வாமன அவதாரம் முதல் புல்லட் ப்ரூஃப் குடை வரை! குடைகள் பற்றிய அரிய உண்மைகள்!

குடையின் தோற்றம், வரலாற்றில் அதன் முக்கியத்துவம், மற்றும் உலகின் மிகப்பெரிய குடைகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
குடைகள்  | Boy with umbrella
குடைகள் | Boy with umbrellaImage credit: Gemini AI
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on: 

மழை காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மழையென்றாலே முதலில் நம் ஞாபகத்திற்கு வருவது குடை. குடை தான் நமக்கு அடை மழை பெய்தாலும் அக்னி நட்சத்திர நாட்களில் வெயில் கொளித்தினாலும், கை கொடுக்கும் தெய்வம். மழையில் குடை பிடித்து வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு நடக்கும் சுகமே தனிதான். குடையை 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே சீனாவிலும் எகிப்திலும் கண்டு பிடித்ததாக சொல்கிறார்கள். ஆனால் நான் நினைக்கிறன்  இவர்களுக்கு முன்னாடியே இந்தியாவில் அதாவது பாரதத்தில் குடை இருந்தது. வாமன அவதாரத்தில் மகா விஷ்ணு குடையை பிடித்து சிறுவனாக தோன்றினார் என்று சொல்கிறது புராணம்.

மேற்கத்திய வரலாறு படி குடைகள் பாராசோல்கள்  என்று அழைக்கப்பட்டனவாம். அப்போது குடையின் வேலை சூரிய ஒளியிலிருந்து காப்பாற்ற மட்டுமே இருந்ததாம். umbra என்றால் லத்தீனில் நிழல் என்ற அர்த்தம். அதனாலேயே குடைக்கு அம்பரெல்லா என்ற பெயர் ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது. 

1852 ஆம் ஆண்டு சாமுவேல் பாக்ஸ் என்பவர் எக்கினால் ஆனா ரிப்ஸ் உடன் கூடிய மடக்கும் குடைகளை உருவாக்கினார். 

1800-களில் இங்கிலாந்தில், அலங்காரக் குடைகளின்  கைப்பிடிகளில் சில சமயங்களில் புட்டிகள் அல்லது கத்திகளை வைப்பதற்கான இரகசிய அறைகளை மறைத்து வைத்திருந்தனர். குழந்தைகளை குதூகலபடுத்த நிறம் மாறும் குடைகள் வந்தன. இப்போது வரை உலகில் மிகவும் பிரபலமான கார்ட்டூன்ஸ் குடை போப்பின்ஸ் குடையாகும். இது ஒரு கற்பனை குடை. தோற்றம் மற்றும் பயன் அடிப்படையில் குடைகளை பிரித்துள்ளனர். அவை என்னவென்று பாப்போம்.   

இதையும் படியுங்கள்:
நம்ம டெய்லி யூஸ் பண்ற வார்த்தைக்குப் பின்னாடி இவ்வளவு வரலாறா?
குடைகள்  | Boy with umbrella

2018 ஆம் ஆண்டு அபுதாபியில் உள்ள கலீஃபா எம்பவர்மென்ட் புரோகிராம் (Aqdar) மூலம் உருவாக்கப்பட்ட குடையே உலகின் மிகப்பெரிய ஒற்றைக் குடையாகும். இது 24.5 மீட்டர் (80 அடி 4.56 அங்குலம்) விட்டம் மற்றும் 15.22 மீட்டர் உயரம் கொண்டது. இது கின்னஸ் சாதனை படைத்தது. 

2015 இல் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உருவாக்கப்பட்டது.    ஒரு ராட்சஷ குடை. இதன் உயரம் 14.4 மீட்டர் மற்றும் விட்டம் 23 மீட்டர் ஆகும். இது சுமார் 5.7 டன் எடை கொண்டது மற்றும் ஒரே நேரத்தில் 800 பேருக்கு நிழல் தரும் வசதி கொண்டது.  

மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் புனித நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவதால், அங்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உலகின் மிகப்பெரிய குடைக் கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவின் மதீனா நகரில் உள்ள அல்-மஸ்ஜித் அன்-நபவி மசூதியின் முற்றத்தில் 250 பிரம்மாண்ட குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மதீனா குடைகள் திறந்திருக்கும் போது ஒவ்வொன்றும் 6,700 சதுர அடி பரப்பளவை மூடி நிழல் தருகின்றன. இவை தானியங்கி முறையில் இயங்குவதோடு, உள்ளமைக்கப்பட்ட குளிர் காற்று வீசும் விசிறிகளையும் கொண்டுள்ளன.  

மக்காவில் உள்ள பிரதான மசூதியில் நிறுவப்பட்டுள்ள குடைகள் ஒவ்வொன்றும் 53×53 மீட்டர் பரப்பளவை (சுமார் 2,400 சதுர மீட்டர்) மறைக்கும் திறன் கொண்டவை. இவை உலகிலேயே மிகப்பெரிய மடிப்பு குடைக் கட்டமைப்புகளாகக் கருதப்படுகின்றன  

குடைகள் | Boy with umbrella
குடைகள் | Boy with umbrellaImage credit: Gemini AI

கோல்ஃப் குடைகள் (Golf Umbrellas): விளையாட்டு வீரர்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்படும் இக்குடைகள் 62 அங்குலம் முதல் 72 அங்குலம் வரை விட்டம் கொண்டவை. உதாரணமாக, G4Free 72-Inch Golf Umbrella போன்ற மாடல்கள் ஒரே நேரத்தில் 4 முதல் 6 நபர்கள் வரை மழையிலிருந்து பாதுகாக்கும் அளவுக்குப் பெரியவை.

இதையும் படியுங்கள்:
யானையைப்போல பூனைக்கும் ஞாபக சக்தி உண்டு!
குடைகள்  | Boy with umbrella

குடைகள் மழை வெயில் போன்றவற்றிலிருந்து காப்பது மட்டுமல்லாமல் தற்காப்பு சாதனமாகவும் உதவுகின்றன. மாடு முட்ட வந்தாலோ நாய்கள் கடிக்க வந்தாலோ குடையை விரித்து நம்மை ஓரளவு பாதுகாத்து கொள்ளலாம்.

மேற்கத்திய நாடுகளில் குடையின் கைப்பிடியில் கத்தி மற்றும் பிஸ்டல்களை மறைத்துவைத்து எடுத்துச்செல்கின்றனர். குண்டு துளைக்காத குடைகளும் இப்போது கிடைக்கின்றன. சமீபத்தில் பிரென்ச் ஜனாதிபதி Bullet Proof குடையை விரித்து உயிர் தப்பினார்.

எங்கள் வீட்டை பொறுத்தவரை நான் இளைஞனாக இருந்த போதும் என் தாத்தா குடையை பிரித்து தான் மழையில் நடப்பேன்.

ஒரு துளி சட்டை, பேண்டு நனையாது; கடைசியாக குடையை பற்றிய ஒரு விஷயம் இங்கிலாந்தில் ஒருவர் அணியும் உடைகளை வைத்து மட்டுமல்லாது அவர்கள் பிடித்து நடக்கும் குடையைவைத்தும் எடை போடுவார்கள். அதாவது குடையும் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக இருந்தது. 

logo
Kalki Online
kalkionline.com