க்ரைம் ஸ்டோரி: கொலையா? தற்கொலையா..? அத்தியாயம் 4

கொலையா அல்லது தற்கொலையா? ஊட்டி தம்பதியினர் கொலை வழகின் அதிர்ச்சித் திருப்புமுனை!
Kolaiya? Tharkolaiya..? - Tamil Serial Story
Kolaiya? Tharkolaiya..? - Tamil Serial StoryImage credit: Chatgpt
அகிலா சிவராமன்

கடந்த 5 வருடங்களாக அகிலா சிவராமனின் கட்டுரைகளும் கதைகளும் கிட்டத்தட்ட 500க்கும் மேல் வெளி வந்துள்ளன. இறைவன் மீது பல பாடல்களை எழுதியுள்ள இவரது முதல் சிறுகதை 'புயலின் மறுபக்கம்' 2025 ஜனவரியில் மங்கையர் மலரில் வெளியானது. தொடர்ந்து கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். 'கல்கியில் எழுத ஆரம்பித்த பிறகு தான் என்னுடைய திறன் என்னவென்று எனக்கே தெரிய ஆரம்பித்தது' என்று கூறும் அகிலா, சமூக நலன் அடிப்படையிலும், தேச நலன் அடிப்படையிலும் தனது படைப்புகள் அமைய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துபவர்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

க்ரைம் ஸ்டோரி: கொலையா? தற்கொலையா..? அத்தியாயம் 4

போலீஸார் மகேஷ் வரும்வரை அவனை வேறு ஒரு ரூமில் ஒளித்து வைத்திருந்தார்கள்.

வெளியே போயிட்டு திரும்பி வந்த மகேஷ் இன்ஸ்பெக்டரைப் பார்த்து திகைத்து நின்றான்.

“தம்பி மகேஷ்... ஒரு breaking newsபா...”

“என்ன விஷயம் சார்?”

“சதாசிவமும் அவரோட மனைவியும் தானா விஷம் சாப்பிடல...?”

“அப்ப.....?” என்று கேட்கும்போதே வியர்வையில் நனைந்தான் மகேஷ்...

“நீ ஏன்ப்பா இத்தனை டென்ஷன் ஆகற?”

“ஒன்னுமில்லை சார்.. அந்தக் கொடுமைக்காரன் மட்டும் யாருன்னு தெரிஞ்சா துண்டுத்துண்டா வெட்டிடுவேன் சார்...?”

“ஓ! அப்படியா... இரு ஒரு நிமிஷம்...” என்று சொல்லிவிட்டு சமையலறைக்கு போய் ஒரு கத்தியைக் கொண்டுவந்து அவனிடம் கொடுத்தார் இன்ஸ்பெக்டர்..

அவனோ என்னதென்றே புரியாமல் முழித்துக்கொண்டிருக்க... இன்ஸ்பெக்டரோ “எம்பா. முழிக்கற... உன்னை நீயே வெட்டிக்கோ..” என்று கூற, பயத்தில் காலும் கையும் டைப் அடிக்க கத்தி கீழே விழுந்தது.

Loading content, please wait...