ஹைஜாக்கர்களை கதிகலங்கச் செய்த இந்தியத் தியாகிகள்!

பயணிகளின் உயிரைக் காக்க தன் உயிரையே துச்சமென நினைத்த இந்திய விமானிகளின் வீர வரலாறு.
விமானப் பயணம் | Neerja Bhanot and Smith Macha
விமானப் பயணம் | Neerja Bhanot and Smith MachaImage credit: Chatgpt
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

விமானப் பயணம் எளிய பயணமாக மாறியதன் பின்னணியில் எத்தனை ஆபத்துக்கள் மறைந்துள்ளன தெரியுமா? பான் அம் விமானத்தில் நீர்ஜா பானட் தொடங்கி, சமீபத்தில் கோடரித் தாக்குதலையும் தாண்டி 174 உயிர்களைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சார் வரை—இந்தியர்களின் ரத்தத்தில் ஊறிப்போன அந்த உன்னதத் தியாக வரலாற்றை இக்கட்டுரையில் படித்து அறியுங்கள்!

தியாகம் என்பது, தன் உடல், பொருள், ஆவிக்கு ஊறு வருகின்ற போதும் அதனை உதாசீனப்படுத்திவிட்டு, அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவது என்று கொள்ளலாம். அப்படி ஊருக்காக உழைப்பவர்கள் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப் படுவார்கள். எல்லோர் மனதிலும் நிலையான இடம் பிடிப்பார்கள். அவர்களால் காப்பாற்றப் படுவோரின் இதயங்களில் என்றைக்கும் இறைவனாகவே ஆட்சி புரிவார்கள்.

போக்குவரத்துச் சாதனங்களில் உயரிய இடம், விமானங்களுக்கு உண்டு. உயரத்தில் பறப்பதால் மட்டுமல்லாது உரிய இடங்களுக்கு விரைவாகக் கொண்டு சேர்ப்பதாலும் அது சிறப்பைப் பெற்று விடுகிறது. விமானங்கள் கண்டு பிடிக்கப்படாதிருந்தால், உலகம் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்த்தால்…

’க்ளோபல் வில்லேஜ்’ என்ற பதமே வந்திருக்காது; தொலை தூர நாடுகள் தனித்தே இயங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டிருக்கும்; வணிகமும், வகைவகையான நாகரீக முன்னேற்றங்களும் இவ்வளவு சீக்கிரத்தில் உலகில் பரவியிருக்காது;

இதையும் படியுங்கள்:
ஹாலோவீனுக்கும் மயானக் கொள்ளைக்கும் என்ன சம்பந்தம்? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
விமானப் பயணம் | Neerja Bhanot and Smith Macha

சென்னையில் ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டு விட்டு, லஞ்சைச் சிங்கப்பூரில் முடித்து விட்டு, டின்னருக்கு வேறு நாடு செல்லும் விரைவு வளர்ந்திருக்காது, என்று இப்படியே பலவற்றையும் சொல்லிக் கொண்டே போகலாம்.

வியத்தகு விஞ்ஞான வளர்ச்சி ஒருபுறம் என்றால், மறுபுறத்திலோ விபரீதங்களும் வளர்ந்து கொண்டே போவதும் இயல்புதானே!கடத்தல்காரர்களின் கண்களில் முதலில் படுவது, இந்த விமானங்கள்தான்! அதற்கு வலுவான காரணங்களும் உண்டு.

வானில் தனியாகப் பறக்கும் விமானத்தைக் கடத்துவது எளிது. தரையில் உள்ள மற்ற போக்குவரத்துச் சாதனங்களான, ரயில், பஸ் போன்றவை கடத்தப்படுமானால் உதவிக்கு உடனடியாக ஏற்பாடு செய்து விடலாம். ஆனால் விண்ணில் பறக்கும் விமானத்தை அணுகுவதற்கே அதிக நேரமாகி விடும். கடத்தல்காரர்கள் விரும்பும் இடங்களுக்கு விமானங்களைத் திசை திருப்பிச் செல்வதும் எளிது.

