ஓட்டுநர் உரிமம் இருக்கா? இந்த 15 இலக்க எண் எதை குறிக்குது தெரியுமா?

உங்கள் லைசென்ஸில் இருக்கும் எண்களுக்குப் பின்னால் இருக்கும் ஆச்சரியமான ரகசியங்கள்.
ஓட்டுநர் உரிமம் |Driving License
ஓட்டுநர் உரிமம் | Driving LicenseImage credit: Gemini AI
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on
Kalki Strip
Kalki Strip

இந்தக் கட்டுரை ஓட்டுநர் உரிமத்தின் வரலாறு முதல் அதன் 15 இலக்க எண் அமைப்பு வரை விரிவாக விளக்குகிறது. 1888ல் கார்ல் பென்ஸுக்கு வழங்கப்பட்ட முதல் உரிமம், இந்தியாவில் பழகுநர் மற்றும் நிரந்தர உரிமம் பெறும் நடைமுறை, தேவையான ஆவணங்கள், மாநிலக் குறியீடு, வழங்கப்பட்ட ஆண்டு, தனிப்பட்ட வரிசை எண், MCWG, LMV, HMV போன்ற வாகன வகை குறியீடுகள் என அனைத்தையும் தெளிவாக அறிமுகப்படுத்துகிறது.

வாகனம் வைத்திருக்கும் அனைவருக்கும் ஓட்டுநர் உரிமம் என்பது அவசியம். இந்த ஓட்டுநர் உரிமம் (Driving License / DL) என்பது, ஒரு நபர் குறிப்பிட்ட வகை வாகனத்தைச் சட்டப்படி ஓட்டுவதற்கு தகுதியுடையவர் என்பதை அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ அனுமதி ஆவணம் ஆகும்.

இந்த உரிமம் இருந்தால் மட்டுமே வாகனத்தை ஓட்டும் அங்கீகாரம் அவர்கள் பெற முடியும். அதனால்தான் சிறார்கள் கையில் வாகனங்கள் பாதுகாப்புடன் இருக்க ஓட்டுனர் உரிமம் என்பதற்கான வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதன் முதலில் ஓட்டுநர் உரிமம் பெற்றவர் யார் தெரியுமா?

உலகில் முதன்முதலில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் 1888-ஆம் ஆண்டு 1 ஆகஸ்ட் அன்று — நவீன பெட்ரோல் காரை உருவாக்கிய முன்னோடியான கார்ல் பென்ஸ் (Carl Benz)க்கு ஜெர்மனி மன்ன்ஹைம் (Mannheim)ல் வழங்கப்பட்டது.

அது இன்றைய ஓட்டுநர் உரிமம் போல ஓட்டுநரின் திறனைச் சோதித்து வழங்கப்பட்ட உரிமம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உருவாக்கிய Benz Patent-Motorwagen வாகனத்தை மன்ன்ஹைம் மற்றும் சுற்றுவட்டாரப் பொதுச் சாலைகளில் சோதனை ஓட்டம் செய்ய அனுமதிப்பதற்காக வழங்கப்பட்ட அதிகாரபூர்வ உரிமம் அது. அதன் பின்னர் வாகனங்கள் பெருக்கம் அதிகமாக முறையாக ஓட்டுநர் உரிமம் பெறுதல் அனைத்து நாடுகளிலும் நடைமுறையில் வந்தது.

இந்தியாவில் நிரந்தர ஓட்டுநர் உரிமம் (Driving Licence) பெற, முதலில் சாரிதி பரிவாகன் இணையதளம் மூலம் பழகுநர் உரிமம் (Learner's Licence) பெற்று, அதன்பிறகு ஓட்டுநர் திறன் சோதனை மூலம் நிரந்தர உரிமம் பெற வேண்டும்.

கியர் இல்லாத 50சிசி-க்கும் குறைவான இருசக்கர வாகனங்கள் ஓட்ட (பெற்றோரின் ஒப்புதலுடன்) 16 வயதும்; மோட்டார் சைக்கிள் மற்றும் இதர இலகுரக கார்கள் போன்ற போக்குவரத்து அல்லாத வாகனங்களை ஓட்ட 18 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலில் பழகுநர் உரிமம் (Learner's Licence) சாரிதி பரிவாகன் வலைத்தளத்திற்குச் செல்லவும். உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து 'Apply for Learner Licence' எனும் படிவத்தைப் பூர்த்தி செய்து, வயது மற்றும் முகவரிக்கான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றி ஆன்லைனிலேயே கட்டணம் செலுத்தவும்.

