மாணவர்கள் அரசு ஸ்காலர்ஷிப் வாங்குவது எப்படி? பலரும் அறியாத சீக்ரெட் ரூல்ஸ்!

மத்திய மற்றும் மாநில அரசின் கல்வி உதவித்தொகை (Scholarship) பெற யார் தகுதியானவர்கள்? OTR முறை மற்றும் ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்காலர்ஷிப் | Apply scholarship in CSC
ஸ்காலர்ஷிப் | Apply scholarship in CSCImage credit: Gemini AI
A.N.ராகுல்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராகுல் நான் ஒரு பொறியியல் பட்டதாரி, தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் எழுத்து துறையில் என்னை இணைத்துள்ளேன். என்னுடைய பொதுவான குறிக்கோள் நான் செய்யும் விஷயங்களால் மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்பதே, அதை என் தாய்மொழி மூலம் இந்த எழுத்து துறையின் வாயிலாக பங்காற்ற விரும்புகிறேன். ஆக வாசகர்களே நீங்கள் என் சேகரிப்புகளை பொழுதுபோக்கு, பொது அறிவு என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இறுதியில் நீங்கள் பெரும் அந்த திருப்திகரமான உணர்வே, நான் எழுதுவதற்கு கிடைத்த பலன்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

பள்ளி, கல்லூரி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை வழங்கி வருகின்றன. ஆனால் விழிப்புணர்வு இல்லாததால் பலரும் இத்தகைய வாய்ப்புகளைத் தவறவிடுகின்றனர். தகுதி வாய்ந்த அனைவரும் எளிதில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெற முடியும். அந்த வகையில், மாணவர்கள் அரசு ஸ்காலர்ஷிப் பெற எளிய வழிமுறைகள் குறித்த முழுமையான தகவல்களை அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

நானும் இதுவரைக்கும் எந்த கவர்மெண்ட் ஸ்காலர்ஷிபையும் வாங்கினதே இல்லைங்க! ஆனா, நம்ம ஊர் பசங்க யாரும் இந்த வாய்ப்பை விடக் கூடாதுன்னு மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (NSP), அப்பறம் தமிழ்நாட்டின் மாநில ஸ்காலர்ஷிப் போர்ட்டல் (Portal) போன்ற வெப்சைட்டுகளில் இருக்குற ஒரிஜினல் தகவல்களை வச்சு செமையா ரிசர்ச் பண்ணி இந்த டீடைல்ஸ் எல்லாம் ரெடி பண்ணியிருக்கேன். நம்ம ஊர்ல பல பேரு ஸ்காலர்ஷிப்னாலே அது ஏழை பசங்களுக்கு, இல்லைனா டாப்பர் பசங்களுக்கு மட்டும்தான் கிடைக்கும்னு தப்பா நினைச்சுட்டு இருக்காங்க.

ஆனா நிஜத்துல, நீங்க ஸ்கூல், டிப்ளமோ, டிகிரி இல்லனா PG எது படிச்சாலும் உங்க கம்யூனிட்டி, குடும்ப வருமானம், உடம்புல ஏதாச்சும் குறைபாடு இருக்குறது (மாற்றுத்திறனாளி), பாலினம், மார்க்ஸ் வச்சு என்று ஏகப்பட்ட ஸ்காலர்ஷிப்கள் காத்துட்டு இருக்கு.

இதையும் படியுங்கள்:
பேருந்து ஊழியர்களின் காக்கிச் சீருடைக்குப் பின் இருக்கும் சுவாரஸ்யமான வரலாறு!
ஸ்காலர்ஷிப் | Apply scholarship in CSC

மத்திய அரசோட திட்டங்களுக்கு NSP வெப்சைட்டும், நம்ம ஊர் மாநில திட்டங்களுக்குத் தமிழ்நாட்டின் SSP வெப்சைட்டும் இந்த தகவல் எல்லாம் தராங்க. இங்க ஒரு சூப்பரான சீக்ரெட் என்னன்னா, நீங்க கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சீங்களா, இல்ல பிரைவேட்ல படிச்சீங்களாங்கிறதை விட, அந்தந்த ஸ்காலர்ஷிப்ப அப்ளை பண்றதுக்கான ரூல்ஸை கரெக்டா ஃபாலோ பண்றீங்களாங்கிறதுதான் முக்கியம். வருமான வரம்பு, மார்க், ஆதார் கார்டு லிங்க் பண்ணின பேங்க் அக்கவுண்ட், அப்புறம் அதிகாரிகளோட வெரிஃபிகேஷன் (Verification) இதெல்லாம் கரெக்டா இருந்தாலே போதும். தேசிய அளவில் பிஎம்-யுஎஸ்பி (PM-USP) மத்திய துறை திட்டம் (CSSS); SC, ST, OBC மற்றும் சிறுபான்மையினருக்கான போஸ்ட்-மெட்ரிக் ஸ்காலர்ஷிப்கள் (Post-Matric Scholarships), யுஜிசி, ஏஐசிடிஇ (UGC, AICTE) திட்டங்கள்னு ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருக்கு.

