Matrescence: "பிறந்த குழந்தைக்குக் கிடைக்கும் கவனிப்பு தாய்க்கு இல்லை..."- மனநல ஆலோசகரின் ஆதங்கம்!

குழந்தை பெற்ற புதிய தாய்க்கு ஏற்படும் மனமாற்றங்களும், குடும்பத்தினர் செய்ய வேண்டிய உதவிகளும்....
தாய்மைப் பருவம் - postpartum depression
தாய்மைப் பருவம் - postpartum depression Matrescence
Dr. Rati Khurana

Dr Rati Khurana is a mental health practitioner in New Delhi with a PhD in Clinical Psychology, an Associate Professor and a certified CBT and EFT practitioner, with 50+ publications, research papers and workshops. Her book for new mothers, She Was Also Born That Day, is an Amazon bestseller.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

- Article written in English by Dr. Rati Khurana

- Tamil Translation by Padmini Pattabiraman

"ஒரு குழந்தை பிறக்கும்போது, ​​ஒரு தாயும் பிறக்கிறாள். ஆனால், அவள் வளர்வதற்கு ஏன் யாரும் அதே அளவு நேரத்தை அவளுக்கு கொடுப்பதில்லை?

பிரசவத்திற்குப் பிறகு மருத்துவமனை அறைக்கு வரும் பார்வையாளர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர்கள் குழந்தையைத் தூக்கிப்பிடித்து, அதன் எடை எவ்வளவு என்றும், அது யாரைப்போல் இருக்கிறது என்றும் கேட்கிறார்கள். ஆனால், அவர்களில் எத்தனை பேர் தாயைப் பற்றி விசாரித்து, அவள் எப்படி இருக்கிறாள், எப்படி அந்த தாய்மையை உணர்கிறாள் என்று கேட்கிறார்கள்? உண்மையைச் சொன்னால், மிகச் சிலரே! அதேதான், இரண்டாவது பிரசவம் நடந்தாலும் கூட...

சமீபத்தில், கே.எஸ். கிருஷ்ணவேணி கல்கி ஆன்லைனில், ஒரு பெண்ணின் உடல், மனம், ஹார்மோன்கள் மற்றும் உறவுகளில் ஏற்படும் மாற்றமே தாய்மைப் பருவம் (matrescence) என்று விளக்கி இருந்தார்.

ஒரு மனநல ஆலோசகராகவும், ஒரு தாயாகவும், எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் கடமைப்பட்டிருக்கிறேன்..."

- Dr. Rati Khurana, Ph.D., Clinical Psychology, Associate Professor · Certified CBT & EFT Practitioner.

தாய்மைப் பருவம் - postpartum depression
Dr. Rati Khurana - தாய்மைப் பருவம் .

Matrescence என்பது ஒரு பெண் தாயாக மாறும் காலகட்டத்தில் ஏற்படும் உடல், மனரீதியான, உணர்வு பூர்வமான மற்றும் சமூக ரீதியான மாற்றங்களின் செயல்முறை ஆகும். பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தின் மனநலச் சவால்களைப் பற்றி விவாதிப்பது, சமீபத்திய ஆண்டுகளில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

1970களில், Dana Raphael என்னும் அமெரிக்க மானுடவியலாளர் (anthropologist), “கவனிக்கப்படாத முக்கியமான மாற்றக்காலம் என்பது தாய்மை அடையும் பருவமாகும். குழந்தை பெற்றெடுப்பது ஒரு பெண்ணைத் தானாகவே தாயாக்கிவிடுவதில்லை... தாயாவதற்கு ஆகும் கால அளவு குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஒரு பெண்ணின் மூளையை முதல் குழந்தைப்பேறுக்கு முன்னும் பின்னும் ஸ்கேன் செய்து சோதனைகள் நடத்திய போது, மற்றவர்களை உணர்ந்துகொள்ளும் பகுதியில் மாற்றங்கள் இருப்பதையும், குழந்தையைப் பேணுவதற்காக மூளை தன்னைத் தயார் செய்து கொள்வதால் ஏற்படும் தாய்மைப் பருவம் மாற்றங்கள் இவை என்றும் கண்டுபிடித்தனர்.

பருவமடையும் பதிமூன்று வயதுப்பெண் குழந்தையின் உடலிலும் மனநிலையிலும் எப்படி மாற்றங்கள் நிகழ்கிறதோ, அதுபோல் Matrescence போதும், முதல் குழந்தை பெற்ற பெண்ணிடமும் ஹார்மோன் மற்றும் சமூக ரீதியிலான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ஒரு டீன் வயதுப் பெண், தன்னை நார்மல் ஆக்கிக்கொள்ள சில வருடங்கள் ஆகலாம்.

ஆனால் முதல் குழந்தை பெற்ற தாய், ஆறு வாரங்கள் ஆனவுடனே நார்மலாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

தாய்மைப் பருவம் - postpartum depression
தாய்மைப் பருவம் - postpartum depression

என்னதான் தன் மகவை நேசித்தாலும், இரவு முழுவதும் நிம்மதியாகத் தூங்குவதும், சூடாக ஒரு கப் டீ குடிப்பதும் இல்லாமல் போகும்போது அவள் நினைக்கலாம் ”ஒரு குழந்தையின் அம்மா என்பதால் எல்லாவற்றையும் நான் ஏன் இழக்கவேண்டும்?“ என்று. அதே சமயம், "என் குழந்தையை யார் கவனிப்பார்கள்?" என்ற தாய்மை உணர்வும் ஏற்படும்.

