சிறுவர் சிறுகதை: வரிக்குதிரைக்கு வரிகள் வந்த கதை!

ஒற்றுமையே பலம் என்பதை நிரூபிக்கும் சிறுவர் சிறுகதை
சிறுகதை | Animals
சிறுகதை | AnimalsImage credit: Gemini AI
எஸ்.மாரிமுத்து

கடந்த 15 ஆண்டுகளாக நானும் எனது மனைவி எம். வந்தா. நிறைய இதழ்களில் கதை, கட்டுரை, ஜோக்ஸ், ஆன்மீகம், சமையல் பற்றி எழுதி உள்ளோம். தற்போது கல்கி ஆன்லைனிலும் வருகிறது. கல்கிக்கு நன்றிகள்.

Updated on: 

ஒரு மிகப்பெரிய காடு இருந்துச்சு.

அந்த காட்டுல மிகப்பெரிய ஒரு கிணறு இருந்துச்சு. அந்த கிணத்துல எப்பவும் சுவையான நல்ல தண்ணீர் குடிக்க கிடைக்கும். அதனால எல்லா காட்டு மிருகங்களும், அங்கு வந்து தண்ணி குடிக்கும்.

அதனாலேயே அந்த கிணறை பொதுக்கிணறு என அறிவிச்சிருந்தாங்க.

இந்த காட்டுல வாழ்ற எல்லாம் மிருகம் அப்படி இருக்கும் போதுதான், வேறொரு காட்டில் இருந்து ஒரு மிகப்பெரிய ராட்சத குரங்கு அங்க வந்துச்சு.

புது ராட்சத குரங்கை பார்த்து எல்லா மிருகங்களும் பயப்பட்டது.

குட்டி குட்டி குரங்குகள் கூட புது ராட்சத குரங்கைப் பார்த்து பேசக்கூட செய்யாம ஓடி ஒளிஞ்சிடுச்சு.

குரங்குகேளே இப்படி பயப்படும்போது, மத்த மிருகங்களை பற்றி சொல்ல தேவையில்லை.

அவைகளும் ஓடி ஒளிய ஆரம்பிச்சுச்சு.

இப்படி இருக்கும்போது இந்த ராட்சத குரங்கு எல்லா மிருகங்களும் தண்ணீர் குடிக்கிற பெரிய கிணத்த பத்தி தெரிஞ்சுகிடுச்சு.

அங்க போன ராட்சத குரங்கு, அங்க இருக்குற தண்ணிய பிடிச்சு குடிச்சு பார்த்துச்சு. தன்னோட வாழ்நாளில் அழுக்கு தண்ணிய மட்டுமே குடிச்சு வாழ்ந்த ராட்சச குரங்கு இப்படி ஒரு சுவையான தண்ணீர் கிடைக்கவும், ரொம்ப குஷி ஆயிடுச்சு.

உடனே இனிமே இந்த கிணறு எனக்குத்தான் சொந்தம் என்று சொல்ல ஆரம்பிச்சிடுச்சு.

இனிேமே இங்கு யாரும் தண்ணீர் குடிக்க வரக்கூடாது. இனிமே நான் வச்சது தான் சட்டம்.

அப்படின்னு ஒரு பெரிய கல்லை தூக்கி கிணத்து பக்கத்துல வச்சு அதுல தன்னோட பெயரை எழுதி வைத்துவிட்டது.

இனிமே யாரும் இதுல தண்ணி குடிக்க கூடாதுன்னு அந்த கல்லுல எழுதி வச்சுருச்சு.

இதை பார்த்த எல்லாம் மிருகங்களும் ரொம்ப பயந்து போய் தண்ணி குடிக்க கூட வராம இருக்க ஆரம்பித்துவிட்டது.

பஞ்ச காலம் ஆரம்பித்தது. அங்கிருந்த எல்லா ஆறும், எல்லா நீர் நிலைகளும் வற்ற ஆரம்பித்தது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: சுட்டி அணிலின் நற்செயல்!
சிறுகதை | Animals

அப்ப, பெரிய கிணத்தில மட்டும் தண்ணீர் இருந்தது.

மத்த மிருகங்களுக்கு தெரிஞ்சு எப்படியாச்சும் அந்த கிணத்துல  போய் தண்ணி குடிச்சிரணும். அப்படின்னு ஒரு நாள் முயற்சி செஞ்சு எல்லா விலங்குகளும் கூட்டமாக அங்க போனாங்க. எல்லாம் மிருகங்களும் தண்ணி குடிக்க வந்தத பார்த்த ராட்சத குரங்கு கோபப்பட்டு எல்லாரையும் புடிச்சு கிணத்துக்குள்ள தூக்கி போட்டுருச்சு.

