கால்குலேட்டரில் இருக்கும் ஒவ்வொரு பட்டனுக்கும் என்ன வேலை?

கால்குலேட்டரில் இருக்கும் ஒவ்வொரு பட்டனுக்கும் என்ன வேலை என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
Father, son and calculator
Father, son and calculatorImage credit: AI Image
கல்பனா ராஜகோபால்

கல்பனா எனும் நான் பள்ளிப் பருவத்திலிருந்தே என்னுள் இருக்கும் தமிழார்வத்தால் புத்தகம் வாசிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். என் கவிதைக்கு முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் பெற்று உள்ளேன். என் கவிதை முதன் முதலில் மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியாகி அதற்கு பரிசும் பெற்றேன். பணி ஓய்வுக்கு பிறகு என் எழுத்துப் பணியை கல்கி ஆன்லைனில் தொடந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு நல்கிய. கல்கிக் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Updated on

ஹாய் குட்டீஸ்!

நீங்க தினமும் பயன்படுத்துற கால்குலேட்டரை பற்றி கொஞ்சம் சுவாரஸ்யமான கதை கேட்கலாமா?

ஒரு நாள் ரவி என்னும் குட்டி பையன், அவன் அப்பாவுடன் கடைக்கு போனான். அங்கே அவன் அப்பா கணக்குப் போட கால்குலேட்டர் (Calculator) பயன்படுத்திக்கொண்டிருந்தார். ரவிக்கு அது ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.

“அப்பா, இந்த எல்லா பட்டன்களின் பயன் என்ன?”-ன்னு அவன் கேட்டான்.

அப்பா சிரிச்சுட்டு, “இது எண்கள், கூட்டல் (+), கழித்தல் (−), பெருக்கல் (×), வகுத்தல் (÷) எல்லாம் செய்ய உதவும்,”-ன்னு சொன்னார்.

ரவிக்கு இன்னும் ஆர்வம் அதிகமாயிடுச்சு. “அப்பா, இந்த AC, CE-ன்னு இருக்கு இல்ல, அது என்ன?”

அப்பா அவனை அருகில் உட்கார வைத்து சொல்ல ஆரம்பித்தார்.

“AC-ன்னா All Clear. நீ போட்ட எல்லா கணக்குகளையும் முழுக்க அழிக்க இந்த பட்டன் உதவும்.”

அவர் ஒரு கணக்கு போட்டார்; பிறகு AC அழுத்தினார். உடனே எல்லாம் 0 ஆக மாறிவிட்டது. ரவி ஆச்சரியப்பட்டான்!

“CE-ன்னா Clear Entry. நீ ஒரு எண் மட்டும் தவறுதலாக போட்டா, அந்த கடைசி எண்ணை மட்டும் நீக்க இந்த பட்டன் உதவும்,”-ன்னு அவர் விளக்கினார்.

அதுக்கப்புறம் ரவி இன்னொரு பட்டனை காட்டி, “அப்பா, இந்த % என்ன?”-ன்னு கேட்டான்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் கதை: பச்சைக்கிளி பஞ்சாயத்து..!
Father, son and calculator

“அது சதவீதம் (percentage) கணக்கிட உதவும்,”-ன்னு அப்பா சொன்னார்.

“இந்த . (dot)?”

“அது தசம எண்கள் (decimal numbers) எழுத பயன்படும்.”

“இந்த = பட்டன்?”

“அது தான் மிக முக்கியமானது! நீ போட்ட கணக்கின் முடிவை காட்டும்,”-ன்னு அப்பா சிரித்தார்.

“இந்த +/− என்ன?”-ன்னு ரவி கேட்டான்.

“அது ஒரு எண்ணை positive-லிருந்து negative ஆக மாற்றும்,”-ன்னு அவர் கூறினார்.

இவ்வளவு கேட்ட பிறகு ரவி ரொம்ப சந்தோஷமாயிட்டான். “வாவ்! கால்குலேட்டர் இவ்வளவு easyஆ இருக்கே!”ன்னு மகிழ்ச்சியாக சொன்னான்.

அந்த நாளிலிருந்து ரவி கால்குலேட்டரை பயப்படாமல், சரியாக பயன்படுத்த ஆரம்பித்தான்.

அப்படின்னா குட்டீஸ்… நீங்களும் உங்கள் கால்குலேட்டரில் இந்த எல்லா பட்டன்களையும் try பண்ணி பாருங்க. தினமும் பயன்படுத்துற ஒரு சின்ன பொருள்ல கூட எவ்வளவு விஷயங்கள் இருக்குனு தெரிஞ்சா, கற்றல் இன்னும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

ஆனால், ஞாபகம் இருக்கட்டும், கால்குலேட்டர் நமக்கு கணக்குப் போட உதவினாலும், நம்முடைய மூளைதான் அதைவிட ரொம்ப வேகமானது, புத்திசாலியானது!

logo
Kalki Online
kalkionline.com