நாசா மற்றும் இஸ்ரோ விண்கலங்களை வழிநடத்தும் 'அகத்தியர்' நட்சத்திரம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

கனோபஸ் எனப்படும் அகத்தியர் நட்சத்திரத்தின் வரலாறு, தமிழர்களின் வானியல் மரபு மற்றும் நாசா விண்கலங்களில் அதன் பயன்பாடு பற்றிய முழுமையான தகவல்கள்.
கனோபஸ் நட்சத்திரம் Canopus star
கனோபஸ் நட்சத்திரம் | Canopus starAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

வானில் இரண்டாவது அதிக பிரகாசம் தரும் கனோபஸ், இந்திய மரபில் அகத்தியர் நட்சத்திரமாக மதிக்கப்படுகிறது. சூரியனை விட 130 மடங்கு பெரிய இந்த சூப்பர் ஜெயன்ட், தெற்கு வானில் கடலோடிகளுக்கும் விண்கலங்களுக்கும் திசை காட்டும் வழிகாட்டி. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரை அடிவானத்திற்கு அருகில் தெளிவான இரவில் காணலாம்.

கனோபஸ் (Canopus) என்பது வானில் மிகவும் பிரகாசமாகத் தெரியும் இரண்டாவது நட்சத்திரம். முதல் இடத்தில் இருப்பது சிரியஸ் (Sirius). (சிரியஸ் என்பது சிவ அம்ச விண்மீனாகக் கூறப்படுகிறது.)

கனோபஸ் நட்சத்திரம்:

அறிவியல் பெயர்: Alpha Carinae

விண்மீன் கூட்டம்: கரீனா (Carina)

பூமியிலிருந்து தூரம்: சுமார் 310 ஒளி ஆண்டுகள்

நிறம்: மஞ்சள் கலந்த வெண்மை

வகை: மிகப் பெரிய ஒளிரும் நட்சத்திரம் (Supergiant)

இந்திய ஜோதிடம் மற்றும் வானியல் மரபில் கனோபஸ் நட்சத்திரம் அகத்தியர் நட்சத்திரம் அல்லது அகஸ்திய நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இது அகத்தியர் உடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

வானில் மிகுந்த ஒளியுடன் தெரியும் அரிய நட்சத்திரங்களில் ஒன்று.

சூரியனைவிட பல மடங்கு பெரியதும், அதிக ஒளி வெளிப்படுத்துவதுமான நட்சத்திரமாகும்.

தெற்கு வானின் முக்கிய வழிகாட்டி நட்சத்திரங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

அகத்தியர் தான் கனோபஸ் நட்சத்திரமாக ஒளிர்கிறார் என்று கூறப்படுகிறது.

ஸ்பேஸ் சயின்ஸில் இந்த நட்சத்திரத்தின் வயது 33 மில்லியன் ஆண்டுகள் எனவும், சூரியனை விட 130 மடங்கு பெரியது எனவும், சூரியனை விட 10 ஆயிரம் மடங்கு பிரகாசம் உள்ளதாகவும் கூறப்படுகிறதாம். இந்த நட்சத்திரம் 10000 ஆண்டுகட்கு முன்பு கன்னியாகுமாரி பகுதி வானில் காணப்பட்டது.

7500 ஆண்டுகட்கு முன்பு கர்நாடகா பகுதியிலும் - 6000- ல் விந்திய மலைப்பகுதியிலும், 5000 - ல் டெல்லி பகுதியிலும் பின்பு இமாலயப்பகுதியிலும் காணப்பட்டது.

இதையும் படியுங்கள்:
ஹகாகுரே (HAGAKURE): மரணத்தைக் கண்டு அஞ்சாமல் வாழ வழி!
கனோபஸ் நட்சத்திரம் Canopus star

அதன் பின்பு திரும்பவும் தெற்கு நோக்கி பயணிக்கிறது.

பாபிலோனியர், மெசபடோமியர் 6000 ஆண்டுகட்கு முன்பே இதை கணித்துள்ளனர்.

ஹிப்பாக்ரஸ் கி.மு 200 -ல் டாலமி - எரட்டோஸ்தனிஸ் போன்றோர் கி.மு 220 - ல் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

பழங்கால நூல்கள் இந்த நட்சத்திரம் பற்றி குறிப்பிடுகின்றன. வானியல் துறை விஞ்ஞானிகள் இதன் தன்மைகளை குறிப்பிட்டுள்ளனர்.

பல்வேறு நாடுகளில், பல்வேறு கால கட்டங்களில் கனோபஸ் பற்றி புனிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மரபில், அகத்திய நட்சத்திரத்தின் உதயம் நல்ல மழை, நீரின் தூய்மை, வளம் மற்றும் நன்மையின் அடையாளமாகக் கருதப்பட்டது. கடலோடிகளும் இந்த நட்சத்திரத்தை திசையறிய பயன்படுத்தியுள்ளனர்.

சரி. இதை எப்போது காணலாம்?

இந்தியாவின் தென்பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாட்டில், ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரை தெற்கு வானில், இரவு நேரங்களில் கனோபஸ் நட்சத்திரத்தைப் பார்க்கும் வாய்ப்பு அதிகம். இது அடிவானத்திற்கு அருகில் தோன்றுவதால், தெளிவான வானம் இருந்தால் மட்டுமே எளிதாகக் காண முடியும்.