இரண்டு உணர்வுகளுமே நார்மல்தான். ஒரு பெரிய மாற்றம் வரும்போது பின்னால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், முதலில் கடினமாகத்தான் இருக்கும்.

Matrescence என்பதும் Postpartum depression என்பதும் ஒன்றா?

இல்லை.

Matrescence, விடலைப் பருவம்போல ஒரு சாதாரணமான நிலைதான்.

ஆனால், Postpartum depression என்பது கர்ப்ப காலத்திலும் குழந்தை பிறந்த முதல் வருடத்திலும் ஏற்படும் ஒருவித மன அழுத்தம்.

அழுகை, சோகமான மனநிலை, கவலை, வெற்று உணர்வு இவையெல்லாம் இருக்கும். இதற்கு மருத்துவக் கண்காணிப்பு தேவை.

தமிழ் நாட்டின் கிராமப் பகுதிகளில் இருக்கும் பெண்களில் 11 சதவீதத்தினருக்கு இந்த மன அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

தாய்மைப் பருவம் - postpartum depression
தாய்மைப் பருவம் - postpartum depression

இதை ஓரளவு சரிசெய்ய அந்தப் பெண்ணின் கணவரால் முடியும்.

ஒரு கணவர் என்ன செய்யவேண்டும்?

குழந்தை பெற்ற மனைவிக்கு உதவுவது மட்டுமின்றி, பெற்றோரில் ஒருவராக (shared parenting) பொறுப்பேற்க வேண்டும். இரவு குழந்தைக்கு உணவு தருதல் போன்ற வேலகளில் பங்கேற்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் அவள் நலத்தில் கவனம் எடுத்து விசாரிக்க வேண்டும். அறிவுரைகள் சொல்வதோ, தன் கருத்துக்களைத் திணிப்பதோ கூடாது.

“உங்கள் பெற்றோரின் அறிவுரைகள் அவளுக்கு அழுத்தம் கொடுத்தால், அவர்களிடம் மென்மையாகப்பேசி, புரிய வையுங்கள். தனியாக அவளை உங்கள் பெற்றோருடன் பேசவிடாதீர்கள்” என்பது கணவர்களுக்கு தரப்படும் அறிவுரை.

இதையும் படியுங்கள்:
பள்ளிக்குப் போக பயப்படும் குழந்தையை மிரட்டாதீங்க! மனதை உலுக்கும் உளவியல் உண்மைகள்!
தாய்மைப் பருவம் - postpartum depression

மாமியாரின் பொறுப்பு…

தமிழ் நாட்டில் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சிகளின்படி குழந்தை பெற்ற பெண்ணுக்கு, உதவி தேவைப்படும் நிலையில் மாமியார் மற்றும் பெற்றோர் தரும் பிரச்னைகளால், Postpartum depression ஏற்படுகிறது. வீட்டில் சமையல் முதலான வேலைகளைச் செய்து, மருமகள் தூங்கும்போது குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும். மருமகளைப் பாராட்டும் விதமாக பேசவேண்டும். 'நீ ஒரு சிறந்த அம்மாவாக உருவாகி வருகிறாய்' என்று புகழவேண்டும்.

முதல் குழந்தை பெற்ற பெண்கள், தாங்கள் எதையோ இழந்துவிட்டதாக வருத்தப்பட வேண்டாம். இது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வரும் காலகட்டம். பொறுமையோடு எதிர்கொண்டால் இனி வரும் நாட்கள் மகிழ்ச்சி தரும்.

Sources:
1. K.S. Krishnaveni, article on matrescence, Kalki Online, 25 September 2026.
2. Dana Raphael (1975), chapter in Being Female: Reproduction, Power, and Change; quoted in Athan (2024).
3. Aurelie Athan (2024), Perspective on matrescence, Frontiers in Psychiatry, volume 15.
4. Hoekzema, E. et al. (2017), brain changes across a first pregnancy, Nature Neuroscience, 20(2), 287-296.
5. Orchard, Rutherford, Holmes and Jamadar, review on matrescence, Trends in Cognitive Sciences (published online December 2022).
6. Ferrari et al. (2026), depression across the first year after birth, The Lancet Psychiatry.
7. Reveley, Becoming Mum: identity and the transition into motherhood, University of Sunderland.
8. Chandran, Tharyan, Muliyil and Abraham (2002), Postpartum depression in a cohort of women from a rural area of Tamil Nadu, India, British Journal of Psychiatry, 181(6), 499-504.
9. German Federal Ministry of Health, https://www.google.com/url?q=http://gesund.bund.de&source=gmail&ust=1793471819317000&sa=E (2024), Wochenbettdepression (postpartum depression), on symptoms lasting two weeks or more.
10. Press Information Bureau, Ministry of Health and Family Welfare (9 November 2025), Tele-MANAS national mental health helpline, 14416.

இதையும் படியுங்கள்:
புடவை தொட்டில் பாதுகாப்பானதா? குழந்தைகள் தூக்கமும் மருத்துவ உண்மைகளும்!
தாய்மைப் பருவம் - postpartum depression