

நடுக்கடலில் பறக்கும் ஒரு பறவைக்கு அங்கு செல்லும் ஒரு கப்பலின் கொடிமரமே தங்கும் இடமாகும். அதே போல அமைதியற்ற கடலில் புயல்கள் வீசி அடித்துச் செல்லப்படும் போது உங்களுக்கு உள்ள அடைக்கலம் இறைவன் மட்டுமேயாகும். பறவை எவ்வளவு தூரத்தில் பறந்தாலும் கூட அதற்குத் தான் தங்க வேண்டிய இடம் தெரியும். அந்த அறிவு அதற்கு நம்பிக்கையைத் தருகிறது. அந்த கொடிமரத்தை அது மனதில் எப்போதும் நிலை நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறது. அதன் வடிவம் அதன் கண்களில் நிலைபெற்றிருக்கிறது.
இறைவனின் நாமமே உங்களுக்கான கொடிமரமாகும். அதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அந்த வடிவத்துடன் உங்களைத் தொடர்பு படுத்திக் கொள்ளுங்கள். அந்த வடிவத்தை உங்கள் மனக் கண்ணில் பொருத்திக் கொள்ளுங்கள். இறைவனின் நாமம் உங்கள் இதயத்தில் ஒளி வீசும் விளக்காகும். உங்கள் நாக்கில் இறைவனின் நாமத்தை வையுங்கள்; அது உள்ளே இருக்கும் இருளையும் வெளியே இருக்கும் இருளையும் அகற்றி விடும். உள்ளே சகோதரத்துவம் இல்லாத சாந்தம் தவழும் – இதுவே நாமஜபத்தில் ஈடுபடுவோரின் அடையாளம்.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
இறைவனின் திருநாமம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதைப் பற்றிய சம்பவம் ஒன்று உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு சமயம் ஞானதேவும் நாமதேவும் ஒரு காட்டின் வழியே சென்று கொண்டிருந்தனர். இருவருக்கும் பொறுக்க முடியாதபடி கடும் தாகம் ஏற்பட்டது. அவர்கள் ஒரு கிணற்றைப் பார்த்தனர். ஆனால் நீர் இறைக்க ஒரு பாத்திரமும் இல்லை; கயிறும் இல்லை. கிணறோ அதிக ஆழமுள்ளதாக இருந்தது. இறங்கி நீரை எடுக்க படிகளும் அதில் இல்லை.
பிரம்மஞானத்தை அடைந்திருந்த ஞானதேவ் தன்னை ஒரு பறவையுடன் அடையாளப்படுத்திக் கொண்டார். அது கிணறுக்குள் இறங்கி நன்கு நீரைக் குடித்தது. அவரது தாகம் தணிந்தது. நாமதேவோ கடவுளை அவரது நாமத்தைச் சொல்லி அழைத்தார். அவரும் பதில் சொன்னார்.
கிணற்றில் இருந்த நீர் மெதுவாக மேலெழும்ப ஆரம்பித்தது. அவர் தனது கைகளால் நீரை எடுத்து அருந்தும் படி அதன் மட்டம் உயர்ந்து கொண்டே இருந்தது. அவர் நீரை தன் கைகளால் எடுத்து அருந்தி தன் தாகத்தைத் தணித்துக் கொண்டார்.
நீங்கள் உலகத்தை மிகவும் அருகில் உள்ளதாக, உங்கள் முன்னாலும் பின்னாலும் உள்ளதாகக் கருதுகிறீர்கள். ஆனால் இறைவனைக் குறிக்கும் போது மட்டும் அவரை மிகவும் தள்ளி, மிக மிக உயரத்தில் இருப்பதாகக் காண்பிக்கிறீர்கள். இது பெரும் தவறு. கடவுள் அருகிலேயே இருக்கிறார். உலகம் தள்ளி இருக்கிறது. இந்த உண்மைக்குப் பயந்து உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டு வேறு மாதிரியாக நம்புகிறீர்கள்.
அதிக வெள்ளம் கொண்டு ஓடும் ஒரு நதியில் ஒரு படைத் தளபதி ஒரு சமயம் தனது மந்திரியுடனும் அரசனுடனும் சென்று கொண்டிருந்தான். அவனுக்கு படகில் இருக்க மிகவும் பயமாக இருந்தது. அவன் உடல் நடுங்க ஆரம்பித்தது. ஆகவே அவனது மந்திரி அவனை வெள்ளத்திற்குள் தள்ளி விட்டார். உடனே அவன் தன்னை படகில் சேர்க்குமாறு ஒவேன்று கத்தினான். அப்போது தான் அவனுக்கு படகில் இருக்கும் சௌகரியமும், படகின் மதிப்பும் புரிந்தது. அதாவது ஆதாரத்தின் மதிப்பை அவன் புரிந்து கொண்டான்.
இறைவனே ஆதாரம். உலகமே ஆதேயம். அடிப்படை விஷயம் ஒருவனுக்கு உள்ளேயே இருக்கிறது. மிக நெருங்கிய நண்பன், ஆதாரமாக உள்ள மூச்சாகவும் தனிப்பட்டவரின் வாழ்க்கையாகவும் அமைபவன், மிக அருகில் உள்ளான்.
இறைவனைப் பற்றிக் கேட்கும் போது அவனை எப்படி நீங்கள் தூரத்தில் உள்ளவனாகக் குறிப்பிடலாம்? அவனது நாமம், எந்தப் பெயர் உங்களுக்குப் பிடிக்கிறதோ அந்த நாமம், நெருங்கிய ஆழமான உணர்வாலும் உங்களைப் பொறுத்தமட்டில் அமைகிறது.