

மனித நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டே தன் அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்ப்பதில் மனிதனுக்கு ஆர்வம் எப்போதும் உண்டு; அதற்குச் சிறந்த உதாரணம் தான் லாட்டரி சீட்டுகள்! வாருங்கள், லாட்டரியின் வரலாறு மற்றும் வியக்க வைக்கும் அந்த அதிர்ஷ்டக் கதைகளுக்குள் நீங்களும் பயணிக்கலாம்!
உலகில் முதன் முதலாக லாட்டரி சீட்டு 15 - ம் நூற்றாண்டில் ரோம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் குலுக்கல் முறையில் கப்பல்கள், வீடுகள், அடிமை ஆட்கள் பரிசளிக்கப்பட்டது. அதையடுத்து அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் லாட்டரி சீட்டுக்களை ஆரம்பித்தன. இங்கிலாந்து நாட்டில் 1612 ம் ஆண்டு லாட்டரி மூலம் கிடைத்த லாபத்தை கொண்டு அருங்காட்சியகம், மருத்துவமனைகள், பாலங்கள் முதலானவை கட்டப்பட்டன. ரஷ்ய அரசும் இரண்டாம் உலகப் போர்களுக்கு பிறகு லாட்டரி குலுக்கலை ஆரம்பித்தது.
ஆங்கில வார்த்தையான 'லாட்டரி' என்பது 'லாட்' என்ற டச்சு வார்த்தையிலிருந்து உருவானது. 'லாட்' என்ற சொல்லுக்கு 'விதி' என்று அர்த்தம். ரோமானியப் பேரரசுக்குப் பிந்தைய தனது முதல் லாட்டரியை 1449-ல் இத்தாலிய நகரமான மிலன் நடத்தியபோது, 'Lot' என்ற சொல் 'lotto' என ஆகி பின்னர் lottery (லாட்டரி) ஆனது.
பண்டைய சீனாவில் ஹான் வம்ச காலத்தில் (கி.மு. 205 - 187) சீனப் பெருஞ்சுவர் போன்ற அரசுப் பணிகளுக்கு நிதி திரட்ட லாட்டரி சீட்டுகள் பயன்பட்டன. ரோமானியப் பேரரசர் அகஸ்டஸ் காலத்தில் நகரைச் சீரமைக்க முதல்முறையாக லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. அமெரிக்காவின் தொடக்க காலத்தில் பெஞ்சமின் ஃபிராங்க்கலின் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் போன்ற தலைவர்கள் பொது நலனுக்காக லாட்டரி முறைகளைப் பயன்படுத்தினர்.
முதல் பொது லாட்டரி, 1445 ஆம் ஆண்டில் ஒரு டச்சு நகரத்தில் நடத்தப்பட்டது. அது 1,737 ஃபுளோரின்கள், அதாவது இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட €200,000 பரிசை வழங்கியது. அந்த லாட்டரியில் 4,300-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. அதன் மூலம் கிடைத்த லாபம், நகரத்தின் உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கும், ஏழைகளுக்கு உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்டது.
இந்த நீண்ட லாட்டரி பாரம்பரியத்தின் காரணமாக, நெதர்லாந்து தேசிய லாட்டரி இன்றும் உலகின் மிக நீண்ட காலமாக நடைபெறும் லாட்டரியாகத் திகழ்கிறது.
இந்தியாவிற்கே லாட்டரி விசயத்தில் முன்னோடியாக இருப்பது கேரளா மாநிலம் தான்.
1967-லேயே லாட்டரி சீட்டை அறிமுகப்படுத்த முடிவு செய்துவிட்டது அப்போதைய கேரள அரசு. அப்போது கேரளா நிதியமைச்சராக இருந்த பி.கே.குஞ்சுப் சாகிப் லாட்டரிக்கு வித்திட்டார். அதன் முதன் பரிசுக் குலுக்கல் 1968 – ஜனவரி 26 அன்று நடந்தது. அப்போது முதல் பரிசாக அறிவிக்கப்பட்டது.
ரூபாய் 50,000 அதன் பிறகு தற்போது லாட்டரி பம்பர் பரிசு 12 கோடி அளவில் உயர்ந்துவிட்டது. அதோடு தினமும் வெவ்வேறு லாட்டரி பரிசு குலுக்களில் அங்கு நடந்துகொண்டு இருக்கின்றன. லாட்டரிக்காக தனியாக அரசு துறையையே இருக்கிறது. அதில் 500 பேர் வரை நிரந்தர ஊழியர்களாக இருக்கின்றனர்.
