எள்ளுருண்டை செய்த சேட்டை!

கதைப் பாடல்
வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கடித்து நாசம் செய்யும் ஒரு சுண்டெலி
எங்கள் வீட்டு எள்ளுருண்டை
Published on

எங்கிருந்தோ வந்து வீட்டுக்குள் புகுந்து விட்டது ஒரு சுண்டெலி 

அது கொடுத்தது எனக்கு ஒத்தை அல்ல, ரெட்டைத் தலைவலி  

பெயர் வைப்பான் என் மகன் பூச்சிக்கும் புழுவுக்கும்  

எள்ளுருண்டை என்று பெயரிட்டான் இந்த சுண்டெலிக்கும்

வாங்கினேன் சிறப்பு செருப்பு போன மாசம்   

அதை எள்ளுருண்டை கடித்து பண்ணி விட்டது நாசம்

தின்று விட்டு பையன் போட்டான் மசால் வடையை

நன்றி இல்லாமல் குதறி விட்டது என் அப்பாவின் குடையை  

நான் முதல் முதலாய்  கல்லூரிக்கு போட்ட கால் சட்டையை 

போட்டு விட்டது  பட்டக்ஸ் பாகத்தில் பெரிய ஓட்டையை

திருடி தின்றது என் வீட்டு அரிசி கோதுமை மற்றும் பருப்பை    

பேணி வைக்கிறது வீட்டிலேயே மூலைக்கு மூலை புழுக்கை 

கண்டதில்லை ஒரு சுண்டெலியிடம் இத்தனைக் கொழுப்பை

பாருங்கள் எள்ளுருண்டை செய்த வேலையை 

பிரித்து காட்டினாள் மனைவி அவள் பட்டு சேலையை

கடித்துக்குதறிய வேட்டியை பார்த்தபோது வந்தது கோபமாய்

அதை கட்ட முடியாது எந்நாளும் இனி உன்னால் கோமணமாய்

சொல்லி சிரித்தான் கைதட்டி என் மகன் பரிகாசமாய்

இதையும் படியுங்கள்:
பாசக்கார அக்கா
வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கடித்து நாசம் செய்யும் ஒரு சுண்டெலி

போன வாரம் எலி உருவத்தில் இருக்கும் இந்த வானரம்

சத்தமின்றி புகுந்தது என் குட்டி நூலகம் 

கிழித்து விட்டது ஒன்று விடாமல் புத்தகங்களை பல்லால் 

ஓவென்று அழாமல் இருக்க முடியவில்லை என்னால் 

எல்லாவற்றிற்கும் மேலாக செய்தானே ஒரு சேட்டை 

கொறித்துப் போட்டுவிட்டான் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை

எள்ளுருண்டை, 'சொந்தம் தான் இந்த வீடு எனக்கும்'

என்று சொல்லி ஓடுவான் குறுக்கும் நெடுக்கும் 

இதையும் படியுங்கள்:
சிறுகதை: புலி வந்த கதை
வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கடித்து நாசம் செய்யும் ஒரு சுண்டெலி

பிடித்து விடலாம் கூண்டு வைத்து ஆட்கொல்லி புலியை  

பிடித்து காட்டுங்கள் பார்க்கலாம் ஒரு சுண்டெலியை 

வைத்து பார்த்தேன் இங்கும் அங்கும் பொறியை 

பிடிக்கவே முடியல ஜெகஜ்ஜால ஜெரியை 

தப்பி விடும் அது எப்படியோ ஊசிமுனை காதுக்குள் புகுந்து 

வேறுவழின்றி கொல்ல முடிவு பண்ணேன் வைத்து எலி மருந்து 

'இத்துனூண்டு ஜீவனை கொன்றால் மீள முடியாது பாவத்தில் இருந்து' 

தடுத்து விட்டார்கள் மகனும் மனைவியும் கட்டிக்கொண்டு வரிந்து 

சொன்னா வேலைக்காரி 'எஜமான் டோன்ட் ஒர்ரி 

கொண்டு வரேன் ஒரு குட்டி டாமை, ஓடிடும் பாருங்க  உங்க ஜெர்ரி'

வந்துடுச்சு பட்டையை கிளப்ப குட்டிப் புலி 

என்ன செய்யும் பார்க்கலாம் சுண்டைக்காய் சுண்டெலி  

சொல்லி சிரித்தேன் எக்காளமாய் 

என் மகன் சொன்னான் இளக்காரமாய் 

மதிப்பிடுகிறாய் நீ எள்ளுருண்டையை குறைத்து 

என்ன ஆகிறது பார் கொஞ்சம் பொறுத்து 

என்னாச்சு தெரியுமா ரெண்டு வாரம் கழித்து 

பூனை குட்டி கட்டவில்லை சுண்டெலியை ஒழித்து

வசியம் செய்துவிட்டது சுண்டெலி பூனை குட்டியை வளைத்து  

எள்ளுருண்டை பின்னால் டாம் ஓடறான் துரத்துவது போல நடிச்சு  

விளையாடறாங்க ஒருத்தரை ஒருத்தர் செல்லமா கடிச்சு   

இருவருக்கிடையே நட்பு ஆச்சு

என் முயற்சிகளெல்லாம் வீணாப் போச்சு!

இதையும் படியுங்கள்:
வீண் பேச்சு விபரீதத்தில் முடியும்
வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கடித்து நாசம் செய்யும் ஒரு சுண்டெலி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com