சிறுவர் சிறுகதை: முந்திக்கிட்டவன்!

மக்களிடம் இருந்து தப்பிக்க நோய் நாடகம் ஆடும் மன்னரின் சுவாரஸ்ய அரசியல் நகைச்சுவை நிறைந்த சிறுகதை
சிறுகதை  |  King comedy story
சிறுகதை | King comedy storyImage credit: Gemini AI

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

“நரசிம்ம ராஜா ஏன் பகலில் நீண்ட நேரம் தூங்குகிறார்?” ராணி அம்புலியை வைத்தியர் அருகம்புல் கேட்க.

“என்ன ராஜா தூங்குகிறாரா? அரண்மனையில் இன்னும் பத்து நிமிடத்தில் ‘மக்கள் கேள்வி நேரம்’ வந்துடும். ராஜாவை எழுப்பணும். மக்கள் கூட்டங்கூட்டமாய் வந்திருக்கிறார்கள். சீக்கிரம் எழுப்புங்க.”

“நீங்க எழுப்புங்க...” ராணி மறுத்தாள்.

“நானா?” வியப்பாய் கேட்டார்.

“நீங்கதானே அவர் நண்பர். நீங்க எழுப்பினால் கோபப்பட மாட்டார். தவிர என முகத்தில் விழித்தால் அந்த நாளே வேஸ்ட்டாயிடுமாம்.”

“அப்படியா? ரொம்ப வெள்ளேந்தியா இருக்கீங்களே! சிலருக்கு அப்படி ஒரு எஃபெக்ட். சரி நானே எழுப்பறேன்”..

வைத்தியர் “ராஜா ராஜா” என்று கூப்பிட, “இன்னும் மெல்லக்கூப்பிடுங்க. காதை கிழிக்குது” ராணி அம்புலி சொல்ல

“அப்படியா?” அருகம்புல் கேட்க,

“சத்தமா கூப்பிடுய்யா என் பிஸ்கோத்து.” ராணி திட்டினாள்

“முடியாது. இதற்கு மேல் என்னால் கத்த முடியாது. வயத்திலே கட்டி, சைனஸ் ப்ராப்ளம் அட்டேச்ட் வித் ஜலதோஷம்.”

“இவ்வளவு ப்ராப்ளம் உடலிலே வைச்சிக்கிட்டு அரண்மனை வைத்தியரா தொழில் பண்றீங்க. ‘மக்கள் வைத்தியர்’ என்று டைட்டில் வேற ராஜாவை ஏமாத்தி வாங்கிட்டீங்க.”

“எல்லாம் பரஸ்பர உதவிதான். அந்தப்புற அழகினு உங்களை ராஜா செல்லமா அழைக்கிறார். அதென்ன உண்மையா?”

“இப்ப மட்டும் சத்தமா பேசு. ராஜா உன் சத்தத்திலே எழுந்துட்டார் பாரு.” “ராஜாவுக்கு வெற்றி” என்று வைத்தியர் சொல்ல, “நீங்களும் குட்மார்னிங் சொல்றது போல் வெற்றி வெற்றினு பார்க்கும்போதெல்லாம் சொல்றீங்க.

போருக்கே அவர் போனதில்லே. அதனால் டிவியில் தினம் மூனு மணி நேரம் மஹாபாரதத்தை பாக்கறார். வீரம் தானில்லை.”

“அது பிறவிக்குணம். ஆனா தியேட்டரில் முதல் நாள்... முதல் ஷோ பார்க்க டிக்கெட் எடுக்க கும்பலில் முந்தியடிச்சு டிக்கெட் வாங்கும்போது கொஞ்சம் வீரம் வெளிப்படுது”

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: அறிவியலும் ஆன்மீகமும்!
சிறுகதை  |  King comedy story

“நண்பரே ராணியோடு சேர்ந்து என்னைக் கிண்டல் பண்ணுகிறீரா. பரவாயில்லை. நான் நிக்கவோ நடக்கவோ” என்று கேட்க, “செல்லில் மஹாபாரதம் பாத்துட்டு வருது” என்றார் வைத்தியர்.

“மன்னா ப்ரஷ் ஆயிட்டு வாங்க... அரண்மனையில் கேள்வி நேரம்.”

“நான் வரலை. சிக் லீவுனு சொல்லிடுங்க. நீங்க சொன்னா நம்புவாங்க.”

