கம்பன் முதல் திருப்பதி குபேர கடன் வரைக்கும் கடன் பற்றிய அறியப்படாத பக்கங்கள்.

இலக்கியத்தில் கடன், திருப்பதி கோயில் கடன், கி.ஆ.பெ. விசுவநாதம் வசூல் கதை மற்றும் வட்டியின் வரலாறு பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
கடன் | Debt history
கடன் | Debt historyImage credit: Chatgpt
என்.எஸ்.வி.குருமூர்த்தி

என்.எஸ்.வி.குருமூர்த்தி, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான எழுத்து அனுபவம் கொண்டவர். 1970 முதல் கல்கி, குமுதம், விகடன், தினமணி கதிர், இந்து தமிழ் திசை உள்ளிட்ட இதழ்களில் எழுதி வருகிறார். சிறுவர்மணியில் சுமார் 90 நாடகங்கள் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் சுஜாதா கையால் பரிசு பெற்றவர்.

Updated on: 
Kalki strip
Kalki strip

கடன் வாங்கியவன் நெஞ்சம் எப்படித் கலங்கும் தெரியுமா? கம்பராமாயணம் தொடங்கி மெசபடோமியா காலம் வரை கடனும் வட்டியும் மனிதர்களை எப்படி ஆட்டிப் படைக்கின்றன என்பதை இந்தப் பதிவு விவரிக்கிறது. திருப்பதி பெருமாள் வாங்கிய தங்கக் கடன் முதல் கி.ஆ.பெ. விசுவநாதம் கையாண்ட வித்தியாசமான கடன் வசூல் தந்திரம் வரை, சுவாரஸ்யமும் அதிர்ச்சியும் கலந்த தகவல்களுடன் வாசிக்கத் தூண்டும் சுவாரஸ்யமான தொகுப்பு இது!

"கடன் பெற்றார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்"

"பாருங்க சார் கடன் என்பது எவ்வளவு கலக்கம் தரும் ஒண்ணுன்னு கம்பர் பாடி இருக்கார்" என்றார் கர்னல் கந்தசாமி. ரிடையர்டு பிரெஞ்ச் ஆர்மிக்காரர் நண்பர் குப்புசாமியிடம்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் குப்புசாமி, "இந்தப் பாடல் கம்பர் பாடவில்லை... இராமாயணப் பாட்டும் இல்லை…"

"அப்படியா… அப்போ யார் பாடினது?"

"விடங்கொண்ட மீனைப் போலும், வெந்தழல் மெழுகைப் போலும்,

படங்கொண்ட பாந்தள்வாய்ப் பற்றிய தேரை போலும்,

திடம் கொண்ட இராம பாணம் செருக்களத் துற்றபோது,

கடன்கொண்ட நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை

வேந்தன்."

இதுதான் சார் அந்தப் பாட்டு... இராமாயணக் கீர்த்தனைகள் என்ற நூலில் சீர்காழி அருணாசலக் கவிராயர் எழுதியது."

ரிடையர்டு ஆர்க்கியாலஜிஸ்ட் நாகமுத்துசாமி, "அது திரேதா யுகத்தில். இது கலியுகம்... கடன் கொடுத்தார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்" ங்கிறது தான் கலியுகத்துக்குப் பொருந்தும்.

"பாருங்க... போன வருஷம் நாளைக்கி தர்றேன்னு எங்க தெரு அயர்ன் மேன் இரு நூறு ரூபா வாங்கினான்... இன்னும் தரலே… பார்த்தால் ஓடி ஒளியறான்."

"சார் இந்தியாவில் கடன் வாங்கி கட்டாமல் வெளி நாடுகளில் தப்பிப்போய் வசிப்பவர்கள் மொத்தம் கட்ட வேண்டியது... ₹39000 கோடி இருக்காம்... 2025 நிலவரம் இது."

நமது நாட்டின் உலக வங்கிக் கடன் 2027க்குள் ₹ 7 லட்சம் கோடி வருமாம்... ஒவ்வொருத்தருக்கும் இதில் பங்கு தலைக்கு ₹1.75 லட்சம் வரும்!"

குப்புசாமி சொன்னார்.. "ஒரு வங்கிக் காசோலை அதிகபட்சம் எழுதப்பட்ட தொகை.. எதுவென்றால்.., 90 கோடி டாலர். அக்டோபர் 2008 மிட்சுபிஷி கம்பெனி மார்கன் ஸ்டான்லிக்குத் தந்த பாங்க் ஆஃப் டோக்யோ செக் ஆகும்.

