மகாத்மா காந்தியின் பிறப்பு முதல் இறப்பு வரை நடந்த போராட்டங்கள்!

போர்பந்தரில் பிறந்து அகிம்சையால் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியின் முழு வாழ்க்கை வரலாறு மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள்.
மகாத்மா காந்தி | Mahatma Gandhi
மகாத்மா காந்தி | Mahatma Gandhi
நடேஷ் கன்னா

என் பெயர் நடேஷ் கன்னா. எனது உண்மை பெயர் சிவராம சுப்ரமணியன். எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு. தற்போது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கடந்த 57 ஆண்டுகளாக பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறேன். சிறுகதை கட்டுரைகள் கவிதைகள் துணுக்குகள் ஜோக்ஸ் என எழுதி உள்ளேன். நான் கல்கி, தீபம், மங்கையர் மலர், குமுதம், விகடன், சாவி இதயம் பேசுகிறது முத்தாரம், ராணி, தேவி, ஜூனியர் விகடன், நக்கீரன், துக்ளக், தினமலர், போன்ற அனைத்து பத்திரிகைகளுக்கும் எழுதியுள்ளேன். எனக்கு ஆரம்ப காலத்தில் எழுத தூண்டியது கல்கி வார இதழ். அதில் நான் எழுதிய முதல் துணுக்கு இடம் பெற்றது அன்றிலிருந்து இன்று வரை எழுதி வருகிறேன். நான் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. என்னை எழுத தூண்டிய கல்கிக்கு வாழ்த்துக்கள்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

போர்பந்தரில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, உலகையே அகிம்சையால் வியக்க வைத்த மகாத்மா காந்தியின் வாழ்க்கை ஒரு சரித்திரம் மட்டுமல்ல, மாபெரும் போராட்டம்! பூமியை இரண்டு முறை சுற்றிய தூரம் நடந்த இந்த மகாத்மாவின் உத்வேகம் நிறைந்த வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்து வாசித்து பல புதிய உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள்!

அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத் போர்பந்தரில் 2. 10. 1869 இல் பிறந்தார்.

தந்தை பெயர் கரம்சந்த் உத்தம் சந்காந்தி. தாயார் பெயர் புதிலி பாய். காந்திஜி அவரது வீட்டில் இறுதியாக பிறந்த குழந்தை. அவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உண்டு.

ராஜ் கோட்டில்பயின்றபோது, தன் சிறு வயதில் கஸ்தூரிபாய் மணந்து கொண்டார். அவரது பதினாறாவது வயதில் அவரது தந்தை மரணம் அடைந்தார். தனது 19ஆவது வயதில் கல்வி பயில லண்டன் புறப்பட்டார். காந்திஜி முதன்முதலாக பகவத் கீதையை படிக்கும் போது அவரது வயது 20. இங்கிலாந்து சென்று படிப்பை முடித்துக் கொண்டு மூன்று ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார். மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார்.

1893 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு ஏற்பட்ட நிறவெறி அவரை நிறவெறிக்கு எதிராக போராடத் தூண்டியது. இதன் காரணமாக நிறவெறிக்கு எதிராக போராட அங்கு காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தார். தென்னாப்பிரிக்கா உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றினார். 1920 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியும் கல்கத்தாவில் கோகலே உடன் தங்கினார்.

தென் ஆப்பிரிக்காவில் குடியுரிமை தொடர்பாக போராட்டம் நடத்தினார். அப்போது தென்னாப்பிரிக்காவில் பிளேக் நோய் ஏற்பட்டது. அந்த நோய் குறித்தும் உணவு பழக்க வழக்கங்கள் குறித்தும் புத்தகம் எழுதினார். 1905 இல் நடைபெற்ற போராட்டத்தில் பிரிட்டிஷார் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படியுங்கள்:
மாணவர்கள் அரசு ஸ்காலர்ஷிப் வாங்குவது எப்படி? பலரும் அறியாத சீக்ரெட் ரூல்ஸ்!
மகாத்மா காந்தி | Mahatma Gandhi

1906 ஆம் ஆண்டு தன் அண்ணனுக்கு எழுதிய கடிதத்தில் உலகத்தில் உள்ள பிற பொருள்களை வெறுப்பதாக கூறியிருந்தார். லண்டனில் இருந்த போது ஆசிரியர்களுக்கு கொண்டு வந்த தனி சட்டத்தை எதிர்த்து போராடினார். அதற்கு சத்தியாகிரகம் என பெயரிட்டார். ரன்வால் பகுதியை விட்டு வெளியேறாத காரணத்தால் காந்திஜிக்கு இரண்டு மாத கடுங்காவல தண்டனை விதிக்கப்பட்டது.

