குட்டீஸ்களா! புயல்களுக்கு பெயர் சூட்டும் பழக்கத்தை தொடங்கியவர் யார்?

வங்கக்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கப்படுவதன் காரணம் மற்றும் அதன் வரலாறு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
புயல் | cyclone
புயல் | cycloneImage credit: Gemini AI
ஆர்.ஜெயலட்சுமி

ஆர். ஜெயலட்சுமி திருநெல்வேலி ஊர்.மங்கையர் மலரின் முப்பது வருட வாசகியும் எழுத்தாளரும் நான். எனது அம்மா முதலில் மங்கையர் மலரில் எழுதி வந்தவர் அதை தொடர்ந்து நானும் எழுதுகிறேன்

Updated on: 

குட்டீஸ்களா! இது மழைக்காலம். மழைக்காலம் என்றாலே புயல்கள் உருவாகி நிறைய மழை பெய்யும். உங்களுக்கெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டு விடுகிறார்கள் இல்லையா? இப்பொழுது புதிதாக உருவாகி உள்ள புயலுக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள் அது என்ன பெயர் தெரியுமா?

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ள நிலையில் அதற்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட தமிழ்ச் சொல்லான முரசு என்ற பெயர் சூட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியில் வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயரிடும் பொறுப்பு இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு உள்ளது.

வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன் பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் ஆகிய பதிமூன்று நாடுகள் இணைந்து புயலுக்கான பெயர் பட்டியலை உருவாக்குகின்றன. ஒவ்வொரு நாடும் பரிந்துரைத்த பெயர்களை வரிசைப்படி பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் மத்திய வங்க கடலில் உருவாகும் புயல் சின்னம் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் இது தமிழகத்தை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த புயல் சின்னம் புயலாக மாறும் நிலையில் அதற்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட தமிழ்ச் சொல்லான முரசு என பெயரிடப்படும்.

பண்டைக் காலத்தில் மன்னர்கள் தங்கள் செய்திகள் அறிவிப்புகள் மற்றும் போர்ப் பிரகடனங்களை மக்களுக்கு பரவலாக அறிவிக்க பயன்படுத்திய பாரம்பரிய தோல் இசைக்கருவியே முரசாகும்.

தகவல்களை பரப்பும் கருவியாக இருந்தாலும் இயற்கை இடர்பாடுகள் மற்றும் அவசர காலங்களில் மக்களுக்கு எச்சரிக்கை விடவும் முரசு பயன்படுத்தப்பட்டது. செங்கோல், கொடி போன்றவற்றுடன் மன்னரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக முரசும் விளங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
யானையைப்போல பூனைக்கும் ஞாபக சக்தி உண்டு!
புயல் | cyclone

இதுபோல புயல்களுக்கு பெயர் வைப்பது ஏன் என உலக வானிலை அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி ஒரு குறிப்பிட்ட புவியியல் இடத்தில் அல்லது பூமியின் எந்த ஒரு பகுதியிலும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகக்கூடும். அந்த புயல்களை வேறுபடுத்தி காண்பித்து குழப்பத்தை தவிர்க்கவும். பேரிடர் அபாய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்; பாதிப்பின் தீவிரத்தை குறைக்கவும்; ஒவ்வொரு புயலுக்கும் பெயர் சூட்டப்படுகிறது.

புயல்களுக்கு சிறிய மற்றும் அழைப்பதற்கு எளிமையாக உள்ள பெயர்கள் சூட்டப்படுகின்றன.

இது போல் பெயர் சூட்டுவது நூற்றுக்கணக்கான நிலையங்கள் கடலோர தளங்கள் மற்றும் கப்பல்களுக்கு விரைந்தும் திறம்படவும் புயல் குறித்த தகவல்களை அனுப்பு உதவுகிறது. தொடக்கத்தில் புயல்களுக்கு தன்னிச்சையாக பெயரிடப்பட்டது.

1900 ஆம் ஆண்டுகளின் மத்தியில் இருந்து புயல்களுக்கு பெண் பெயர்கள் வைக்கும் வழக்கத்தில் இருந்தது வானிலை விஞ்ஞானிகள் புயல்களுக்கு தன்னிச்சையாக பெயர் சூட்டி வந்த காலத்தில் தங்களுக்கு பிடிக்காத பெண்கள் அரசியல்வாதிகள் பெயர்களை சூட்டி வந்தார்கள்..

பின்னர் பெயர் வைப்பதில் மேலும் ஒழுங்கான ஆற்றல் மிக்க நடைமுறையை கொண்டிருப்பதற்கு பெயர் பட்டியலில் தயாரிக்க வானிலை ஆய்வாளர்கள் தீர்மானித்தனர். ஒரு முறை சூட்டப்படும் பெயர் மீண்டும் பயன்படுத்தப்படாது. புயல்களுக்கான பெயர்கள் அதிகபட்சம் எட்டு எழுத்துக்களை கொண்டிருக்கலாம். அந்த பெயர் எந்த ஒரு நாட்டிற்கும் எதிராகவும் எந்த ஒரு இனத்தை சேர்ந்தவர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விதமாகவும் இருக்கக் கூடாது. கடந்த 2020 ஆம் ஆண்டு புயல்களுக்கு சூட்ட பதிமூன்று நாடுகள் வழங்கிய 169 பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு நாடும் தலா பதிமூன்று பெயர்களை அளித்தன.