“எல்லோரும் கேள்விக்கணைகளை வைச்சுக்கிட்டுத் தயாரா இருக்காங்க...”

“அதனால்தான் வரலைனு சொல்றேன். இன்று ஒரு நாள் மட்டும் லீவு பளீஸ்...” ராஜா கெஞ்ச,

“உன்னைப் பார்க்கவும் பாவமாயிருக்கு. சரி... நீங்க சிக் லீவுனு சொல்லிடறேன்.”

“இந்தா பிடி ஆயிரம் வராகன்.”

“லஞ்சமா? நான் கையில் வாங்கறதில்லை. எதிர்த்த கசாப்பு கடையில் ஒரு பொட்டலமாக்கி கொடுத்துடுங்க.. அவர் கருவாடோட கருவாடா வைத்திருந்து. இரவில் தந்துடுவார்.”

“நீரே இப்படியிருந்தா மற்றவர்கள் எப்படி இருப்பாங்க? வெட்கமாயில்லே உனக்கு?”

சிறுகதை  |  King comedy story
சிறுகதை | King comedy storyImage credit: Gemini AI

“நீங்க மட்டும் ஒழுங்கா? சூதாட்டத்தில்தானே ராணியை ஜெயித்தீங்க? இன்றுவரை ராணி உங்களோட லிவிங் டு கேதர்தானே.”

“ராஜாக்களுக்கென்று தனி ரூல்ஸ் இருக்கு. நம்பலைனா டிவியில் மஹாபாரதத்தைப் பார்”

“எதற்கெடுத்தாலும் மஹாபாரதத்தைப் பார்னு சொல்றீங்க. நீ்ங்கதான் அதன் அம்பாஸிடரோ?”

“இல்லை என்னிடம் இருப்பது டயோட்டோ...”

“அறிவு. ராஜா உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?”

“மன்னா நீங்க ஆறாவதுவரை படிச்சிருக்கீங்களா? பரவாயில்லையே...”

“எங்க பரம்பரையிலேயே ஹைஸ்கூல்வரை படிச்சவன் நான்தான்.”

“சரி. பொழுது போகவில்லை. நான் கேட்பதற்குப் பதில் சொல்கிறீரா?”

“என்னிடமே டெஸ்டா? கேள்விகளை நீங்க கேட்கறீரா இல்லை நான் கேட்கட்டுமா. நானே கேட்கிறேன் எனக்கு கேட்கத்தான் தெரியும்”

“வறுமையின் நிறமென்ன?”

“சிகப்பு”

“பெண்ணிற்கு வேண்டியது?”

“ஷாம்ப்புவும், லிப்ஸ்டிக்கும்...”

“இதெல்லாம் சினிமா சம்பந்தப்பட்டது. வேற மாதிரி கேட்கிறேன். இன்றைய தங்கம் விலை என்ன?”

“இரு டிவியைப் பார்த்துச் சொல்றேன்.”

“அப்படின்னா நாட்டில் எவனும் கேள்வி கேட்கமுடியாது.”

“ஏன். அதான் அட்வைஸுக்கும், சந்தேகத்திற்கும் பதில் தர தனித்தனி ஆப்புகள் இருக்கே.”

“சரி... கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி அரண்மனையில் ‘மக்கள் கேள்வி நேரம்’ மக்கள் ஆவலுடன் கேள்விகளோடு காத்திருக்கிறார்கள்னு சொன்னே. நான்கூட சிக் லீவு சொன்னேனே...”

“சேதியை மெஸேஜ் பண்ணிட்டேன். அதோடு உங்களுக்கு டெங்கு காய்ச்சல். அரண்மணைக்கு வரத் துடிக்கறார். நான் மன்னருக்கு வைத்தியம் பார்க்கிறேன் நானும் சிக் லீவு. மீட்டிங் கேன்சல். உங்கள் கேள்விகளை அந்த புகார் பெட்டியில் போடுங்கள். பதில் வரும்னு.. எப்படி?”

“புகாரைப் போட்டுட்டு போனாங்களா?”

“இருங்க என் அடிமையை... அதாவது உதவியாளரைக் கேட்கிறேன் என்று செல்லில் தொடர்புகொள்ள வந்திருந்த ஜனங்கள் புகார் பெட்டியைக் காணவில்லை என்று புகார் கொடுத்தாங்களாம்.”