இந்தக் கிணறு ரொம்ப ஆழமா இருந்ததால் யாரும் மேல ஏறி வர முடியல.

அப்போது வெள்ளை குதிரை ஒன்று அந்தப் பக்கமாக வந்துச்சு கிணத்துக்குள்ள இருந்த மிருகங்களோட சத்தம் அது காதில் கேட்டுச்சு.

உடனே அவங்கள காப்பாத்த நினைச்ச வெள்ளைக் குதிரை என்ன செய்யலாம்னு யோசிச்சு,  ராத்திரி ஆகுற வரைக்கும்  ஒரு பெரிய மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டு கிணத்தையே பார்த்துக்கிட்டு இருந்துச்சு.

சிறுகதை | Animals
சிறுகதை | AnimalsImage credit: Gemini AI

அந்த ராட்சத குரங்கு தூங்க போனவுடன் ஒரு பெரிய கயிறு எடுத்துட்டு வந்து தன்னோட உடம்பு முழுவதும் கட்டிக்கிட்டு, அதோட இன்னொரு முனையை கிணத்துக்குள் போட்டுச்சு வெள்ளை குதிரை.

அந்தக் கயிறை பிடிச்சு மிருகங்கள் எல்லாம்  ஒவ்வொன்னா சத்தம் போடாம வெளியில வந்து தப்பிச்சாங்க.

அப்பத்தான் தூக்கம் கலைஞ்சு எழுந்திருச்சு அந்த ராட்சத குரங்கு.

எல்லா மிருகங்களையும் வெள்ளை குதிரை காப்பாற்றினதை தெரிஞ்சுகிட்டு ராட்சத குரங்குக்கு கோவம் வந்துருச்சு.

வெள்ளைக் குதிரை கட்டியிருந்த கயித்துல தீய வெச்சிருச்சு. தீ உடனே வெள்ளை குதிரை மேல் பரவிருச்சு.

அதை பார்த்த எல்லாம் மிருகங்களும், வெள்ளை குதிரைக்கு நம்ம உதவி செய்யணும்னு வேகமா ஓடி வந்துச்சு.

தீயை  அணைக்க பார்த்தப்ப அதை தடுத்துச்சு ராட்சசகுரங்கு.

உடனே கோவமான எல்லா மிருகங்களும் அந்த ராட்சச குரங்க புடிச்சு, அடிச்சு கிணத்துக்குள்ள தூக்கி போட்டுருச்சு.

அதே நேரத்துல தீயால வெள்ளை குதிரையோட உடம்பும் முழுவதும் கருப்பு கோடுகள் உருவாச்சு.

அதை பார்த்து தனக்கு இப்படி ஆயிடுச்சுன்னு ரொம்ப வருத்தப்பட்டுச்சு வெள்ளை குதிரை.

அப்பத்தான் அங்க இருந்த எல்லா மிருகங்களும் சொல்லுச்சு. நீ இதுவரைக்கும் சாதாரண வெள்ளை குதிரையாத்தான் இருந்த இப்பதான் நீ வெற்றி திருமகனா மாறிட்ட.

இனிமே இந்த கோடுகள் தான் உனக்கு தனி அடையாளமாக தெரியும்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: மந்திரக் கண்ணாடி!
சிறுகதை | Animals

இந்த கோடுகளை வைத்துத்தான் நீ எவ்வளவு பெரிய வீரன்கறது இந்த உலகத்துக்கே தெரிய போகுது. அப்படின்னு சொல்லி வெள்ளை குதிரையோட மனச தேத்துச்சு.

அன்றிலிருந்து அந்த வெள்ளை குதிரை, வரிக் குதிரையாக மாறி, சாதாரண குதிரைகைளை விட அதிகம் பெரும் புகழோடு இருந்துச்சு.

குட்டீஸ்..... தெரிந்து கொண்டீர்களா? விலங்குகள் ஒற்றுமையாக இருந்தால் ஆபத்து காலத்தில் ஒன்று சேர்ந்து தப்பிக்கலாம். ஒற்றுமையே பலம் என்பதை தெரிந்து அனைவரிடமும் பழகி சண்டையில்லாமல் இருக்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com