
சைக்கிள் ஒரு எளிமையான, சிக்கனமாக மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஒரு இணக்கமான நட்பை ஏற்படுத்தும் போக்குவரத்து முறையாகும். சைக்கிள் ஓட்டுதல் என்பது ஒரு பரபரப்பான பயணத்தில், திறமைக்கு ஒரு வழியாக இருப்பதுடன் சுற்றுச்சூழலுக்கும் சிறந்ததாக உள்ளது.
சைக்கிள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
19ஆம் நூற்றாண்டில் சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அவை பல்வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வேலை,பொழுதுபோக்கு, ராணுவம், விளையாட்டு போன்றவைகளுக்கு இதனை பயன்படுத்துகிறார்கள்.
2019 ஆம் ஆண்டு கணக்கின்படி உலகெங்கிலும் ஒரு பில்லியன் மிதிவண்டிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
'வெலோசி பீட்' என்று அழைக்கப்படும் முதல் மிதிவண்டி 1817 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் பரோன் கார்ல் வான் டிரைஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் பெடல்கள் இல்லாததால் சவாரி செய்பவர் தங்கள் கால்களால் தரையில் இருந்து உந்தித் தள்ளி அதை ஓட்டினார்.
பெடல்கள் கொண்ட முதல் மிதிவண்டி 1839ல் ஸ்காட்டிஷ் கறுப்பன் கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் இன்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
உலகின் மிகவும் பிரபலமான சைக்கிள் பந்தயம் டூர் டி பிரான்ஸ் முதன் முதலில் 1903 இல் நடத்தப்பட்டது. இது சுமார் 3500 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது.
ஒரு மிதி வண்டியில் இதுவரை எட்டப்பட்ட வேகமான வேகம் 334.6 கிலோமீட்டர் ஆகும். இது 1996 ல் புரூஸ் பர்ஸ்போர்டால் எட்டப்பட்டது.
தினமும் 3,64,000 மிதிவண்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அது ஒரு மணி நேரத்திற்கு 15,000 அல்லது ஒரு நிமிடத்திற்கு 253 அல்லது ஒரு நொடிக்கு நான்கு சைக்கிள்கள் என்ற வேதத்தில் தினமும் 46,670 சைக்கிள் விற்பனை ஆகின்றன. ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் ஒருவர் சைக்கிள் வாங்குகிறார்.
2016-ம் ஆண்டில் கோபன்ஹேகன் வரலாற்றில் முதல் முறையாக தனது தெருக்களில் கார்களை விட அதிகமான பைக்குகள் இருப்பதாக அறிவித்தது.
அதிக சைக்கிள் உபயோகிக்கும் நாடுகள்.
1. நெதர்லாந்து.
2.டென்மார்க்.
3.ஜெர்மனி.
4.ஸ்வீடன்.
5. நார்வே.
6. பின்லாந்து.
7ஜப்பான்
8.சுவிட்சர்லாந்து.
9.பெல்ஜியம்.
10.சீனா .
இந்த 10 நாடுகளிலும் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் போக்குவரத்து முறையாக ஊக்குவித்தது ஆர்வம் அதிகரித்து உள்ளது.
மிதிவண்டிகளை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு சீனா தான் முதலிடத்தில் உள்ளது.
இது அனைத்து மிதிவண்டிகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக உற்பத்தி செய்கிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் சைக்கிள்களின் பெரும் எண்ணிக்கையிலானவற்றை முதன்மையாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அமெரிக்காவில் விற்கப்படும் 86 சதவீதம் சீன தயாரிப்பில் உள்ள சைக்கிள்களே.
குட்டீஸ் -சைக்கிள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொண்டீர்களா!
இனி சைக்கிள் ஓட்டி பயணம் செய்து மகிழ்ச்சியாக இருங்கள்.