சிறுகதை: வாரணம் ஆயிரம்...!

கல்லூரி முதல் நாளில் ஹரி பேசிய தத்துவார்த்தமான பேச்சு பற்றிய சிறுகதை!
சிறுகதை | Classroom
சிறுகதை | ClassroomImage credit: Gemini AI
ராமன். செல்வராஜ்

கோவில் நகரம் குடத்தையில் வசித்து வரும் இவர் விலங்கியலில் முதுகலை பட்டமும், வெகுஜன தொடர்பு மற்றும் பத்திரிகை துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர். தற்சமயம் EXNORA , 'உலக தமிழர் அறக்கட்டளை' போன்ற அமைப்புகளில் தன் பங்கை ஆற்றி வருகிறார். இவரது இலக்கியத் தொடர்பு என்பது ஒரு கவிதை மூலமாக 'கவிநானூறு' என்கிற இணையதளத்தில் தொடங்கியது. தொடர்ந்து கட்டுரைகளும் வேறுசில தளங்களில் வெளியாகின. செப்டம்பர் -17- 2025 முதல் கல்கி குழுமத்துக்காக சிறுகதைகள், தத்துவங்கள், ஆன்மீக புரிதல்கள் ஆகியவற்றை எழுதி, பகிர்ந்து வருகிறார். இவரது கதை கட்டுரைகளை கல்கி ஆன்லைன் இதழ்களிலும் Motivation, பசுமை/ சுற்றுச்சூழல், மற்றும் கலை கலாச்சாரம், ஆன்மீகம், தத்துவம் ஆகிய பகுதிகளிலும் காணலாம்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

'ஆமா அப்படித்தானே இருக்கும் எல்லோருக்கும். புதிய சூழல், புதிய கட்டிடம், புதிய நண்பர்கள், புதிய அனுபவம் இவற்றையெல்லாம் ஒன்றுசேர கொடுப்பதுதான் கல்லூரி வாசல்.' காதல், கண்ணாமூச்சி, கத்திரிக்காய் எல்லாம் பள்ளியிலே ஓரளவுக்கு அவன் பார்த்ததுதான். இதில் சுவாரசியம் இருந்தாலும் கல்லூரிக்குச் செல்வது என்பது ஏதோ ஒருவகையில் ஒரு முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. அது படிப்பதில் இருந்து, சுயமாக சிந்திப்பதில் இருந்து, சுயமாக முடிவெடுப்பதில் இருந்து, சுயமாக வேலைக்குச் செல்வது வரை நமக்கு பல வழிகளை கற்றுக்கொடுக்க கல்லூரிகள் எப்பொழுதுமே ஒரு பூக்கள் மலர்ந்த சோலைதான்.

அந்தச் சோலையில் பூக்களை நுகர்ந்து, உறவாடி, நட்பு பாராட்டி, நாளும் வளர்ந்து, நாட்டையும், சமுதாயத்தையும் ஏதோ ஒரு வகையில் சேவை செய்வதற்கு ஒரு சிறந்த திருப்புமுனை கல்லூரி வளாகம் என்றால் அது மிகையாகாது. ஆனால் அவனுக்குள் ஒரு பயமும் இருந்தது. எப்படியான நண்பர்கள் நமக்கு கிடைக்கப்போகிறார்கள். ஏனென்றால் அவர்களை வைத்துத்தான் இன்னும் மூன்று வருடங்கள் இந்தக் கல்லூரியில் பயணப்பட வேண்டும். ஆக நட்பு என்பது ஒரு முக்கியமான அளவுகோலாகப் பார்க்கப்படும். கல்லூரிக்கு வந்தடைந்த ஆகிவிட்டது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com