அதன் பிறகு இந்திய தேசிய காங்கிரசை தென்னாப்பிரிக்காவில் நிறுவினார். அதற்காக மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவித்தார்.

இங்கிலாந்தில் பிரிட்டிஷ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மீண்டும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிட்டிஷ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதன் மூலம் ஆசிரியர்களுக்கான தனி சட்டம் கைவிடப்பட்டது.

காந்திஜி கோகலே தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். 1912 ல் ஐரோப்பிய உடைகள் உணவுகளை கைவிட்டு உலர்ந்த பழங்களை சாப்பிட்டு வந்தார்.

இவர் நடத்திய அறவழிப் போராட்டத்தில் இவர்கள் மனைவி கஸ்தூர்பாகலந்து கொண்டார்.

வரிவிதிப்புகளை கைவிடும் வரை போராட்டம் நடத்தினார். 1915 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பினார்.

மகாத்மா காந்தி | Mahatma Gandhi
மகாத்மா காந்தி | Mahatma Gandhi

பிரிட்டிஷ் அரசு இவருக்கு கைசர் விருது வழங்கி கவுரவித்தது.

அகமதாபாத்தில் சத்தியாகிரகம் ஆசிரமம் தொடங்கினார்.

இது சபர்மதி ஆசிரமம் என அழைக்கப்பட்டது. இங்குதான் காந்திஜி ராட்டையை அறிமுகம் செய்து வைத்தார். 1918 இல் நடைபெற்ற முதல் உலகப்போரில் வீரர்களை தயார்படுத்தினார். 1919 ஆம் ஆண்டு ரவுலட் சட்டத்தை எதிர்த்தார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். நவஜீவன் யங் இந்தியா பத்திரிகை ஆசிரியராக பணிபுரிந்தார்.

1921 இல் நாடு முழுவதும் பயணித்து ஒரு கோடி நிதி உதவியை திரட்டினார். 20 லட்சம் ராட்டைகளை பயன்படுத்த வழிவகை செய்தார். சபர்மதி ஆசிரமத்தில் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

1930 இல் உப்புக்கு வரி விதித்ததை கண்டித்து போராட்டம் நடத்தினார்.

மீண்டும் கைது செய்யப்பட்டு 1931 விடுதலை ஆனார். 1933 ஹரிசன் என்ற இதழைத் தொடங்கினார்.

1942 ல் பிரிட்டிஷ் அரசை வெளியேற்ற உத்தரவிட்டார். 1944 இல் இவரது மனைவி கஸ்தூரிபாய் மரணம் அடைந்தார். 1946 இல் காங்கிரஸ் கட்சியை தற்காலிகமாக அமைத்தார்.

1947 ஆகஸ்ட் 14 பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது.

பாகிஸ்தான் பிரிந்து தனி நாடாக மாறியது.

1948 இல் ஜனவரி 30 ஆம் தேதி கோட்சே என்பவரால் சுடப்பட்டு இறந்தார். 1948 பிப்ரவரி 12ஆம் தேதி யமுனை நதிக்கரையில் காந்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

அவரது சாம்பல் பல இடங்களில் கரைக்கப்பட்டது. இன்றும் ஆக கான் அரண்மனையில் காந்தியின் சாம்பல் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அக்காலத்தில் காந்தியின் இறுதி ஊர்வலம் 5 மைல் நீளம் காணப்பட்டது.

1913 முதல் 1938 வரை காந்தி நடந்த தூரம் பூமியை இரண்டு முறை சுற்றுவதற்கு சமமாகும்.

இதையும் படியுங்கள்:
தியேட்டர்களில் படம் ஆரம்பிக்க 22 நிமிடம் தாமதம்... ரசிகர் தொடர்ந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு!
மகாத்மா காந்தி | Mahatma Gandhi

காந்தியின் பெயரால் இந்தியாவில் 53 சாலைகளும் மற்ற நாடுகளில் 48 சாலைகளுக்கு காந்தியின் பெயரும் வைக்கப்பட்டுள்ளது. ரவீந்திரநாத் தாகூர் காந்திஜிக்கு மகாத்மா என்ற பட்டத்தை வழங்கினார்.

2007 ஆம் ஆண்டு ஐநா சபையில் காந்திஜி நினைவாக அகிம்சை சர்வதேச தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தத் தொகுப்பின் மூலம் மகாத்மா காந்தியின் உத்வேகமளிக்கும் வாழ்க்கை முறையை அறிந்துகொள்வதுடன், உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் தலைமையைச் செலுத்தவும், எத்தகைய சவால்களையும் அகிம்சை வழியில் எதிர்கொள்ளும் மன உறுதியைப் பெறவும் முடியும்.

logo
Kalki Online
kalkionline.com