

நம் அன்றாடப் பேச்சில் சாதாரணமாகப் பயன்படுத்தும் 'சும்மா' என்ற ஒரே ஒரு வார்த்தைக்குப் பின்னால் இத்தனை அர்த்தங்கள் புதைந்துள்ளனவா? குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் இந்தச் சொல்லின் ஆச்சரியமூட்டும் 15 பரிமாணங்களையும், நம் தமிழ் மொழியின் இணையற்ற தனித்துவத்தையும் இந்தக்கட்டுரை சுவாரஸ்யமாக விளக்குகிறது. இதைப் படித்தால் உங்களுக்கும் ஒரு 'சபாஷ்' போடத் தோன்றும்! தொடர்ந்து வாசித்து வியப்படையுங்கள்.
குட்டீஸ்களா..... அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான். இந்த 'சும்மா'. அது சரி 'சும்மா' என்றால் என்ன?
இது பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை தான் இந்த சும்மா!!
'சும்மா' என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் பதினைந்து அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? குட்டீஸ்.
வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை நாம் அடிக்கடி கூறும் இந்த 'சும்மா' என்னும் வார்த்தை எடுத்துக்காட்டும்.
1) கொஞ்சம் 'சும்மா' இருடா ?
(அமைதியாக / quiet ) என்கிற அர்த்தம்.
2 கொஞ்ச நேரம் 'சும்மா' இருந்து விட்டுப் போகலாமே (களைப்பாறிக் கொண்டு / Leisurely )
3) அவரைப் பற்றி 'சும்மா' சொல்லக் கூடாது! (அருமை, in fact )
4) இது என்ன 'சும்மா' கிடைக்கும் என நினைச்சியா? (இலவசமாக / Free of cost)
5) 'சும்மா' கதை அளக்காதே? (பொய் / Lie)
6) 'சும்மா' தான் இருக்கு நீ வேண்டுமானாலும் எடுத்துக்கொள்.
(உபயோகமற்று / without use )
7) 'சும்மா சும்மா' கிண்டல் பண்றான் (அடிக்கடி / very often
8) இவன் இப்படித்தான் 'சும்மா' சொல்லிக்கிட்டு இருப்பான்.(எப்போதும் / Always)
9) ஒன்றுமில்லை 'சும்மா' சொல்கிறேன். (தற்செயலாக / Just)
10) இந்தப் பெட்டியில் வேற எதுவும் இல்லை 'சும்மா' தான் இருக்கிறது. (காலி/ Empty)
11) சொன்னதையே 'சும்மா' சொல்லாதே. (மறுபடியும் / Repeat)
12) 'சும்மா' தான் இருக்கிறோம். சோம்பேறித்தனமாக (வெட்டியாக / Lazily)
13) ஒன்றுமில்லாமல் 'சும்மா' போகக்கூடாது (வெறுங்கையோடு / Bare)
14) அவன் 'சும்மா' ஏதாவது உளறுவான் (வெட்டியாக / Idle)
15) எல்லாமே 'சும்மா' தான் சொன்னேன். (விளையாட்டுக்கு / Just for fun)
குட்டீஸ் - நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த 'சும்மா' என்கிற ஒரு சொல் நாம் பயன்படுத்தும் இடத்தில் படியும் தொடரும் சொற்களின் படியும் 15 விதமான அர்த்தங்களை கொடுக்கிறது என்றால் அது 'சும்மா' இல்லை.
உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச செவிக்கு கருத்தை காட்டுகின்றன.
ஆனால், 'தமிழ் மொழி' இதயத்தாலே பேசி உணர வைக்கும் மொழியாகும்.
இவ்வளவு நேரம் படிச்சிட்டு, சும்மா போனா எப்படி?.... சும்மா ஒரு சபாஷ் போடுங்களேன்!
குட்டீஸ்களா.....
சும்மா என்ற வார்த்தை எப்படி இருந்தது? இதே மாதிரி சும்மா சும்மா பேசி சும்மா கலாய்க்கலாம்.
இந்தப் பதிவு தமிழ் மொழியின் ஆழமான சொற்களஞ்சியத்தை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் புரிந்து கொள்ள வைப்பதோடு, நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் வார்த்தைகளுக்குள் இருக்கும் அரிய பரிமாணங்களை உணர்ந்து மொழியின் மீது புதிய ஈர்ப்பைப் பெற உதவுகிறது. பேச்சு வழக்கில் புழங்கும் எளிய சொற்களுக்குள் புதைந்துள்ள இலக்கிய மற்றும் கலாச்சார ஆழத்தை வாசகர்கள் கண்டறிந்து, நம் தமிழ் மொழியின் இணையற்ற தனித்தன்மையை முழுமையாக உணர்ந்து பெருமிதம் கொள்ளச் செய்கிறது.