உலகின் அதிகபட்ச லாட்டரி பரிசாக அமெரிக்காவின் பவர் பால் (Powerball) லாட்டரி உள்ளது. 2.04 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.16,800 கோடி) சாதனைப் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் பல நாடுகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது. அதில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் சிலவற்றின் தொகுப்பு இங்கே...
முதல் லாட்டரி டிக்கெட்டிலேயே 3 கோடி வென்ற இளம்பெண்:
அதிர்ஷ்டம் எப்போது, எங்கு வந்து சேரும் என்பதை யாரும் கணிக்க முடியாது என்பதை நிரூபிக்க உலகில் சில நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள்...
அமெரிக்காவில் நார்த் கரோலினா மாநிலம் காஸ்டோனியாவில் வசிக்கும் காலா ஜெஃப்ரிஸ் (Kahla Jeffries) என்ற இளம் பெண், தனது வாழ்க்கையில் முதல் முறையாக 2026 ம் ஆண்டு ஜூலை மாதம் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிலேயே 100,000 டாலர்( 6.36 கோடி ரூபாய்) வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
காலா, ஹிக்கரி க்ரோவ் ரோடில் உள்ள Will’s Food Store-ல் பெட்ரோல் நிரப்பச் சென்றபோது, தனது அதிர்ஷ்டத்தை ஒருமுறை சோதனை செய்து பார்க்கலாம் என 'Cash Payday' என்ற ஸ்கிராட்ச்-ஆஃப் டிக்கெட்டை வாங்கினார். அதைச் சுரண்டியபோது, அவர் வெற்றி பெற்றிருப்பதை அறிந்தார். “நான் பார்த்தது சரி தானா என்று முதலில் நம்பவே முடியவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.
அவர் வெற்றியை உறுதிப்படுத்திய பின், நார்த் கரோலினா எஜுகேஷன் லாட்டரி அலுவலகத்தில் சென்று பரிசை பெற்றார். மாநில மற்றும் கூட்டாட்சி வரிகள் கழிக்கப்பட்ட பின், அவர் 72,018 டாலர் தொகையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.
பிறந்தநாள் எண் மூலம் ரூ.9.5 கோடி லாட்டரி:
அமெரிக்காவின் வட கரோலினா கல்வி லாட்டரி, புதிதாக டிரிபிள் ரெட் 777 ஜாக்பாட் என்ற லாட்டரியை 2026 ம் ஆண்டு தொடங்கியது. மாண்ட்கோமெரி கவுன்டியில் உள்ள பிஸ்கோவைச் சேர்ந்த தோமஸ் முனோஸ் என்பவர், கேண்டரில் உள்ள சவுத் மெயின் தெருவில் இருக்கும் கேண்டர் வி மார்ட் கடையில் 10 டாலர் மதிப்புள்ள 'டிரிபிள் ரெட் 777 ஜாக்பாட்' டிக்கெட்டை பார்த்துள்ளார்.
அவரின் பிறந்த ஆண்டு 1977 மற்றும் பிறந்தநாள் 7 ஆம் தேதி என்பதால் அதனை தனது வாழ்வின் அதிர்ஷ்டமான எண்ணாக கருதி வந்துள்ளார். அதனால் இந்த டிரிபிள் ரெட் 777 ஜாக்பாட்டை கண்டதும் அதனை 2026 ஜூலை மாதம் உடனே வாங்கியுள்ளார்.
அந்த கடையில் வைத்தே லாட்டரி டிக்கெட்டை சுரண்டிய அவர், 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.9.5 கோடி) முதல் பரிசு வென்றார். இதை நினைத்து சந்தோஷத்தில் குதித்துள்ளார்.
வாசகர்கள் உலகின் பழமையான லாட்டரி வரலாற்றையும், கோடீஸ்வரர்களான விசித்திர மனிதர்களின் வாழ்வியல் திருப்பங்களையும் தெரிந்துகொள்வதன் மூலம், உலகளாவிய சுவாரஸ்யத் தகவல்களை முழுமையாகப் பெற்று தங்களின் பொது அறிவையும் பொழுதுபோக்குத் தேடலையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.