முன்பெல்லாம், விமானங்களை ஹைஜாக் செய்வதற்கு மற்றொரு முக்கியக் காரணம், பெரும்பாலும் சமுதாயத்தின் உயர் நிலையில் உள்ளவர்களே விமானப் பயணம் மேற்கொண்டதால், அவர்களைக் காப்பாற்றுவதை முக்கியமெனக் கருதி, கடத்தல்காரர்களின் விருப்பத்திற்கு இணங்க, மற்றவர்கள் முன்வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு.

விமானப் பயணம் | Neerja Bhanot and Smith Macha
விமானப் பயணம் | Neerja Bhanot and Smith MachaImage credit: Chatgpt

அது செப்டம்பர் 5,1986 ஆம் ஆண்டு. பம்பாயிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குப் புறப்படுகிறது அந்தப் பான் அம் (Pan Am 73) விமானம். நடுவில் பாகிஸ்தானின் கராச்சி நகர, ஜின்னா இன்டர் நேஷனல் ஏர்போர்ட்டில் இறங்கிப் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்ல எத்தணிக்கையில், ஹைஜாக் செய்யப்படுகிறது. ஆயுதமேந்திய 4 பாலஸ்தீனப் போராளிகள், பாதுகாவலர்கள் என்ற போர்வையில் விமானத்தினுள் நுழைந்து விடுகிறார்கள்.16 மணி நேரப் போராட்டம். பணிப் பெண்களில் ஒருவர் நமது நீர்ஜா பானட். 22 வயதே நிரம்பிய அவர், பல அமெரிக்கர்களின் பாஸ்போர்ட்டை ஒளித்துக் கடத்தல்காரர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார். பலர் மெல்ல தப்பிக்கிறார்கள்.16 மணிக்குப் பிறகு விமானத்தில் எரிபொருள் தீர்ந்து, உள்ளே இருள் சூழ்ந்து விடுகிறது. ஹைஜாக்கர்கள் சுட்டதில் 20 - 22 பேர்கள் இறக்க, சுமார் 150 பேர் காயமடைகிறார்கள்.

கடைசி வரை பயணிகளுக்காகப் போராடிய நீர்ஜா பானட்டும் தன் இன்னுயிரை ஈந்து, தியாகியாகிறார். அசோகச் சக்கர விருதினை அவர் மரணத்திற்குப் பிறகு வழங்கி, அவர் ஆத்மாவைக் கௌரவிக்கிறது இந்திய அரசு!

இதையும் படியுங்கள்:
2026 நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள்!
விமானப் பயணம் | Neerja Bhanot and Smith Macha

சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு, இன்றைக்கு 39 வயதான கேப்டன் ஸ்மித் மச்சார், ஃபிளை துபாய் ஃபிளைட்டினை, தான் சிறு கோடரியால் தாக்கப்பட்டு இரத்தம் பீறிட்டுக் கொண்டிருக்கும் வேளையிலும், உள்ள உறுதியையும், உத்தியோக மாண்பையும் விட்டுக் கொடுக்காமல், 174 பயணிகளின் இன்னுயிரைக் காப்பாற்றி, தன் தியாக உணர்வைப் பறை சாற்றியுள்ளார். காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தவரான இவர், தற்போது மும்பையில் வசித்து வருகிறாராம். எங்கு வசித்தாலும், இந்திய ரத்தத்தில் அடுத்தவர்களின் உயிரைக் காக்கும் அணுக்களே அதிகம் உள்ளன போலும்!

அடுத்தவர்கள் உயிரைக் காப்பாற்றத் தங்கள் உயிரையும் தயங்காமல் தானம் செய்யும் உத்தமர்களைக் கொண்டது இந்த இந்தியப் புனிதமண் என்பதை, இதன் மூலம் உலகம் உணர்ந்திருக்கும்! உணர வைக்க மேலும் தேவையென்றால், இந்தியா தரத் தயாராகவே இருக்கிறது!

logo
Kalki Online
kalkionline.com