புயல்களுக்கு பெயர் சூட்டும் பழக்கத்தை தொடங்கியவர் யார் தெரியுமா குட்டீஸ்களா?

பிரிட்டனைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானி கிளெமென்ட்  ராக் என்பவர் முதலில் பிரிட்டனிலும் பின்னர் ஆஸ்திரேலியாவிலும் வானிலையை அளவிடுவதற்கான கருவிகளை தனிப்பட்ட முறையில் அமைத்து ஆய்வு செய்து வந்தார். முதலில் கிரேக்க எழுத்துக்களை கொண்ட பெயர்களையும் கிரேக்க புராணங்களில் காணப்படும் பெயர்களையும் புயல்களுக்கு சூட்ட அவர் முடிவு செய்தார். பின்னர் புயல்களின் பெயர்கள் வரிசையில் அவருக்கு பிடிக்காத ஆஸ்திரேலிய பிரதமரின் பெயர்களும் இடம் பிடித்தன.

புயல் | cyclone
புயல் | cycloneImage credit: Gemini AI

ராக் பணி ஓய்வு பெற்ற பிறகு இந்த பெயர் வைக்கும் முறையானது மேற்கு பசிபிக் மண்டலத்தில் இரண்டாம் உலகப் போரின் பிந்தைய காலம் வரை பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தப்படாமல் இருந்து பின் புத்துயிர் பெற்றது. கிழக்கு, மத்திய மேற்கு, மற்றும் ஆஸ்திரேலிய பகுதி அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் தெற்கு பசிபிக் படுகைகள் மற்றும் பசிபிக்கு சூறாவளி ஆகியவற்றில் பெரும் புயல்களுக்கு முறையான பெயரிடும் திட்டங்கள் மற்றும் பட்டியல்கள் பின்னர் பயன்படுத்தப்பட்டன.

பொதுவாக புயல்கள் 33 கடல் மைல்கள் 61 கிலோமீட்டர் மணிக்கு 38 மைல் மணி என்ற அளவிற்கு மேலான நீடித்த காற்றின் வேகத்தைக் கொண்டிருந்தால், அவை உருவாகும் படுகையை குறித்து முன்னரே தீர்மானித்து வைக்கப்பட்ட பெயர் பட்டியலில் இருந்து ஒரு பெயரானது புயல்களுக்கு சூட்டப்படுகிறது. அதே சமயம் வெப்ப மண்டல சூறாவளிகள் அவை பெயரிடுவதற்கு முன்னதாக தெற்கு அரைக்கோளத்தில் குறிப்பிட்ட காற்றின் வேகத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

உலக அளவில் ஆறு சிறப்பு பிராந்திய வானிலை மையங்கள் உள்ளன. அவற்றில் இந்திய வானிலை ஆய்வு மையமும் ஒன்று. வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல் மணிக்கு 62 கிலோமீட்டர் அல்லது அதற்கும் அதிகமான வேகத்தை எட்டும் போது அதற்கு பெயர் சூட்டும் பொறுப்பு இந்திய வானிலை ஆய்வு மையத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
நம்ம டெய்லி யூஸ் பண்ற வார்த்தைக்குப் பின்னாடி இவ்வளவு வரலாறா?
புயல் | cyclone

வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியை ஒட்டி உள்ள பதின்மூன்று நாடுகளுக்கு புயல் குறித்த ஆலோசனைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்குகிறது. வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது அகர வரிசைப்படி உள்ள நாடுகள் அளிக்கும் பெயர்களுக்கு ஏற்ப பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

அவை பாலினம் அரசியல் மத நம்பிக்கைகள் பண்பாடுகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இதுவரை உருவான பயல்களுக்கு பியார், பாஸ், ஃபர்னூஸ் நிஷா, ஜல், தானே நீலம், மடி, ரோனு, கியான்ட், நடா, வர்தா, ஒக்கி, கஜா, நிவர், புரேவி, மாண்டஸ், மிக்ஜாம், அசானி, சித்ரங் என்று பல பல பெயர்கள் புயல்களுக்கு சூட்டப்பட்டுள்ளது.  இப்பொழுது புதிதாக உருவாகியுள்ள புயலுக்கு முரசு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

குட்டீஸ்களா புயலை பற்றியும் புயலுக்கு பெயர் வைப்பது பற்றியும் தெரிந்து கொண்டீர்கள் தானே! புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட்டால் மழையில் நனைந்து விளையாடி காய்ச்சல், இருமல், சளி என்று வந்து சிரமப்படக் கூடாது இல்லையா? பள்ளியில் நடத்திய பாடங்களை படியுங்கள்; அறிவைப் பெருக்கும் புத்தகங்களை படியுங்கள்;விடுமுறையை வீணாக்காமல் பாடம் படித்து தெரியாததை நன்றாக மனப் பாடம் செய்ய கிடைத்த விடுமுறை என நினைத்து படிப்பீர்கள் தானே குட்டீஸ்களா!

logo
Kalki Online
kalkionline.com