புல்லட் ட்ரெயின் முதல் ஏசி வரை: விலங்குகளைப் பார்த்து மனிதன் செய்த 10 பிரம்மாண்ட கண்டுபிடிப்புகள்!

இயற்கையின் விலங்குகளிடமிருந்து மனிதன் கற்றுக்கொண்ட ஆச்சரியமூட்டும் தொழில்நுட்ப அதிசயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
விலங்குகள் | Animals and technology
விலங்குகள் | Animals and technologyImage credit: Gemini AI
Updated on
Kalki Strip
Kalki Strip

மனிதர்களின் பெரும்பாலான பிரச்னைகளை தீர்க்க விலங்குகள் காரணமாக உள்ளன. இதனாலேயே விஞ்ஞானிகளும் பொறியியற் வல்லுனர்களும் விலங்குகளை பற்றி ஆராய்ச்சி செய்தனர்‌. இதை பயோமிமிக்ரி என்று கூறுவார்கள். மருத்துவம், கட்டிடக்கலை மற்றும் ரோபோடிக் துறைகளில் விலங்கினங்கள் மூலம் பல விஷயங்கள் அறியப்பட்டுள்ளன. இப்பதிவில் மனிதனுக்கு தொழில்நுட்பத்தை வழங்கிய பத்து விலங்குகள் குறித்துக் காண்போம்‌.

1. மீன்கொத்தி:

போக்குவரத்துத் துறையில் மீன்கொத்தியால் பலவிதநல்ல விஷயங்கள் சாதிக்க முடிந்தன. ஜப்பானிய பொரியியற் வல்லுனர்கள் புல்லட் ட்ரெயினைக் கண்டுபிடித்த போது அவை குகைக்குள் நுழைந்து வெளியேறும் போது பலத்த சப்தம் ஏற்படுத்துவதைக் கண்டனர்‌. அவர்கள் மீன்கொத்தி எந்தவித சத்தமுமின்றி நீரில் செல்வதற்குக் காரணம் அதன் நீண்ட பெரிய அலகு தான் என்பதை உணர்ந்தனர். அதன்படியே புல்லட் ட்ரெயினின் முன்பக்கத்தை மீன்கொத்தி அலகு போன்று நீண்டு கூர்மையாக்க இது சத்தத்தைக் குறைந்த தோடு வேகத்தையும் அதிகப்படுத்தியதை உணர்ந்து மகிழ்ந்தனர்.

2. பல்லி:

பல்லிகள் எந்த வித சிரமமும் இன்றி சுவர்கள், கூரைகள் மற்றும் கண்ணாடிளில் கூட சகஜமாக செல்வதைக் கண்டனர்‌. அதன் பாதங்களில் உள்ள மில்லியன் மைக்ரோஸ்கோபிக் முடிகளே காரணம் என்பதைக் கண்டுபிடித்தனர்‌.

அந்த முடிகளின் பலத்தால் அவை எங்கும் சப்போர்ட் இல்லாமல் நடமாட முடிவதை அறிந்தனர்‌. இதை மருத்துவத்துறையில் எந்த வித ஜெல் போன்ற பசை மில்லாமல் பாண்டேஜுகளை ரோபோடிக்ஸ் மற்றும் உயரத்தில் ஏறுதல் போன்றவற்றிற்கு இந்த டெக்னிக்கை கண்டுபிடித்தனர்.

விலங்குகள் | Animals and technology
விலங்குகள் | Animals and technologyImage credit: Gemini AI

3. வௌவால்:

இந்த விலங்கினங்கள் echolocation யைப் பயன்படுத்தி இரவில் நடமாடுகின்றன. இவை பெரும் சப்தம் உண்டாக்கி அதை கேட்கும். விஞ்ஞானிகள் இந்த டெக்னிக் மூலம் பொருட்கள் இருக்கும் இடங்களை கண்டுபிடிக்க பயன்படுத்தினர்‌. இது நீர்மூழ்கி கப்பல் மற்றும் கப்பல் போன்ற தண்ணீருக்கு அடியில் செல்லக்கூடிய வாகனங்களின் மேம்பாட்டில் பயன்படுத்தினர். வௌவ்வால்கள் மூலம் பல வியக்கத்தக்க டெக்னிக் விஷயங்கள் மனிதர்களுக்கு பயனைத் தந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் புதிய வான்வழிப் புரட்சி: நகரங்களாக உருவெடுக்கும் விமான நிலையங்கள்!
விலங்குகள் | Animals and technology