ஆன்லைன் மூலம் சிறிய தேர்வை (Online LL Test) வெற்றிகரமாக முடித்தவுடன், உங்கள் பழகுநர் உரிமம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிரந்தர ஓட்டுநர் உரிமம் (Permanent Driving Licence) பெற பழகுநர் உரிமம் கிடைத்த 30 நாட்களுக்குப் பிறகு (மற்றும் 180 நாட்களுக்குள்), அதே சாரிதி பரிவாகன் தளம் மூலமாக நிரந்தர உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். 'Apply for Driving Licence' என்பதைத் தேர்ந்தெடுத்து பழகுநர் உரிமம் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.

தேவையான கட்டணத்தைச் செலுத்தி, ஓட்டுநர் தேர்வுக்கான தேதியைத் முன்பதிவு செய்யவும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தேர்வு ஒதுக்கப்பட்ட நாளில், உங்கள் சொந்த வாகனத்துடன் தேவையான இன்சூரன்ஸ் மற்றும் ஆவணங்களுடன் உரிய நேரத்தில் RTO அலுவலகத்திற்குச் சென்று அங்கிருக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் (MVI) முன்னிலையில் ஓட்டுநர் திறன் சோதனை வழங்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இனி லைசென்ஸ் தொலைந்துபோகும் பயம் இல்லை! உங்க போன்லயே டவுன்லோட் பண்ணிக்கலாம்.புதிய டிஜிட்டல் திட்டம்!
ஓட்டுநர் உரிமம் |Driving License

தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன், உங்கள் ஓட்டுநர் உரிமம் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும் அல்லது டிஜிட்டல் முறையில் பெற்றுக்கொள்ளலாம்.

உரிமம் பெறத் தேவையான ஆவணங்களாக வயதுச் சான்று (பிறப்புச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது PAN அட்டை). இருப்பிடச் சான்று (ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை அல்லது பாஸ்போர்ட்). பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் கையொப்பம், பழகுநர் உரிமத்தின் நகல் ஆகியவை தேவைப்படும்.

ஓட்டுநர் உரிமத்தில் பொதுவாக

உரிமம் வைத்திருப்பவரின் பெயர்,

புகைப்படம், பிறந்த தேதி, முகவரி

DL எண் (Driving Licence Number),

வழங்கப்பட்ட தேதி, செல்லுபடியாகும் காலம், எந்த வகை வாகனங்களை ஓட்டலாம் என்பதற்கான வகைப்பாடு வழங்கிய RTO/Transport Office விவரம் ஆகிய தகவல்கள் அடங்கியிருக்கும்.

சரி அந்த ஓட்டுனர் உரிமத்தில் இருக்கும் எண் எதனுடன் தொடர்புடையது அல்லது எதை குறிக்கிறது என்பது தெரியுமா?

ஓட்டுநர் உரிமத்தில் (Driving Licence) இருக்கும் எண்களுக்கு குறிப்பிட்ட அர்த்தங்கள் உள்ளன. குறிப்பாக DL Number-ஐப் பார்த்து மாநிலம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) போன்ற தகவல்களை அறிய முடியும்.

Driving licence | ஓட்டுநர் உரிமம்
Driving licence | ஓட்டுநர் உரிமம்Image credit: Gemini AI

இந்தியாவில் வழங்கப்படும் ஓட்டுநர் உரிமத்தில் (Driving License - DL) உள்ள எண்கள் மற்றும் எழுத்துக்கள் வெறும் ரேண்டம் எண்கள் அல்ல. அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட அர்த்தம் உள்ளது. பொதுவாக ஒரு ஓட்டுநர் உரிம எண் 15 இலக்கங்களைக் (15 Characters) கொண்டதாக இருக்கும். ஓட்டுநர் உரிம எண்களின் கட்டமைப்பு , மாநிலக் குறியீடு (State Code - முதல் 2 எழுத்துக்கள்): உரிமம் வழங்கப்பட்ட மாநிலத்தைக் குறிக்கும்.

