

நந்தகுமார் தனியார் பள்ளியில் 8வது படித்து வருகிறான். அவனுக்குப் படிப்பில் அவ்வளவு ஆர்வம் இல்லை. கால்பந்து விளையாடவும், சினிமா பார்ப்பதிலும்தான் நேரம் செலவு செய்தான்.
நந்தகுமாரின் வகுப்பு ஆசிரியர் முனுசாமி. முனுசாமி மிகவும் கண்டிப்பானவர். ஆனால், வகுப்பை சிறப்பாக நடத்துவார்.
அடிக்கடி கல்வியின் சிறப்பு பற்றி கூறுவார். கூடவே கல்வியால் முன்னேறியவர்களைப்பற்றி பல கதைகள் சொல்லுவார். இவை அனைத்தும் நந்தகுமாரின் மனதில் ஆழமாகப் பதிந்தன. 8வது வரை நந்தகுமாரின் சீட் கடைசி பெஞ்ச்தான்.
முனுசாமி ஆசரியர் சொல்வது எல்லாம் கேட்டு, தனது மனதை மாற்றிக்கொண்டான். இனி நன்கு படிக்கவேண்டும் என்று முடிவு செய்தான். கால்பந்து மற்றும் சினிமா குறைந்தது.
இப்போது 9ம் வகுப்பு. முதல் பெஞ்ச்சில் உட்கார்ந்துகொண்டு பாடங்களை நன்கு மனதில் ஏற்றிக்கொண்டு படித்தான். அவன் வகுப்பில் முதல் மாணவனாக வந்தான். மிகவும் சந்தோஷமாக இருந்தான்.
10ம் வகுப்பு பொதுத் தேர்தலில் பள்ளியில் முதல் மாணவனாக வந்தான்.
+2 சேர்ந்தான். இந்த வகுப்பிலும் நன்கு படித்தான். எல்லாவற்றுக்கும் காரணம் ஆசிரியர் முனுசாமி என்று நிச்சயமாக நம்பினான்.
டீச்சர் முனுசாமி திறமை உடைய ஆசிரியர். அவர் அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
+2 வில் மாநிலத்திலையே முதல் மாணவனாக வந்தான்.
அவனுக்கு மிகவும் சந்தோஷம். அவன் ஒரு ஸ்வீட் பாக்ஸ் ஆசிரியர் முனுசாமிக்குக் கொடுத்து வணங்கினான்.
முனுசாமி “மேற்கொண்டு என்ன செய்யப் போகிறாய்…?” எனக் கேட்டார்.
நந்தகுமார் “இன்னும் முடிவு செய்யவில்லை,” என்றான்.
முனுசாமி சொன்னார் :
“நீ நன்கு படிக்கிறாய்… நீ ஐ. ஏ. எஸ். பரீட்சை எமுதி கலெக்டர் ஆக வா… ஏதாவது லட்சியம் இருக்கவேண்டும். எனவே, நீ கலெக்டர் ஆவதை லட்சியமாக வைத்துக்கொள்…!” என்று புத்திமதி சொன்னார்.
நந்தகுமார் அந்த நொடியே கலெக்டர் ஆவது என முடிவு செய்தான்.
டிகிரி கணிதத்தில் 100க்கு 100.
துணை பாடங்களில் 96%.
டிகிரி படித்துக்கொண்டு இருக்கும்போதே பொது அறிவு புத்தகங்கள் படித்தான்.
ஐ. ஏ. எஸ். பரீட்சை. முதல் பரீட்சை. இந்தியாவில் அவன் ரேங்க் 66. பிறகு சில மாதங்களில் ஐ ஏ. எஸ். மெயின் பரீட்சை. மிகவும் சிறப்பாக எழுதினான். இந்தியாவில் 9வது ரேங்க்.'
அவன் ஆசிரியர் முனுசாமி சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டதுதான் அவனுக்கு உந்துச்சக்தி.
நேர் காணல். மிகவும் கடினமானக் கேள்விகளைக் கேட்டும், பயம் இல்லாமல் தனது மனதில் தோன்றிய பதிலைச் சொன்னான்.
நந்தகுமார் ஐ. ஏ. எஸ் ஆகிவிட்டார். முதல் போஸ்ட்டிங் சென்னைதான். தான் கலெக்டர் ஆன உடன் தனது பள்ளி நூற்றாண்டை கொண்டாடப் போகிற செய்தி கேட்டு மகிழ்ந்தார்.
பள்ளிக்குப் போன் செய்தார். எடுத்தது தலைமை ஆசிரியர் முனுசாமி. நந்தகுமார் குரலைக் கேட்டே உறுதி செய்து, “தான் அந்தப் பள்ளி மாணவன்தான். நான் விழாவிற்கு வருகிறேன்” என்று சொன்னார்.
பள்ளி விழா. அரசு வாகனத்தில் வந்த நந்தகுமார் முதலில் போய் தலைமை ஆசிரியர் முனுசாமியை சந்தித்தார்.
முனுசாமி ஆசிரியர் நந்தகுமாரை அடையாளம் கண்டுகொண்டார். நந்தகுமார் ஆசிரியர் முனுசாமி காலில் விழுந்து அவரது ஆசிர்வாதம் பெற்றார்.
நந்தகுமார் கலெக்டர் ஆனதற்குக் காரணம் நல்லாசிரியர் முனுசாமிதான் முழுக் காரணம்.
மாதா – பிதா -. குரு - தெய்வம்தான் ஒருவனை ஆளாக்குவது.