அதே மாதிரி நம்ம தமிழ்நாடு அரசும் சப்போர்ட் பண்ணுது. BC, MBC, DNC, SC, SCA, SCC and ST மாணவர்களுக்கான போஸ்ட்-மெட்ரிக் உதவித்தொகை, புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டதாரி சலுகைனு ஏகப்பட்ட சான்ஸ் இருக்கு. நிறைய பேருக்கு இருக்குற பெரிய டவுட் என்னென்ன, வயசு கொஞ்சம் அதிகமானவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்குமானு டவுட்தான். ஆனா முக்காவாசி காலேஜ் ஸ்காலர்ஷிப்களுக்கு ‘இவளோ வயசுக்குள்ளதான் இருக்கணும்னு எந்த வயது வரம்பும் கிடையாது!’ அதனால கவலைப்பட வேண்டாம்.

ஸ்காலர்ஷிப் | A woman successfully Apply scholarship
ஸ்காலர்ஷிப் | A woman successfully Apply scholarshipImage credit: Gemini AI

இன்னொரு வியக்கத்தக்க உண்மை என்னன்னா, எல்லாரும் ஒரே நேரத்துல ஒரு ஸ்காலர்ஷிப் மட்டும்தான் வாங்க முடியும்னு நினைக்கிறாங்க. ஆனா, தகுதி இருந்தா நீங்க ஒரு மெரிட் ஸ்காலர்ஷிப்போட சேர்த்து, மத்த கவர்மெண்ட் ஸ்கீம்ஸ் (Schemes) ஸ்காலர்ஷிப்களுக்கும் தாராளமா விண்ணப்பிக்கலாம்னு என்எஸ்பி (NSP) வெப்சைட்லயே சொல்லியிருக்காங்க. சோ, ஆன்லைன்ல ஏமாந்துடாம இருக்க (NIC) வெப்சைட்டுகளை மட்டும் நம்புங்க.

இதுல இப்போ OTR அதாவது ‘One time Registration’னு ஒரு புது சிஸ்டம் கொண்டு வந்திருக்காங்க. இதுல உங்களுக்குன்னு ஒரு 14 டிஜிட் யூனிக் நம்பர் தருவாங்க. இதனால நீங்க ஒவ்வொரு வருஷமும் புதுசா ரெஜிஸ்டர் பண்ணத் தேவையில்லை. மாற்றுத்திறனாளி மாணவர்கள் மட்டும் முதல்ல UDID போர்டல்ல Login பண்ணி ஓகே சொல்லிட்டு அப்புறமா அப்ளை பண்ணனும். உங்களுக்கு மொபைலில் ஃபேஸ் ஆதென்டிகேஷன் (Face Authentication) பண்ணும்போது ஏதாச்சும் பிரச்னை வந்த Play store ல போய் அப்ளிகேஷனை அப்டேட் பண்ணிக்கோங்க.

இதையும் படியுங்கள்:
நேத்து நைட் சரியா தூங்கலையா?அடுத்த நாளை டயர்ட் இல்லாம ஓட்ட 5 எளிய வழிகள்!
ஸ்காலர்ஷிப் | Apply scholarship in CSC

அப்புறம் உங்க ஆதார் பயோமெட்ரிக் (Biometric) லாக் ஆகாம இருக்கான்னு mAadhaar ஆப்ல செக் பண்ணிக்கிறது ரொம்ப நல்லது. உங்களுக்கு ஆன்லைன்ல அப்ளை பண்ண கஷ்டமா இருந்தா பக்கத்துல இருக்குற பொதுச்சேவை மையத்துக்கு (CSC) போனா வெறும் முப்பது ரூபாயில் பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் பண்ணி அப்ளிகேஷனை சப்மிட் பண்ணிடுவாங்க. நீங்க அப்ளை பண்ணின அப்புறம் உங்க ஸ்கூல், காலேஜ் படிப்பு சம்பந்தமான (L1) வெரிஃபிகேஷன் (Verification) நடக்கும், அதுக்கப்புறம் மாவட்ட லெவல்ல (L2) வெரிஃபிகேஷனும் நடக்கும்.

இது முடிஞ்ச அப்புறம் அரசோட பிஎஃப்எம்எஸ் (PFMS) மூலம் ‘படிக்க தேவையான பணம் உங்க பேங்க் அக்கவுண்ட்டுக்கு கிரெடிட் ஆகிடும்’.

சுருக்கமா சொன்னா, எல்லா ஸ்காலர்ஷிப் பத்தியும் தெளிவா தெரிஞ்சு வச்சுக்கிறது, படிக்க ஆசைப்படறவங்களின் பணத்தை ரொம்பவே மிச்சம் பண்ணும்! அதனாலதான் டைம் வேஸ்ட் பண்ணாம ரொம்ப 'ஸ்மார்ட்டா' சீக்கிரமா விண்ணப்பிச்சிடுங்க!

மாணவர்கள் எவ்வித நிதித் தடையுமின்றி தங்களின் உயர்கல்விக் கனவுகளை வெற்றிகரமாக நனவாக்க ஏதுவாகிறது.

logo
Kalki Online
kalkionline.com