“எப்படி திருட்டு போச்சு? எடுத்தவன் கை, கால் விளங்காமல் நாக்கு தள்ளி சாவான்” என்று மன்னர் சபிக்க “அப்படியெல்லாம் சபிக்காதீங்க. எடுத்தவனுக்கு ஏழையான குடும்பம் இருக்கலாம். நாலு மாசமா சம்பளம் வராதிருக்கலாம். பால், மளிகை மற்றும் சில்லறை கடன்கள் இருக்கலாம். அவன் பெரிய இடத்தில் கான்டாக்ட் உள்ளவனாயிருக்கலாம்...”

“சரி சரி எவன் எடுத்தான்னு தெரிஞ்சுபோச்சு. அவ்வளவு வறுமையா? நான்தான் பக்கத்து நாட்டோட பேசி ஒரு ஆறு மாசம் வரை சாப்பாடு அனுப்ப கேட்டிருந்தேனே. சப்ளை அனுப்பலையா...?”

“மட மன்னா! ஒன்பது மாதம் சப்ளை பண்ணிட்டாங்க. பணம் வரலைனு சப்ளையை நிறுத்திட்டா்ங்க.”

“இருந்தா பணம் தரமாட்டேனா? ஏனிப்படி கஞ்சப்பயலா இருக்கான் பக்கத்து நாட்டு மன்னன். எனக்கு ஒரு ஐடியா தோனுது. ராவோடு ராவா...”

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: மூங்கில் வெட்டுபவரும் நிலவு இளவரசியும்!
சிறுகதை  |  King comedy story

“தண்ணியடிக்கலாம்னு ஐடியாவா?”

“குடிகாரப்பயலே நான் சொன்னது பக்கத்து நாட்டு மடப்பள்ளியைக் கொள்ளையடிச்சால் என்ன?”

“திருட்டு சாப்பாடு ஒட்டாது மன்னா. அவர்கள் மடப்பள்ளியில் சிசி டிவி. கேமரா வைச்சிருக்காங்களாம். யாரு திருடன்னு கண்டுபிடிச்சால் செம உதை விழும்.”

“நாம மாறுவேடத்தில் போனால்?”

“மாட்டினால் மாறுவேடத்திற்குனு தனியா உதைப்பாங்க.”

“இப்ப என்ன செய்யறது?”

“ஒன்று செய்யலாம்,. பக்கத்து நாட்டிற்குப் போய் வேலை செஞ்சு நேர்மையா சம்பாதிக்கலாம்”

“அவனுக்கு அடிமையா வேலை பாக்கணுமா? முடியாது.”

“வேறு ஒரே ஒரு வழியிருக்கு. அவனை சூதாட்டத்தில் தோற்கடிக்கலாம்.”

“இதுவும் மஹாபாரதம்தான். எதை வைச்சு விளையாடுவோம்”

“ராணியைத்தான்”

“எதிராளி மன்னன் வேனும்னே 1000 முறை தோற்பான்”

“பி்ன்னர் என்ன செய்யலாம்?”

“நம்ம நாட்டை அடகு வைப்போம்.”

“எதற்கு?”

தினம் மூனு வேளை புல் மீல்ஸ். ரெண்டு வேளை காப்பி. ராத்திரிக்கு குவாட்டர் பத்து வருடத்திற்கு நம் நாட்டு ஜனங்களுக்கு.”

“அற்புதம். பத்து வருடத்தில் என்ன வேணா நடக்கலாம் நம் ஜனங்களுக்குச் சொல்லிடலாம் ஓவரா தின்னு அந்த நாட்டை வறுமையில் தள்ளிடனும்”

என்று சொல்ல, ஒற்றன் ஒருவன் வந்து “மன்னருக்கு வெற்றி வரட்டும்” என்றான்.

“என்ன விஷயம் ஒற்றனே?””

“பக்கத்து நாட்டு ராஜா தங்களிடம் அவருடைய நாட்டை அடகு வைக்க வரலாமானு கேட்கிறார்” என்று சொல்ல, ராஜாவும் வைத்தியரும ஒருவரை ஒருவர் பார்த்து, “முந்திக்கிட்டான்” என்று சொல்லி, பின் கடகடவென சிரித்தனர்.

logo
Kalki Online
kalkionline.com