4. சுறா மீன்கள் (shark):

இவற்றில் உடல் வழுவழுப்பாக இருக்கும். இதன் உடலில் மைக்ரோஸ்கேபிக் செதில்களால் ஆனது. இதை டென்டிகிள்ஸ் என்று கூறுவார்கள்‌. இதன்மூலம் இது இழுக்கப் போடுவதைத் தடுக்கமுடியும். இதை கப்பல் கோட்டிங் மற்றும் விமானப் பொருட்களில் பயன்படுத்தி அவை இழுக்கப்படுவதை தடுக்க மனிதர்கள் பயன்படுத்தினர். மேலும் இது பாக்டீரியாக்களை சேரவிடாமல் தடுக்கிறது‌. மேலும் இந்த தொழில்நுட்பத்தை மருத்துவத் துறையிலும் பயன்படுத்தினர்.

5. கரையான்:

கரையான் புற்றுகள் அதிக வெப்பத்தில் கூட சமச்சீரான வெப்பத்தை ஏற்படுத்துகின்றன‌‌. இந்த புற்றின் தொழில்நுட்பம் கட்டிட வல்லனர்களுக்கு ஏர்கண்டீஷன் துறையில் பயன்பட்டுள்ளது‌. கரையான் புற்றினால் தெழில்நுட்ப சாதனை சாத்தியமானது.

6. கூன்முதுகு திமிங்கிலம்:

இதற்குத் துடுப்பு போன்ற அமைப்புகள் கூனை உண்டாக்குகின்றன. இந்த துருப்புக்களை பயன்படுத்துவதன் மூலம் இது இழுக்கப்படுவது தடுக்கப்படுகிறது‌. இதனால் நன்கு திரும்ப முடியும்‌. இந்த நுட்பத்தை பொறியியற் வல்லுனர்கள் விமான இறக்கைகள் மற்றும் தொழிற்சாலை ஃபேன்களுக்குள் பயன்படுத்தினர்‌. இதன்மூலம் இயக்கம் சுலபமானது‌. விமான இறக்கைகளின் தொழில்நுட்பத்தின் காரணமே இந்த திமிங்கிலம் தான்.

7. ஆந்தை:

சத்தம் போடாமல் ஆகாயத்தில் பறக்கக் கூடியவை‌. இதன் பெரிய இறக்கைகள் காற்றின் சத்தத்தை அடக்குகின்றன. இந்த தொழில்நுட்பத்தை ஆகாய விமானம் மற்றும் ட்ரோன்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டெக்னிக் மூலம் சத்தம் குறைக்கப்பட்டுள்ளன. சத்தமில்லாமல் பறக்கும் தந்தையிடமிருந்து விமான சத்தம் குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சிறந்த வாழ்க்கை முறைக்கு வழிகாட்டும் 10 ஜப்பானிய நுட்பங்கள்!
விலங்குகள் | Animals and technology

8. பாக்ஸ் மீன்:

பெட்டி மீன் என்று அழைக்கப்படும் இந்த விலங்கினம் நீரில் மிகச் சுலபமாக நீந்தும். ஏரோடைனாமிக்ஸ் வாகனங்களில் இதன் தொழில்நுட்பம் மூலம் அதிக எரிபொருள் இல்லாமல் இயக்கம் சாத்தியமானது‌.

9. கடல் பஞ்சுகள்:

இதில் சிலிகான் நிறைந்துள்ளன. இந்த தொழில்நுட்பம் மூலம் சோலார் பானெல்கள், மைக்ரோசிப்ஸ் மற்றும் பாட்டெரிகளில் பயன்படுகின்றன.

10. குளவி:

குளவிகள் மரத்தில் குடைந்து தன் குஞ்சை அதில் இடுகின்றன. ட்ரில்லிங் தொழில் நுட்பத்தை மனிதர்களுக்குக் கற்றுத் தந்தது குளவி தான்.

மனிதர்களின் கண்டுபிடிப்புகளுக்கு விலங்கினங்களும் காரணமாவதை இப்பதிவில் அறிந்து கொண்டிருப்பீர்கள். இயற்கையின் படைப்புகளை உற்றுநோக்குவதன் மூலம் உங்கள் சிந்தனையை விரிவாக்கிக் கொண்டு, உலகளாவிய நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னணியில் உள்ள எளிய இயற்கை தத்துவங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com