30 மார்ச் 1995ல் கிளக்ஸோ கம்பெனி தந்த £ 247,46,55000 பவுண்ட் வெல்கம் டிர்ஸ்ட்டுக்கு தந்த செக் கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது."

கந்தசாமி, "குறைந்த பட்ச சாதனை செக் எது?"

குப்புசாமி, "ஒரு பைசாவுக்கு எழுதப்பட்ட ஸ்டேட் பாங்க் செக். தேதி 24.05.2010ல் தினேஷ் ஷிவ்னாத் உபாத்யாய என்பவர் யுனிமேக்ஸ் கம்பெனிக்குத் தந்தது."

"இந்தக் கடன் பற்றிச் சொன்னீங்களே… ஆன்மிகத்திலும் உண்டு. மகாபாரதத்தில் கிருஷ்ணர் திரௌபதியிடம் பட்ட கடன்" என்றார் நாகமுத்துசாமி.

"அது என்ன?"

"ஒரு முறை பாண்டவர்களுடன் கண்ணன் நீர் நிலை ஒன்றில் நீந்தி விளையாடினார்.... பிறகு ஒவ்வொருவராக பாண்டவர்கள் கரை ஏறிவிட்டார்கள். கண்ணன் மட்டும் இடுப்பளவு நீரில் அப்படியே நின்றார். பாண்டவர்களுக்கு ஏன் கண்ணன் அப்படியே நிற்கிறார் என குழப்பம்.

இதையும் படியுங்கள்:
எம். ஜி. ஆர் - சிவாஜி காலத்துத் தியேட்டர் கலாச்சாரம்: மறக்க முடியாத நினைவுகள்!
கடன் | Debt history

அப்போது அங்கே வந்த திரௌபதி ஒரு கணம் யோசித்தாள். சட்டென தன் புடவையில் ஒரு முழம் கிழித்து கண்ணனை நோக்கி வீசினாள். கண்ணன் அதை இடுப்பில் சுற்றிக்கொண்டு கரை ஏறினார். ஆம் வஸ்திரம் நீரில் அடித்துப்போய்விட்டதே காரணம்.

இதை ஒரு கடனாகவே எண்ணிய கிருஷ்ணர் பிற்பாடு சபையில் திரௌபதியை மானபங்கம் செய்ய துச்சாதனன் முயன்றபோது அளவில்லாமல் வஸ்திரத்தை அவள் மேல் அருளினார். மூர்க்கன் கை ஓய்ந்து போனான் என்பது ஒரு பழைய கதை. இது கண்ணன் கடன் தீர்த்த கணக்கு."

"1917 ல் முதல் உலகப் போரின்போது ஸே ஜுமால்லால் ருத்யா என்பவர் கடன் பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டு, பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கே ₹35000 கடன் கொடுத்தார். மத்திய பிரதேச தொழில் அதிபர் அவர். அந்தக் கடன் திரும்ப வரவில்லை என்கிறார்கள்.

1940ல் கடைசி ஹைதராபாத் நிஜாம் 200 கோடி $ மதிப்பில் செல்வந்தர். இந்திய அரசாங்கத்து வருட வருமானமே $10 கோடிதான் அப்போது. 185 காரட் எடை ஜேக்கப் வைரக்கல்லை பேப்பர் வெயிட்டாக வச்சிருந்தவர் அவர்," என்றார் கர்னல் கந்தசாமி.

குப்புசாமி, "தமிழறிஞர் கி ஆ பெ விசுவநாதம் கடன் வசூலித்த கதை தெரியுமா?"

"தெரியாதே..அது என்ன", என்றார் கந்தசாமி.

"அவர் ஒரு கடையில் குமாஸ்தாவாக வேலை பார்த்தபோது ஒருவர் கடைக்கு பணம் தரவேண்டி இருந்தது. அவருக்கு கடிதம் எழுத முதலாளி சொன்னார்.

இவரும் மிகவும் அன்பு நிறைந்த வார்த்தைகள் பிரயோகம் செய்து பணத்தை அனுப்பச் சொன்னார். அவர் கண்டுகொள்ளவில்லை.

சில நாட்கள் கழித்து மறுபடி பழைய லெட்டரைக் குறிப்பிட்டு பணம் அனுப்ப வேண்டுகோள் வைத்தார். இப்படியாக ஏழு தபால்கள் போயின. சிறிதளவும் அன்பு குறையாத மரியாதையான வார்த்தைகளுடன் கடுகளவும் கடுமை இன்றி... எட்டாவது தபால் சென்றதும் அந்தக் கடன்காரர் நேரில் வந்து பணம் பைசல் செய்துவிட்டார். எனக்குத் தொடர்ந்து கடிதம் எழுதியது யார்...? "

"இவர்தான்."