அடுத்து வழங்கப்பட்ட ஆண்டு (Year of Issue - அடுத்த 4 எண்கள்) நீங்கள் எந்த வருடம் ஓட்டுநர் உரிமம் பெற்றீர்கள் என்பதைக் குறிக்கும். உதாரணமாக 2018 அல்லது 2025. வரிசை எண் (Unique Serial Number - கடைசி 7 எண்கள்): அந்த குறிப்பிட்ட RTO அலுவலகத்தில், அந்த வருடத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட தனித்துவமான பதிவு எண் ஆகும்.

இதையும் படியுங்கள்:
தொலைந்துபோன தாய்ப்பத்திரம்: மாற்று ஆவணம் பெறுவதற்கான சட்டப்பூர்வ நடைமுறைகள்!
ஓட்டுநர் உரிமம் |Driving License

உதாரணமாக ஒரு DL எண்:

TN-01-2020-0012345

TN → தமிழ்நாடு மாநிலக் குறியீடு

01 → குறிப்பிட்ட RTO குறியீடு

2020 → உரிமம் வழங்கப்பட்ட ஆண்டு அல்லது அந்த அலுவலகத்தின் பதிவில் பயன்படுத்தப்படும் ஆண்டு குறிப்பு

0012345 → அந்த உரிமத்துக்கான தனிப்பட்ட தொடர் எண் ஆகும். ஆனால் DL எண்ணின் வடிவம் மாநிலம் மற்றும் உரிமம் வழங்கப்பட்ட காலத்தைப் பொறுத்து மாறலாம். எனவே ஒவ்வொரு எண்ணையும் ஒரே முறையில் பிரித்து அர்த்தம் அறியமுடியாது என சொல்லப்படுகிறது.

மாநிலக் குறியீடுகள்

சில உதாரணங்கள் இங்கு

TN தமிழ்நாடு, KA கர்நாடகா, KL கேரளா,

AP ஆந்திரப் பிரதேசம், TS தெலங்கானா

MH மகாராஷ்டிரா, DLடெல்லி, WB மேற்கு வங்கம். முக்கியமாக எல்லா DL எண்களும் ஒரே வடிவத்தில் இருக்காது என்றும் பழைய உரிமங்கள் மற்றும் புதிய Sarathi/Parivahan முறையில் வழங்கப்பட்ட உரிமங்களில் எண் அமைப்பு மாறுபடலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், DL எண்ணில் இருக்கும் ஒவ்வொரு எண்ணும் கட்டாயமாக 'வழங்கப்பட்ட ஆண்டு' என்பதைக் குறிக்காது.

இதையும் படியுங்கள்:
காரில் ஸ்கரெட்ச் ஆனா பயப்படாதீங்க! தப்பிக்கவும் இழப்பீடு பெறவும் எளிய வழிகள்!
ஓட்டுநர் உரிமம் |Driving License

பிற முக்கிய குறியீடுகளாக (Vehicle Class Symbols): உரிமத்தின் பின்புறம் அல்லது முன்புறம் நீங்கள் எந்தெந்த வாகனங்களை ஓட்ட தகுதியானவர் என்பதைக் குறிக்கும் குறியீடுகளும் இருக்கும் என்பதை அறிவோம். MCWG- கியர் உள்ள இருசக்கர வாகனங்கள் (Motorcycle With Gear), MCWOG -கியர் இல்லாத இருசக்கர வாகனங்கள் (Motorcycle Without Gear - Scooters), LMV- கார், ஜீப் போன்ற இலகுரக மோட்டார் வாகனங்கள் (Light Motor Vehicle - ) , HMV:- லாரி பஸ் போன்ற கனரக மோட்டார் வாகனங்கள் (Heavy Motor Vehicle)

பெரும்பாலும் சலுகைகள் பெற ஆவணமாகும் ஒரு ஓட்டுநர் உரிமம் இத்தனை தகவல்களைத் தாங்கியுள்ளது என்பது ஆச்சரியம்தானே?

ஓட்டுநர் உரிமத்தின் கட்டமைப்பு மற்றும் ஆன்லைன் நடைமுறைகளைத் துல்லியமாகப் புரிந்துகொள்வதன் மூலம், எந்தவொரு இடைத்தரகரின் உதவியும் இல்லாமல் சட்டப்பூர்வமாக உங்கள் உரிமத்தைப் பெற்று நம்பிக்கையுடன் வாகனம் ஓட்டலாம்.

logo
Kalki Online
kalkionline.com