஏழு வருடம் ஒட்டும் என்ற நம்பிக்கை தவறு; ஏழு நாட்களில் வெளியேறிவிடும் என ஆய்வுகள் கூறுகின்றன.

குழந்தைகள் முதல் பல்லில்லாத பெரிசுகள் வரை பப்பிள் கம் என்றால் ஜொள் விடாதவர்கள் இல்லை எனலாம். இந்த பப்பிள் கம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

நம்பித்தான் ஆகவேண்டும். மேலும், பப்பிள் கம் வயிற்றில் ஒட்டிக்கொள்ளுமா? என பப்பிள் கம் பற்றிய முழுமையான தகவல்களை இந்தக் கட்டுரையில் தெரிந்து தெரிந்துகொள்ளலாம்.

அப்போதெல்லாம் பப்பிள் கம் மரப்பிசின்களிலிருந்து  செய்தார்களாம். இப்போது பப்பிள் கம்மை சக்கரை சேர்த்து சிந்தடிக் ரப்பரில் செய்கிறார்கள். சக்கரை சேர்க்காத பப்பிள் கம் பற்களை சுத்தம் செய்வதோடு வாயில் எச்சில் அதாவது (சலைவா) Saliva ஊறுவதை ஊக்கிவிக்கிறது. சலைவா ஜீரணத்திற்கு மிகவும் அவசியம்.

பப்பிள் கம் சாப்பிட்டால் அது வயிற்றில் ஏழு வருடம் அப்படியே ஒட்டி கொண்டிருக்கும் என்றெல்லாம் தவறாக நம்பப்பட்டது. அப்படியெல்லாம் இல்லை. அது ஏழு நாட்களுக்குள் வெளியேறி விடும் என்று கண்டறிந்திருக்கிறார்கள். 

பப்பிள் கம் | Bubble gum (chewing gum)
பப்பிள் கம் | Bubble gum (chewing gum)AI Image

மாடர்ன் பப்பிள் கம்மை 1928 இல் Walter Diemer என்பவர் உருவாக்கினார். அதன் பெயர் 'double bubble'. முதலில் எல்லா பப்பிள் கம்களும் pink நிறத்தில் மட்டும்தான் இருந்தன. பின்புதான் மற்ற வண்ணங்களில் வர ஆரம்பித்தது.

இதையும் படியுங்கள்:
குட்டீஸ்களா! கோடையில்  மண்பானை தண்ணீர் ஏன்  ஜில்லென்று இருக்கிறது  தெரியுமா?
பப்பிள் கம் | Bubble gum (chewing gum)

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த Mayans மற்றும் Aztecs மரங்களிலிருந்து வடியும் Chicle என்ற பொருளை பற்களை சுத்தம்செய்யவும், வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தவும்  உபயோகித்தார்கள். இந்த chicle என்ற பெயரால்தான் பல பப்பிள் கம் பிராண்டுகள் விற்கப்பட்டன; விற்கவும் படுகின்றன.. பப்பிள் கம்மில் நாம் ரசிக்கக்கூடியது அதன் சுவை மட்டுமல்ல அதை பலூன்போல ஊதுவதும் கூடத்தான். பள்ளிகளில் வாயில் பப்பிள் கம்மை அசைபோட்டு பலூன் ஊதாத குழந்தைகள் இருக்க மாட்டார்கள். இதை என்றும் 'Chewing Gum' அழைப்பார்கள்.

23 inch விட்டமுள்ள பப்பிள் பலூன்தான் உலகத்திலேயே மிகப்பெரிய பப்பிள் பலூன். விழுங்குவது கடினமான வேலை என்றாலும் விண்வெளி வீரர்களுக்கும் கை கைகொடுக்கிறது இந்த பப்பிள் பலூன். விண்வெளி வீரர்கள் ஒருபக்கம் இருக்கட்டும்.

Bubble Gum அசைபோட்டவாறே ஆடாத கிரிக்கெட் வீரர்களே இல்லை எனலாம். இவற்றிற்கெல்லாம் மேலாக bubble Gum தாடை தசை நார்களை பலப்படுத்துகின்றன என்று bubble Gum விசிறிகள் சொல்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
உலக தேசிய கீதங்களின் பின்னணியில் இவ்வளவு சுவாரஸ்யங்களா..!
பப்பிள் கம் | Bubble gum (chewing gum)

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், பப்பிள் கம் குறித்த காலங்காலமான கட்டுக்கதைகளை உடைத்து, அதன் அறிவியல் உண்மைகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளைத் துல்லியமாகத் தெரிந்துகொள்வதன் மூலம், இதன் மீதுள்ள பயம் நீங்கி புத்துணர்ச்சியுடனும் தெளிவுடனும் இதை அனுபவிக்க முடியும். மேலும், பப்பிள் கம் பின்னால் இருக்கும் அறிவியல் மற்றும் விண்வெளி பயன்பாடுகளை அறிந்துகொள்வதன் மூலம், அன்றாடம் நாம் உண்ணும் சாதாரண மிட்டாய் மீதான அறிவியல் பார்வை மற்றும் அறிவு உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும்.

அதோடு, பப்பிள் கமின் நன்மைகள் மற்றும் அதன் வரலாறு பற்றிய விரிவான புரிதலைப் பெறுவதன் மூலம், இந்த இனிமையான பழக்கத்தை எந்தவிதத் தயக்கமும் குற்றவுணர்வும் இன்றி முழுமையாக ரசிக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com