2023ம் ஆண்டில் Kalkionlineல் அதிக கவனம் பெற்ற கட்டுரைகள்!

இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்ப முழுமையான டிஜிட்டல் தளமாக உங்களை தேடி வரும் Kalkionline தங்களின் ஆதரவால் முன்னணி செய்தி/கட்டுரை தளமாக வளர்ந்து வருகிறது. 2023ல் பல மடங்கு வளர்ச்சி கண்ட Kalkionlineல் வெளியான டாப் 10 கட்டுரை பட்டியல் இதோ உங்கள் பார்வைக்கு.
2023 top 10 articles in kalkionline
2023 top 10 articles in kalkionline

10. பெண்கள் அவசியம் அணிய வேண்டிய 5 அணிகலன்கள் – பலன்கள்!

Women accessories
Women accessories

தோடு: பெண்கள் அணியும் முதல் அணிகலன் தோடுதான். குழந்தை பிறந்த ஒரு வயதிலிருந்து இந்த தோட்டினை அணிய தொடங்குவார்கள். காதில் தோடு அணியும்போது கண் மற்றும் காது நரம்புகள் இணைவதால் இது கண் பார்வையை நன்றாக இருக்க செய்கிறது. மற்றும் மூளையை நன்றாக செயல்பட செய்து ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது...

9. பக்கவாதம் ஏற்பட காரணமாக இருக்கும் 10 விஷயங்கள் என்ன? அவற்றைத் தவிர்ப்பது எப்படி.?

Paralysis
Paralysis

மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைப்பட்டு, மூளை இயங்குவது தடைபட்டால், மூளையின் செல் தசைகள் பாதிப்படையும். மூளையின் எந்தப் பகுதி பாதிக்கப் பட்டுள்ளதோ, அதைப் பொறுத்தே உடலின் பாகங்களில் குறைபாடுகள் ஏற்படும். உடலின் ஒரு பக்கம்,கை,கால், முகத்தின் ஒரு பகுதி எனப் பாதிப்பைப் பொறுத்து அந்தப் பகுதி செயல் இழக்கும். இதைப் பக்கவாதம் என்கிறார்கள்...

8. முருங்கை மரத்தில் கம்பளி பூச்சியா? என்ன செய்யலாம்?

Caterpillar affect Drumstick tree
Caterpillar affect Drumstick tree

முருங்கை இலை, பூ, பிஞ்சு, முருங்கைக்காய், விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் உடையவை. முருங்கைக்கீரை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். உடலுக்கு வலிமை தரும். இரத்த விருத்தியை அதிகரிக்கும். மேலும், கண் பார்வை கோளாறுகளை சரி செய்யும் தன்மை இதற்கு உண்டு. வைட்டமின் ஏ நிறைந்த உணவுப் பொருள் இது. இதன் இலையை காய வைத்து வெந்நீரில் போட்டு வடித்து தேன் சேர்த்து பருகலாம். இவை அனைவரும் அறிந்ததுதான்...

7. பாரதிராஜா தோல்வி பட ஹீரோ இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

Kaadhal Oviyam Hero Kannan
Kaadhal Oviyam Hero KannanTouring Talkies

'பதினாறு வயதினிலே' படம் தொடங்கி, சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், நிறம் மாறாத பூக்கள், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, நிழல்கள் என தொடர் வெற்றிப் படங்களைத் தந்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. திரை உலகுக்கு இவர் அறிமுகம் செய்த பல ஹீரோக்கள், ஹீரோயின்கள் இன்று வரை வெற்றிகரமாக வலம் வருகிறார்கள்...

6. மார்கழி மாதமும் மனம் கவரும் கோலங்களின் சிறப்பும்!

Simple margazhi Kolam with dots
Simple margazhi Kolam with dotshttps://www.virakesari.lk

கோலம் நம் இந்திய மண்ணின் கலாசாரத்தையும்  பாரம்பர்யங்களையும் பறைசாற்றுகின்றன. ஊர்கள், மதங்கள், மொழிகள், இனங்கள் என வேறாக இருந்தாலும் அனைவரையும் ரசிக்க வைக்கிறது அழகான வண்ணக் கோலங்கள் . பண்டிகைகள், விழாக்களின்போது தெருக்களில் மலரும் வண்ணக் கோலங்களை ரசித்து பாராட்டிச் செல்வோர் பலர் உண்டு...

5. புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் இவை தான்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

புற்றுநோய் விழிப்புணர்வு மாதிரி படம்
புற்றுநோய் விழிப்புணர்வு மாதிரி படம்

மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெங்குடல் புற்றுநோய் மற்றும் விந்துப்பை புற்றுநோய் ஆகியவை பெரும்பாலான நபர்களை தாக்க கூடிய புற்றுநோய் வகைகளாக உள்ளன...

4. நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம் – இதை அவசியம் படியுங்க!

அய்யாகண்ணு - பிச்சையம்மாள் தம்பதியினர்
அய்யாகண்ணு - பிச்சையம்மாள் தம்பதியினர்

வாழ்க்கையில் கணவன் தன் மனைவிக்கும், மனைவி தன் கணவனுக்கும் தக்க தருணத்தில் காட்டும் அன்பு மிகப்பெரிய கருணையாக மாறிவிடும். அந்தக் கருணை அந்த நேரத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும். அந்த நேரத்தில் இருவரில் யார் யாருக்கு உதவி செய்கிறார்களோ அவர்களுக்கு நிகர் அவரே...

3. வீட்டைக் கூட்டும் துடைப்பத்தில் இத்தனை விஷயங்களா?

Broom
Broom

வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்யும் துடைப்பத்தில் கூட சாஸ்திர, சம்பிரதாயங்கள் அடங்கியுள்ளன. வீட்டை பெருக்கும் துடைப்பம்தானே என்று சாதாரணமாக எண்ணி விட வேண்டாம். துடைப்பத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். லட்சுமி வாசம் செய்யும் 108 பொருட்களில் துடைப்பமும் ஒன்று...

2. நிலக்கடலை அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

Groundnut
GroundnutImg credit: Avantplex

ன்றாடம் நாம் உணவில் பயன்படுத்தும் பொருட்களில் முக்கியமானதாக உள்ளது நிலக்கடலை. வெல்லம் சேர்த்துத் செய்யப்படும் பர்பி உருண்டை முதல், சட்னி வரை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஸ்நாக்ஸ் உணவாகப் பயன்படுகிறது நிலக்கடலை. இதில் நிறைந்திருக்கும் சத்துகள் உடலுக்கு வலு தரும் என்று சொல்லப்படுகிறது...

1. இரவு நேரம் தோன்றும் கெண்டைக்கால் தசை பிடிப்பிற்கு என்ன காரணம்?

leg cramps
leg cramps

பொதுவாக, நம் உடல் தசைகள் தன்னிச்சையாக சுருங்கி ஓய்வெடுக்க முடியாதபோது தசைப்பிடிப்புகள் (cramps) ஏற்படுகின்றன. கிராமங்களில் இதை, ‘குரக்களி பிடித்துக் கொள்ளுதல்’ என்று சொல்வார்கள். தொடைகள், காலின் பின்புறப் பகுதி, கைகள், கால்கள், வயிறு, சில சமயம் விலா எலும்புக்கூடு போன்ற பகுதிகளில் தோன்றும்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com