புராண கதை: சிவனுக்கு விஷ்ணு புகட்டிய பாடம்!

சிவனிடம் வரம் பெற்று உலகையே அச்சுறுத்திய பத்மாசூரன் எப்படி பஸ்மாசூரன் ஆனான்? ஆணவம் பிடித்த அசுரனை விஷ்ணு அழித்தது எப்படி? சுவாரஸ்யமான புராண கதை..!
தமிழ் கதை | Padmasuran and Mohini
தமிழ் கதை | Padmasuran and Mohini Image credit: AI Image
Updated on

பத்மாசூரன் மிகப் பெரிய அரக்கன். தான் மட்டுமே உலகை ஆளவேண்டும் என நினைப்பவன். அவன் மனம் முழுக்கமுழுக்க அகம்பாவம். அவன் புத்திக்கூர்மை உடையவன். அவன் 64 கலைகளிலும் தேர்ச்சி பெற்றவன். அவன் அசுரன்களின் தலைவன். எப்படி உலகே ஆளுவது என யோசித்தான்.

தன்னை எதிர்க்கும் அனைத்துப் பேரையும் கொல்லும் சக்தி வேண்டும் என நினைத்தான். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று யோசித்தான். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான்.

சிவனை நினைத்து கடும்தவம் செய்வது என்று. என்ன வரம் கேட்பது என பல நாட்கள் யோசித்தான். தன் எதிரி தலையில் தனது கையை வைத்தால் அவன் பஸ்மம் ஆக வேண்டும் என்ற விபரீத ஆசை அவனுக்கு வந்தது.

எனவே, பத்மாசூரன், சிவனை நினைத்து பெரும்தவம் செய்தான். பக்தியோடு அவன் செய்த தவம் சிவனை ஈர்த்தது.

சிவன் அவன் முன்னே தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.

அசூரனோ, “தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் பஸ்மம் ஆகிவிட வேண்டும்.”

சிவன் எதுவும் யோசிக்காமல் “தந்தேன் வரம்” என்று சொன்னார்.

பத்மாசூரன் தனக்கு அளிக்கப்பட்ட வரம் உண்மையானதா என்று அறிய சிவனின் தலையில் கைவைக்க முயற்சி செய்தான். சிவன் அடித்து பிடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடினார். தப்பித்தார்.

அப்போது அங்கு விஷ்ணு பெண் உருவில் மோகினியாக வந்தார்.

தமிழ் கதை | Padmasuran and Mohini are dancing.
தமிழ் கதை | Padmasuran and Mohini are dancing.Image credit: AI Image

பத்மாசூரன் மோகினி அழகில் மெய்மறந்து போனார். பத்மாசூரனுக்கு மோகினியைத் திருமணம் செய்துகொள்ள ஆசை. அவன் மோகினியிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

மோகினி சம்மதம் தெரிவித்தார். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார். “அதாவது தான் ஆடும் நாட்டியத்தை அப்படியே திரும்ப ஆடவேண்டும்.”

“ச்சே… இவ்வளவுதானா? நான் நாட்டியத்திலும் சூரப்புலி. உங்களுக்கு ஈடுக்கொடுத்து அருமையாக ஆடுவேன்” என்றான்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: பழிவாங்கும் மந்திர வாள்!
தமிழ் கதை | Padmasuran and Mohini

நாட்டியம் துவங்கியது. மோகினி ஸ்திரமாகப் பக்குவமாக ஆட ஆரம்பித்தார்.

பத்மாசூரனும் அப்படியே ஆடினான். நாட்டியம் சூடு பிடித்தது. மோகினி வேகமாக, மிகத் துல்லியமாக ஆடினாள். இருவரும் நாட்டியத்தில் லயித்துப்போனர்கள்.

மோகினி இதுதான் தக்கசமயம் என்று முடிவெடுத்து, தனது கையை தலைமீது வைத்து, மற்றொரு கையால் அபய முத்திரை காண்பித்தார்.

சுய நினைவு இழந்த அசூரன் தனது தலைமீது கை வைக்க… அம்புட்டுதான். அசூரன் பஸ்மம் ஆனான். பத்மாசூரன் பஸ்மாசூரன் ஆனான்.

இது முழுக்கமுழுக்க விஷ்ணுவின் சாதுர்யத்தால் நடந்தது.

யாராக இருந்தாலும் வார்த்தைகளை வெளியிடும்போது பல கோணங்களில் சிந்தித்து பேசவேண்டும். உணர்ச்சி வசப்படக்கூடாது.

இதையும் படியுங்கள்:
தெனாலிராமன் கதை: படிக்காத புத்தகம்..! 
தமிழ் கதை | Padmasuran and Mohini

சிவன் தனது வாயினாலே துன்பத்தைச் சந்தித்தார். விஷ்ணு தமது புத்திக்கூர்மையால் பத்மாசூரனை பஸ்மாசூரன் ஆக்கினார். இது புராணக்கதை ஆனாலும் நல்ல பாடம் புகட்டுகிறது.

தீமை சிறிது நேரமே வாழும். உண்மை கடைசியில் வென்றே தீரும். மேலும், இந்த நிகழ்வின் மூலம், அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் எத்தகைய விபரீதங்களை உண்டாக்கும் என்பதையும், இக்கட்டான சூழலில் அறிவுப்பூர்வமாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளலலாம்.

logo
Kalki Online
kalkionline.com