சிறுவர் சிறுகதை: உண்மை + நேர்மை!

ஒரு சிறிய நல்ல செயல் எப்படி ஒரு இளைஞரின் ஒட்டுமொத்த குடும்பத்தின் தலைவிதியையே மாற்றியது? என்பது பற்றிய சுவாரசியமான கதை
சிறுவர் கதை | Person with a disability and manager
சிறுவர் கதை | Person with a disability and managerAI Image
Updated on

குமார் உடல் ஊனமானவர். +2 முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து படிக்க முடியவில்லை. வறுமைதான் அதற்குக் காரணம். அப்பா இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அம்மா கீரை, காய்கறி விற்று குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். குமாருக்கு ஒரு தங்கை. அவள் பெயர் காமாட்சி. காமாட்சி 10 வது படித்து வருகிறார்.

குமார், ஊனமுற்றோர் உதவி தொகை ரூபாய் 1500 மாதாமாதம் வாங்கி வருகிறார். அதற்காக வங்கி கணக்கு ஆரம்பித்து டெபிட் கார்டு வைத்து இருந்தார்.

இன்று பணம் எடுக்க ஏ. டி. எம் சென்றார். உள்ளே நுழைந்து பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். கீழே ரூபாய் 2000 மற்றும் ரூபாய் 500 இரண்டும் இருந்தன. பணத்தை எடுத்து பையில் வைத்து தனது உதவி தொகையை எடுத்தார்.

தனது வேலையை முடித்து விட்டு, ஸ்கிரீனில் தெரிந்த வங்கிக்கு கால் செய்தார். வங்கி மேலாளர் பேசினார். அவரிடம் குமார் ரூபாய் 3000 பற்றி சொன்னார். அவர் குமாரிடம் வங்கி முகவரி சொன்னார். அருகேதான் இருந்தது.

வங்கி சென்ற குமார் மேலாளரைச் சந்தித்து ரூபாய் 3000 - யையும் கொடுத்தார்.

அதற்கு முன்பே ஏ. டி. எம்க்கு குழுவை அனுப்பி ஏ. டி. எம் சரியாக இருக்கிறதா என்று சோதனைக்கு உட்படுத்தினார். எல்லாம் சரியாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: நான்கு மகா கோழிகள்!
சிறுவர் கதை | Person with a disability and manager

அலுவலகத்தில் இன்று ரூபாய் 3000க்கு மேல் எடுத்தவர்கள் பற்றி கணினியில் பார்த்தார். சுமார் 18 பேர் இருந்தனர்.

இதில் ரூபாய் 3000 யாருடையது என்று கண்டு பிடிக்க முடியவில்லை.

எனவே, அந்தப் பணத்தை சஸ்பென்ஸ் அக்கெளண்டில் போட்டு விட்டார்.

பின்பு குமாரிடம்… “ரொம்ப நன்றி… உங்களைப்போல் நேர்மை உள்ள மனிதரைப் பார்ப்பது கஷ்டம்!”

“ரொம்ப நன்றி சார்…! நான் வரட்டுமா…?”

“ஒரு நிமிடம்... உங்கள் பேர் என்ன? என்ன படிச்சு இருக்கீங்க…?”

“சார்… குமார். +2 முடித்துவிட்டேன்…!”

சிறுவர் கதை | Person with a disability and manager
சிறுவர் கதை | Person with a disability and managerAI Image

“குமார் உங்களுக்கு வேலை கொடுத்தால் செய்வீர்களா..?”

“நான் உடல் ஊனமானவன்..!”

“தெரியும். பார்த்தேன்…!”

“என்ன வேலை சார்…?”

“ப்யூன் வேலை. கிளர்க்குகளுக்குத் தேவையான விஷயங்களை செய்து உதவி செய்ய வேண்டும். வெறும் நடைதான் வேலை…!”

“சரிங்க சார்…!”

“சரி... காலை 10 மணிக்கு வரவேண்டும். மாலை 5 மணிக்கு வேலை முடிந்துவிடும்…!”

“சார் ரொம்ப நன்றி…!”

“குமார் நீங்கள் நாளை முதல் வரலாம்… சம்பளம் ரூபாய் 9000தான்…!”

“சார்... ரொம்ப சந்தோஷம். நான் நல்லா வேலை செய்வேன்…!”

மறுநாள் முதல் குமார் வங்கியில் வேலை செய்யத் துவங்கினார். உடல் ஊனம் தெரியாத அளவுக்குப் படுபிஸியாக வேலை செய்தார். மேனேஜருக்கு திருப்தி.

குமார் குடும்பம் சற்று மூச்சுவிட முடிந்தது. அம்மாவின் காய்கறி வியாபாரத்தை நிறுத்தினார். காமாட்சியை நன்கு படிக்கச் சொன்னார்.

3 வருடங்கள் ஓடிவிட்டன. குமாருக்கு பதவி உயர்வு கிடைத்தது. வங்கி க்ளார்க் வேலை. சம்பளம் 18000 மேலே.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: ஆந்தைக் குகையில் இளவரசி!
சிறுவர் கதை | Person with a disability and manager

குமாருக்கு மிகச் சந்தோஷம். அம்மாவை நன்கு பார்த்துக்கொண்டார்.

காமாட்சியை முதுகலை படிக்கவைத்தார்.

காமாட்சியிடம் கட்டாயம் பி. எச். டி (முனைவர்) பட்டம் வாங்க ஊக்கம் அளித்தார்.

காமாட்சி உற்சாகத்துடன் முனைவர் பட்டம் பெறுவதற்காக படித்துக்கொண்டு இருந்தார்.

குமார் குடும்பத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டார்.

அதற்கு முக்கியக் காரணம், அவரின்

உண்மை + நேர்மை!

இந்தக் கதையை நீங்கள் வாசிப்பதன் மூலம், கடினமான சூழ்நிலைகளிலும் கைவிடாத நற்பண்புகளும், உறுதியான முயற்சியும் உங்களைச் சமூகத்தின் உச்சிக்கு அழைத்துச் செல்வதோடு, உங்களைச் சார்ந்தவர்களின் ஒட்டுமொத்த தலைமுறையையும் மாற்றிவிடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com