"நல்ல அணுகுமுறை வசூலுக்கு இப்படிதான் முயற்சிக்கணும்," எனப் பாராட்டி தனி சன்மானம் பத்து ரூபாய் தந்து போனார் கி ஆ பே வுக்கு.

"அடி மேல் அடி அடிச்சால் அம்மியும் நகருமாம். நகர்ந்திடுச்சே" என்றார் கந்தசாமி.

"கடன்தான் வங்கிகளுக்குச் சாப்பாடு போடுது..."

கடன் | friends are discussing
கடன் | friends are discussingImage credit: Gemini AI

"எப்படி?" என்றார் கர்னல்.

"மக்கள் போடும் டெபாசிட் பணம்... அது மக்களிடம் வங்கி பெற்ற கடன். அதற்கு 6 முதல் 7%வட்டி தருகிறது. கூடுதல் வட்டிக்கு 12%ல் அதை கடனாகக் கொடுத்து இரண்டு வட்டிகளுக்கும் உள்ள வித்தியாச தொகையில் ஊழியர் சம்பளம், நிர்வாகச் செலவு, போக மிச்சம் வருவது லாபம்.

பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் அதில் தரும். இதுதான் அடிப்படை. ஆனால் வசூலில்தான் பிரச்சினை."

"என் மனைவி எனக்கே வட்டிக்குப் பணம் தர்றாள் சார்..." கந்தசாமி சொன்னார்.

"அப்படியா..ஏது மூலதனம்..?"

"எல்லாம் என் பென்ஷன்தான். என் ஆர்மி சர்வீஸ் மொத்தமும் எனக்கும் குடும்பத்துக்கும் தனியாவே வீட்டில் உழைச்சாளாம். பாதி பென்ஷன் வாங்கிக்கிறா... எனக்கு சமயத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் வட்டிக்குத் தருவாள்..."

"இது பரவாயில்லையே... எங்க வீட்டு வேலைக்காரி வட்டிக்குப் பணம் தர்றாள்.. சில்லறை வியாபாரிகளுக்கு... மீட்டர் வட்டி..."

இதையும் படியுங்கள்:
காலம் ஒரு இரக்கமில்லா Schwarzenegger அதாவது ERASER! 
கடன் | Debt history

"அப்படின்னா?"

"அதி காலையில் ₹900 தந்தால் வியாபாரம் முடிஞ்சு இரவு ₹1000 தருவாங்க தெரு ஓர கடை வைத்திருப்பவர்கள்..." என்றார் குப்பு.

"திருப்பதி வெங்கடாஜலபதி ஆகாசராஜனின் மகள் பத்மாவதியை மணக்க குபேரனிடம் வாங்கிய கடன் ஒரு கோடியே பதினாலு லட்சம் தங்கக்காசுகள். கலியுகம் முடியும் வரை அதற்கு பெருமாள் வட்டி கட்டவேண்டும். இந்தத் தங்கக்கடன் பட்டயம் இன்றும் கோயிலில் இருக்கிறதாம்.

உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை மூலம் இன்னும் கடனை அடைக்க முடியவில்லை பெருமாளால். அது வட்டிக்கே போயிடுது. என்கிறார்கள்" என்றார் நாகமுத்துசாமி,

"இது என்ன ஸ்பீடு வட்டியா இருக்கும் போலிருக்கே?" என்றார் கந்தசாமி

ஆர்க்கியாலஜிஸ்ட் சொன்னார். "கடன் வட்டி இதெல்லாம் மெஸபடோமியாவில் 2500 கி.மு.காலத்திலேயே இருந்தது. இன்னும் ஒரு பழைய கல்வெட்டில் புருஷன் மனைவியிடம் ஒரு செப்புக்காசு கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் அவளுக்கு வஸ்திரம் துவைத்து, வீட்டு வேலை எல்லாம் செய்து கூலியால் கடனைத் தீர்த்தான்னு இருக்கு"

"அந்த அளவுக்கா கஷ்டப்பட்டான் நம்ம மாதிரி அப்பவே" என்றார் கந்தசாமி.

மனுஷன் தூங்குவான். ஆனால், வட்டி மட்டும் தூங்கவே தூங்காது!