

ஓர் ஊரில் நவதான்ய வியாபாரி வாழ்ந்தார். நெல் போன்ற தானியங்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பதே அவரது தொழில். ஒருநாள் வெளி ஊரிலிருந்து வந்த விவசாயி இவரிடம் நெல் ரகங்களைக் காட்டக் கோரினார். வியாபாரி தன் நெல்லை கூடையில் கொட்டி விவசாயிகளிடம் காட்டினார். அவரிடம் வியாபாரி ஒரு ரூபாய்க்கு எவ்வளவு நெல் தருவீர்கள் எனக்கேட்டார். அதற்கு நெல் வியாபாரி ஒரு ரூபாய்க்கு வாங்கினாலும் இந்த ரக நெல் மட்டும்தான் இருக்கும் நூறு ரூபாய்க்கு வாங்கினாலும் இதுதான் என்றார்.
இதைக்கேட்டு நம்பிய விவசாயி 50 ரூபாயைக்கொடுத்து நெல் கேட்டார். ஏற்கெனவே தான் மாதிரியாகக் காட்டிய நெல்லை அதே அளவு கூடையிலிருந்து கொட்டினார். இன்னும் நெல் கொண்டு தருவார் என்று எதிர்பார்த்த வெளியூர் வியாபாரி, "சீக்கிரம் நெல் தாருங்கள், நான் ஊருக்குச் செல்ல வேண்டும்" என்று கேட்டார்.
அதற்கு நெல் வியாபாரி, "நான் தான் அப்போதே சொன்னேனே. எவ்வளவு ரூபாய்க்கு வாங்கினாலும் இவ்வளவுதான்" என்று அவன் கூற, வியாபாரி இடைவிடாமல் கேட்க இருவரும் வாக்குவாதம் செய்ய தான் ஏமாற்றப்பட்டதை புரிந்து கொண்டான் விவசாயி.
வழக்கு தெனாலிராமன் இடம் சென்றது. இருவரையும் விசாரித்த தெனாலிராமன் ஒரே அறையில் இருவரையும் தங்கச் செய்தார்.
ஒருநாள் ஒருவர் சமைத்து மற்றவருக்குப் பரிமாற வேண்டும். மறுநாள் அடுத்தவர் சமைத்துப் பரிமாற வேண்டும். அதன்படி சிலநாட்கள் சென்றன. ஒருநாள் தெனாலிராமன் நெல் வாங்கிய விவசாயியை அழைத்து விவரம் கேட்க இருவரும் ஒவ்வொரு நாள் சமைத்து பாதி பாதி பகிர்ந்து சாப்பிடுகிறோம் என்றார். மறுநாள் யார் சமையல் என்று கேட்க விவசாயி தன்முறை என்றான். அதற்கு தெனாலிராமன் "நீங்கள் சமைத்த சோற்றில் ஒரு பருக்கையில் பாதி மட்டும் மூன்று வேளையும் நெல் வியாபாரிக்குக் கொடுங்கள்" என்றார்.
அதேபோல் விவசாயி செய்ய நெல் வியாபாரியால் பசி பொறுக்கமுடியவில்லை. கேபித்துக் கொண்டு தூங்கச் சென்றுவிட்டார். மூன்று வேளையும் இப்படிச் செய்ய நெல் வியாபாரி, "ஏன் இப்படிச் செய்கிறாய்..?" எனக் கேட்க, விவசாயி "தெனாலிராமன் தான் இப்படிச் செய்யச் சொன்னார்" என்றான். இதனால் கோபம் கொண்ட நெல் வியாபாரி, "பாதிப்பருக்கைளை மட்டும் போட்டால் எப்படிச் சாப்பிடுவது? எப்படி பசி ஆறுவது" என்று கேட்டு, "ஏன் அப்படிச் செய்யச் சொன்னீர்கள்" என்று தெனாலிராமனிடம் கோபத்தோடு கேட்டான்..
அதற்கு தெனாலிராமன், "நீர் ஒரு ரூபாய்க்கு கூடை நெல் வீதம் 50 ரூபாய்க்கு 50 கூடை நெல் விவசாயிக்குக் கொடும். அல்லது 50 ரூபாயைக் கொடுங்கள்" என்றார்.
அதற்கு வியாபாரி, "விவசாயி நான் சொன்னதற்குச் சம்மதித்து தான் நெல் வாங்கினார். நான் ஒன்றும் அவரை ஏமாற்றவில்லை" என்றான். மேலும் கூடுதல் நெல்லையும் தரமுடியாது. பணத்தையும் தரமுடியாது என்றான். அதைக்கேட்ட தெனாலிராமன் விவசாயியிடம், "நீங்கள் ஒருமாதத்திற்கு சமையல் செய்து மூன்று வேளையும் ஒரு பருக்கை மட்டும் இவருக்குக் கொடுங்கள்" என்று ஆணையிட்டார்.
அதைக்கேட்ட நெல் வியாபாரி, "என்னால் ஒருநாள் பசியையே பொறுக்க முடியல. நான் எப்படி ஒருவிதம் பொறுப்பேன். நான் இறந்து விடுவேன்" என்று அலறியவன் தன் தவறுக்காக வருந்தி விவசாயிடம் 50 ரூபாயைக் கொடுத்து விட்டார். தெனாலிராமனின் தீர்ப்பைத் பாராட்டி அவரது புத்திசாலித்தனத்தை அனைவரும் புகழ்ந்தார்கள்.