

செங்கோண முக்கோணத்தின் பிதாகரஸ் சூத்திரமும், நியூட்டனின் மூன்றாம் விதியும் நம் எண்ணங்கள், செயல்கள் மற்றும் கர்மாவின் விளைவுகளை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அறிவியல் கோட்பாடுகளுக்கும் நம் தலைவிதிக்கும் இடையே மறைந்திருக்கும் அந்த ஆச்சரியமான தொடர்பை அறிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்!
பிதாகரஸ் தேற்றம் மற்றும் நியூட்டனின் 3ஆம் விதி இவை இரண்டும் வாழ்க்கையில் நமக்கு எதை உணர்த்துகின்றன??
பிதாகரஸ் தேற்றம் பற்றி நம் எல்லோருக்குமே தெரியும்.
ஒரு right angle triangle ல் அதாவது செங்கோண முக்கோணத்தில் hypateneous என்று சொல்லக்கூடிய அதிகமான நீளத்தில் மற்ற இரண்டு பக்கங்களை இணைக்கும் ஒரு கோடு இருக்கும்.
இந்த கோட்டின் நீளத்தை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்றால், c 2 = a 2 + b 2 என்கிற Pythagoras formula வை உபயோகப்படுத்தி கண்டுபிடிப்பார்கள். இங்கு 'c' = செங்கோண முக்கோணத்தின் ஹைப்போடென்யூஸ் மற்றும் 'a' மற்றும் 'b' முக்கோணத்தின் மற்ற இரண்டு பக்கங்ளாகும்.
சரி, இதே ஃபார்முலா நம் வாழ்க்கையில் எந்த விதத்தில் எதை உணர்த்துகிறதென்று பார்க்கலாமா..
இப்போது C என்று இருக்கக் கூடிய hypateneous-ஐ நம்முடைய கர்மா என்று வைத்துக் கொள்வோம். மற்ற இரண்டு பக்கங்களாகிய a மற்றும் b ஐ நம்முடைய சிந்தனைகள் மற்றும் செயல்கள் என்று வைத்துக் கொள்வோம்.
இந்த ஃபார்முலாவின் படி, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் hypateneous என்று சொல்லக் கூடிய நம் கர்மாவானது நம்முடைய மனதில் எழும் சிந்தனைகளையும் மற்றும் நம்முடைய செயல்களையும் இணைத்து அதன் மூலம் வரும் பிரதிபலிப்பால் கணிக்கப் படுகிறது.
இறந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் நம்முடைய சிந்தனைகளும் செயல்களும் நன்றாக இருக்கும் பட்சத்தில் நம்முடைய நல்ல கர்மாவின் காரணமாக நம்முடைய எதிர்காலம் நிச்சயமாக நன்றாகவே இருக்கும்.
(Square of நல்ல செயல்) + (Square of நற் சிந்தனை) = Square of நற் கர்மா.
அதைப் போல தீய சிந்தனைகளோடு தீய செயல்களை செய்யும் போது எதிர்காலத்தில் நம்முடைய தீய கர்மாவின் காரணமாக கெட்ட விளைவுகள் தான் உண்டாகும்.
பாருங்கள், இந்த ஃபார்முலாவில் எத்தனை அழகான மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமான கருத்து அடங்கி இருக்கிறதென்று.
இன்னொரு விதியிலும் கர்மாவை பற்றி மிக அழகாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது. அது எதுவென்றால் நியூட்டன் அவர்களின் முன்றாவது கோட்பாடாகும். அந்த கோட்பாடு என்னவென்றால்,
“For every action there is an equal or opposite reaction”.
அதாவது நாம் செய்கின்ற எல்லா செயலுக்கும் சமமான மற்றும் எதிர் வினை உண்டு என்று பொருள்.
நமது தற்போதைய விதியை உருவாக்கிய கடந்த கால வாழ்க்கையின் காரணத்தை பற்றி நாம் அறியாமலேயே இருக்கிறோம். ஆனால் அத்தகைய அறியாமையால் சட்டத்தை மீற முடியாது.
பிறப்பு முதல் இறப்பு வரை, நமது அறியாமையைப் பொருட்படுத்தாமல், நமது கடந்தகால செயல்களுக்கும் தற்போதைய வாழ்க்கைக்கும் இடையே ஒரு சரியான காரணம் மற்றும் விளைவிற்கான உறவு கண்டிப்பாக உள்ளது.
நாம் உலகிற்கு வெளியிடும் விஷயங்கள் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருந்தாலும், ஏதோ ஒரு வடிவத்தில் நமக்குத் திரும்பி வருகின்றன. நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செயலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, காரணம் மற்றும் விளைவு என்பது எப்போதுமே கர்மாவுடன் தொடர்புடையது. ஏனெனில் அது நமது செயல்களின் விளைவுகளைக் குறிக்கிறது.
இதைப் போலவே எல்லா theromலும் அதாவது அது இயற்பியலாக இருக்கட்டும் கணிதமாக இருக்கட்டும் இல்லை என்றால் வேதியிலாக இருக்கட்டும், எல்லாவற்றிலும் ஆராய்ந்து பார்த்தால் கண்டிப்பாக எதாவது ஒரு பொருள் அடங்கி இருக்கும்.
ஆகவே, நாம் எதை கற்றாலும் அதில் இருக்கும் விளக்கத்தை நன்றாக புரிந்து கொண்டு அதை எந்தெந்த துறையில் எப்படி உபயோகப் படுத்த வேண்டுமோ அவ்வாறு உபயோகிப்பதோடு மட்டுமல்லாமல் அதில் அடங்கியுள்ள கருத்துக்களை வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும்.
இந்தக் கட்டுரையை வாசிக்கும்பொழுது, உங்கள் அன்றாட எண்ணங்களையும் செயல்களையும் விழிப்புணர்வுடன் கையாளும் தெளிவும், ஒவ்வொரு முடிவின் பின்னணியிலும் உள்ள காரண-காரிய உறவைப் புரிந்து கொண்டு நிதானமான, பொறுப்பான வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் மனப்பக்குவமும் உங்களுக்குக் கிடைக்கும்.