உலகிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் இவர், இளம் தொழில் முனைவோர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு!

Jagdeep Singh
Jagdeep Singh
Published on

உலகிலேயே மிக அதிகமான சம்பளம் வாங்கும் தனிநபர் என்ற பெருமையை இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்தீப் சிங் பெற்றுள்ளார். 56 வயதான இவர் பிறந்தது புது தில்லியில்.

இவர் ஒரு ட்ரெண்ட் செட்டர் எனக் கருதப்படுகிறார். இருப்பினும், பெரிய பொது நிறுவனங்களின் அதிக ஊதியம் பெறும் CEO - க்களின் பட்டியலில் இனி இவர் பட்டியலிடப்படமாட்டார்.

கல்வியை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு இவர் அடைந்த உயரங்கள் ஏராளம். 

இவரின் ஒரு நாள் சம்பளம் ரூபாய் 48 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மாதச்சம்பளம் 17,500கோடி.  இது ஆண்டு முழுவதும் சில முக்கிய நிறுவனங்களின் வருவாயை விட பெரிய தொகை. இவர் Google CEO சுந்தர் பிச்சையை விட அதிகமாக சம்பளம் வாங்குகிறார். 

இந்தியாவின் திறமை வாய்ந்த நபர்களுள் இவருக்கும் உலகளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இவரின் வளர்ச்சியும், திறமையும் இன்றைய நிலையில் எல்லா இடங்களிலும் பேசுபொருளாக இருக்கிறது. தொழில்முனைவோர் அனைவருக்கும் இவர் சிறந்த முன்னோடியாக திகழ்கிறார்.

(EV) எலக்ட்ரிக் வாகன பேட்டரிகளின் தொழில்நுட்பத்தை புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்ற இவரின் வாழ்க்கைப் பயணம் அனைவருக்கும் சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

இவர் 2010 ல் குவாண்டம்ஸ்கேப் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதற்கு முன்பாக பல்வேறு முன்னணி நிறுவனங்களில் தலைமை பொறுப்பை வகித்து வந்தார். அவற்றில் ஹெவ்லெட்- பேக்கார்ட் ( HP) மற்றும் சன்  மைக்ரோசிஸ்டம்ஸ்  ஆகிய நிறுவனங்களும் அடக்கம். Infinera, Lightera, Onfiber communications, Airsoft ஆகியவை இவர் தொடங்கிய நிறுவனங்கள் ஆகும். அவற்றின்‌ மூலம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப்  பற்றிய ஆழமான அறிவை வளர்த்துக் கொண்டார்.

இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலும், யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியாவில் M.B.A பட்டமும் பெற்றிருக்கிறார். இவரின் இந்த கல்வியறிவு பிற்காலத்தில் இவரின் சாதனைகளுக்கு அடித்தளமாக இருந்திருக்கிறது.

அனுபவங்களின் வழியாக இவர் தொடங்கிய இவரது குவாண்டம்ஸ்கேப் நிறுவனம்  திட- நிலை (solid state) battery யில் நிபுணத்துவம் பெற்றது.  இந்த பேட்டரிகள் சிறந்த ஆற்றல் அடர்த்தி, வேகமான சார்ஜிங் நேரம் மற்றும் வழக்கமான லித்தியம்-அயன் பேட்டரிகளுடன் ஒப்பிடும்போது மேம்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் EV செயல்திறனில் மாற்றங்களை கொண்டு வரும் எனக் கருதப்படுகிறது.

தூய்மையான, பசுமையான போக்குவரத்தை நோக்கிய உலகத்தின் முயற்சியில், குவாண்டம்ஸ்கேப்பின் தொழில்நுட்பம் முன்னணியில் நிற்கிறது.

இதையும் படியுங்கள்:
யாரங்கே... உடனடியாக எனக்கு ஒரு நைட்டி ரெடி பண்ணுங்கள்!
Jagdeep Singh

இதன் வளர்ச்சியாக, பல தொழில்துறை ஜாம்பவான்களிடமிருந்து முதலீடுகளை ஈர்த்தது. இந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இவர் இருந்தபோது, இவரின் மொத்த சம்பள தொகுப்பானது, அதுவரை இல்லாத அளவில்  டாலர் 2.3 பில்லியன் மதிப்பிலான பங்கு விருப்பங்களை கொண்டிருந்தது. இந்த நிதித்தொகுப்பு , மற்ற தொழில் துறை ஜாம்பவான்களை விஞ்சியது. இவரின் தொலைநோக்குப் பார்வையோடு கூடிய தலைமை பண்புகளே இந்நிறுவனத்தை மேல்நோக்கி எடுத்துச் சென்றது. வோக்ஸ்வேகன் மற்றும் பில்கேட்ஸ் போன்ற தொழில் துறையின் ஜாம்பவான்களிடமிருந்தும் முதலீடுகளை ஈர்த்தது.

தொலைதொடர்பு துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பல்வேறு மரியாதைகளையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார். ஆண்டின் லைட் ரீடிங் நபர் (2007) மற்றும் ஆண்டின் எர்னஸ்ட் மற்றும் இளம் தொழில் முனைவோர் (2008) ஆகியவை அடங்கும்.

இதையும் படியுங்கள்:
இந்த 7 கனவுகள் உங்களுக்கு வந்தால் அதற்கான அர்த்தம் இதுதான்!
Jagdeep Singh

கடந்த வருடம் 2024 பிப்ரவரியில் குவாண்டம்ஸ்கேப்பிலிருந்து வெளியேறினார். இருப்பினும் இன்னமும் அதன் போர்ட் உறுப்பினராக தொடர்ந்து இருந்துகொண்டு வழிகாட்டி வருகிறார்.

தற்போது இவர் ஸ்டெல்த் ஸ்டார்ட் அப் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 

இவரின் உழைப்பும், திறமையும், வளர்ச்சியும், அவற்றின் மூலம் இவருக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரங்களும், இந்தியாவை உலக நாடுகளின் மத்தியில்  திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இவரின் வளர்ச்சி நமக்கு உணர்த்தும் பாடம் ..‌. உண்மையில் இவரின் நிதிச் செயற்பாடுகள் அற்புதமானவை என்பதாகும். அது மட்டுமல்லாமல், தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் உலகளாவிய வேலை‌வாய்ப்புகள் எவ்வாறு மாறுகின்றன என்பதுதான். 

இதையும் படியுங்கள்:
மர ராட்டை தந்த மகிமை வாய்ந்த வேட்டி! 'சர்வதேச வேட்டி தினம்' - மூல காரணமானவர் யார் தெரியுமா?
Jagdeep Singh

மின்சார வாகனங்கள் போன்ற ட்ரெண்டிங் மற்றும் அத்தியாவசிய போக்குவரத்தில் , லீடர்ஷிப் குவாலிட்டி எவ்வளவு முக்கியம் என்பதை இவரின் வளரச்சி நமக்கு உணர்த்தும் ஒன்றாகும்.

கல்வி, திறமை, உழைப்பு, தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றுடன் செயல்பட்டால் தொழில்முனைவோர்களுக்கு வெற்றி உறுதி என்பதை இளம் தலைமுறையினர் இவரின் வெற்றிப் பாதையிலிருந்து கற்றுக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com