கனோபஸ் நட்சத்திரம் | Canopus star
கனோபஸ் நட்சத்திரம் | Canopus starAI Image

வட அரைக்கோளத்தில் 37° வட அட்சரேகைக்கு மேலே வசிப்பவர்களால் இந்த நட்சத்திரத்தைக் காண்பது கடினம். ஆனால், தென்னிந்தியா போன்ற பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பகுதிகளில் இரவு வானில் இதனை மிகத் தெளிவாகக் காணலாம் என்று நம்பப்படுகிறது.

விண்வெளியில் உள்ள அனைத்து விண்மீன்களும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. வானியலாளர்களின் கணக்குப்படி, தற்போதைய நகர்வு வேகத்தின் அடிப்படையில், இன்னும் 3.1 மில்லியன் (31 லட்சம்) ஆண்டுகளுக்குப் பிறகு, கனோபஸ் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வரக்கூடும். அப்போது இதுவே இரவு வானில் 'சிரியஸ்' விண்மீனை விடவும் பன்மடங்கு பிரகாசமான முதல் விண்மீனாக மாறும்.

நவீன விண்வெளி அறிவியலில், நாசா (NASA) மற்றும் இஸ்ரோ (ISRO) போன்ற அமைப்புகள் அனுப்பும் விண்கலங்களில் "கனோபஸ் ஸ்டார் டிராக்கர்" (Canopus Star Tracker) என்ற விசேஷ கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

​காரணம்: இரவு வானில் மற்ற விண்மீன்களை விட இதன் ஒளியும் நிலையும் தனித்துவமாக இருப்பதால், விண்கலங்கள் விண்வெளியில் வழிதவறிப் போகாமல் தங்களின் சரியான பாதையைத் துல்லியமாகக் கணக்கிட இந்த நட்சத்திரத்தையே ஒப்பிட்டுப் பார்க்கின்றன.

இதையும் படியுங்கள்:
உலகை அதிர வைத்த சில உலகத் தலைவர்களின் படுகொலை சம்பவங்கள்...!
கனோபஸ் நட்சத்திரம் Canopus star

இலங்கை - கம்போடியா - சிங்கப்பூர் - மலேசியா பகுதிகளில் இந்த நட்சத்திரம் அகஸ்தியா என அழைக்கப்படுகிறது.

சீனா - ஆப்பிரிக்கா - அரபு நாடுகளில் தெய்வீக அம்சமாக குறிப்பிடப்படுகிறது. பாலினேசிய மொழியில் வலைங் - என அழைக்கப்படுகிறது.

கிரேக்க மாலுமியான 'கனோபஸ்' என்பவரின் நினைவாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. டிரோஜன் போரின் போது ஸ்பார்ட்டா நாட்டின் கப்பல் வழிகாட்டியாக இருந்த கனோபஸ், எகிப்தில் இறந்த பிறகு அவரது பெயரால் இந்நகரமும், இந்த விண்மீனும் அழைக்கப்படலாயின.

பண்டைய காலம் தொட்டே கடலில் பயணம் செய்யும் மாலுமிகளுக்கு திசை அறிய இந்த விண்மீன் பெரிதும் உதவியது.

நவீன காலத்திலும் விண்கலங்கள் (Spacecrafts) விண்வெளியில் தங்களின் திசையைத் துல்லியமாகக் கணக்கிட (Celestial Navigation) இந்த விண்மீனையே முதன்மை வழிகாட்டியாகப் பயன்படுத்துகின்றன.

ஏனெனில், இதன் பிரகாசமும் தென் துருவ திசையும் விண்வெளிப் பயணக் கருவிகளால் எளிதில் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
வெளிநாட்டு NRI மாணவர்கள் இந்தியாவில் உயர்கல்வி பயில எளிதான வழிமுறைகள் இதோ!
கனோபஸ் நட்சத்திரம் Canopus star

கனோபஸ் நட்சத்திரம் தனது வாழ்நாளின் இறுதிப் பகுதியை எட்டும்போது, அது ஒரு மிகப்பெரிய விண்மீன் வெடிப்பாக (Supernova) மாறுமா அல்லது வெள்ளை நிறக் குள்ள விண்மீனாக (White Dwarf) மாறுமா என்பதில் விஞ்ஞானிகளிடையே விவாதம் உள்ளது. தற்போதைய ஆய்வுகளின்படி, இது ஒரு நியான்-ஆக்ஸிஜன் வகை வெள்ளை குள்ள விண்மீனாக சுருங்க வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.

​உங்களுக்குத் தெரியுமா?

இந்திய வானவியலில், கார்த்திகை தீபம் போல, அகத்திய விண்மீன் விடியற்காலையில் தோன்றுவதை 'அகஸ்திய உதயம்' என்று கொண்டாடினார்கள். இது பருவமழையின் இறுதியையும், தெளிவான குளிர்காலத்தின் துவக்கத்தையும் குறிக்கும் இயற்கை அறிகுறியாகப் பார்க்கப்பட்டது.

வாசகர்கள் தமிழ் மற்றும் உலகளாவிய வானியல் மரபில் கனோபஸ் நட்சத்திரத்தின் முக்கியத்துவத்தையும், நவீன விண்வெளி அறிவியலில் அது வகிக்கும் அத்தியாவசியப் பங்கைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com