

உன் காதலன் சந்தேகப் பேர்வழியா? எப்படிச் சொல்றே?
ஜாதகப்படி என் எதிர்காலம் பிராகாசத்துடன் இருக்கும்னு ஜோசியர் சொன்னதுக்கு யார் அந்த பிரகாசம்னு கேட்கிறார்டி!
********************************
உங்க பொண்ணுக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை கரெக்ட் டைம்ல சாப்பிடுவார், கரெக்ட் டைம்ல தூங்கப்போவார்!
அப்ப நல்ல பையன்னு சொல்லுங்க தரகரே!
இல்லேன்னா ஜெயில் வார்டன் திட்டுவாரே!
********************************
ஏங்க.... நீங்க இன்னைக்குப் பேசப்போற மீட்டிங்குக்கு நானும் வரட்டுமா?
வீட்டிலேயே என் பேச்சைக் கேட்கமாட்டியே.... கூட்டத்துக்கு வந்தா கேட்கப்போறே?
********************************
என்னப்பா சர்வர்... பிரியாணியில்
சிகரெட் கிடக்குது?
இது "தம்' பிரியாணி சார்!
********************************
வாழ்க்கையில் நான் ரொம்ப அடிபட்டவன் டாக்டர்!
பிறகு ஏன் ஒரு கட்டு போட்டுக்கக் கூட என்கிட்ட வரல?
********************************
தலைவர் மத்திய அமைச்சர் பதவிக்கு ஆசைப்படறார்னு எப்படிச் சொல்றே?
இப்பல்லாம் டிவியில இந்திப்படம் மட்டும்தானே பார்க்கிறார்!
********************************
டாக்டர்! என்னை நம்பித்தான் என் குடும்பம் இருக்கு!
என் குடும்பமும் உங்களை நம்பித்தான் இருக்கு!
********************************
அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?
எனக்கு எவ்வளவு சுகர் இருக்குன்னு கேட்டதுக்கு பத்து டம்ளர் காபி போடற அளவுக்கு இருக்குன்னு சொல்றாரே!