கதைக்கலாம் வாங்க: வாக்குச்சாவடியில் திடீரென நுழைந்த விஐபி... இளம் அரசு ஊழியருக்குக் காத்திருந்த இன்ப அதிர்ச்சி!

election-duty-experience
election-duty-experience
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on
strip
strip

-அசோகன் குப்புசாமி

கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து மேடையில் வாக்குச்சாவடியில் நடந்த சுவாராஸ்யமான அனுபவம்! பற்றி கேட்டிருந்தோம். அதில் தேர்வான மூன்று சுவாரஸ்யமான கட்டுரைகளில் இரண்டாவது கட்டுரை இதோ…

election-duty-experience
அசோகன் குப்புசாமி

நான் 1983 ஆம் ஆண்டு புதியதாக அரசு புள்ளி இயல் துறையில் தட்டச்சராக பணியில் சேர்ந்தேன். அப்பொழுது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எனக்கு கோபாலபுரம் அருகில் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டு வாக்கு சாவடியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். பரபரப்பாக வாக்குப் பதிவு நடைப்பெற்றுக்கொண்டிருந்தது.

எனக்கு வாக்காளர்களின் ஆட்காட்டி விரலில் மை வைக்கும் வேலை. வாக்காளர்கள் அனைவருக்கும் மை வைக்கும்பொழுது விரல்களிலும் மை ஒட்டிக்கொண்டது. அந்த மை அவ்வளவு எளிதில் அழியாது. அப்படியே கைக் கழுவிக்கொண்டு சாப்பிட அமர்ந்தோம்.

அப்பொழுது திடிரென ஒரு விஐபி உள்ளே நுழைந்தார். நுழையும்பொழுதே என்ன சாப்பிடுகிறீர்களா? சாப்பிடுங்கள் சாப்பிடுங்கள் எனறு அன்போடு சொல்லிக்கொண்டே வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறதா? உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் உள்ளதா ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்று அக்கறையோடு நலம் விசாரித்தார்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல்... 17 கோடி வாக்காளர்கள்... 20 லட்சம் இரும்புப் பெட்டிகள்...
election-duty-experience

அவர் வேறு யாருமல்ல இன்றைக்கு தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும். முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்தான். அவரின் அன்பும் நடந்துகொண்ட பாங்கும் மறக்க இயலாத ஒன்றாக அமைந்துவிட்டது.

logo
Kalki Online
kalkionline.com