அம்மாவின் ‘மாஸ் எஸ்கேப்’: வீட்டுப்பத்திரம் அடமானம் வைத்து தொழில் கனவு நனவாக்கிய மகன்!

அரசு திட்ட லோன் பெற ‘வீட்டுப்பத்திரம்’ அடமானம் வைக்க வேண்டிய சூழலில், அப்பாவுக்குத் தெரியாமல் அம்மா துணை நின்ற தைரியமான மகனின் தொழில் பயணம்
son-business-dream
son-business-dream
Updated on
Kalki Strip
Kalki Strip

கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து மேடையில் அம்மாவின் Class ஐடியா… Mass எஸ்கேப்! பற்றிய அனுபவத்தை கேட்டிருந்தோம். அதில் தேர்வான ஐந்து சுவாரஸ்யமான கட்டுரைகளில் நான்காவது கட்டுரை இதோ…

நான் காலேஜ் டிகிரி முடித்ததும் அப்பா ஏதாவது கம்பெனியில் வேலைக்குப்போ என்று சொன்னார். எனக்கு சொந்தத்தொழில் தொடங்க ஆசை. அதனால் 20 தையல் மிஷின்கள் வாங்கி கார்மெண்ட்ஸ் வைக்க முடிவு செய்தேன்.

தொழில் முனைவோருக்கான பிரைம் மினிஸ்டர் ரோஜ்கார் யோஜ்னா திட்டம் (PMRYS.) படி மத்திய அரசு ஒரு லட்சம் ரூபா லோன் கொடுக்கிறது என்றார்கள். 3 மாதம் பயிற்சியில் சேர்ந்து தேர்வு பெற்றேன். ஆனால் வங்கியில் லோன் வாங்க செக்யூரிட்டி கேட்டார்கள். அதாவது ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வீடு அல்லது நிலப்பத்திரம் அடமானம் வைக்க வேண்டும் அல்லது அரசுப்பணியில் இருக்கும் ஒருவர் ஜாமீன் போடவேண்டும்.

அக்கா அரசுப்பணியில் இருந்தார் என்றாலும் ஜாமீன் கையெழுத்துப்போட அப்பா விடமாட்டார். சொந்த அக்காவே ஜாமீன் கையெழுத்துப்போடவில்லை எனில் பிறத்தியார் எப்படி செக்யூரிட்டி சைன் செய்ய முன் வருவார்கள்? என்ன செய்யலாம் என யோசித்த போது அம்மாதான் கை கொடுத்தார். சில வருடங்களுக்கு முன் 3 செண்ட் மதிப்பில் ஒரு வீடு வாங்கி இருந்தனர். அவர்கள் வாங்கிய போது அதன் மதிப்பு ரூ 13,500.(1980). நான் லோன் வாங்க முயற்சித்த 1992ல் அதன் மதிப்பு ஒரு லட்சத்து 70 ஆயிரம். அப்பாவுக்குத் தெரியாமல் ஒரிஜினல் பத்திரத்தை எடுத்துத்தர அம்மாவுக்கு ஆயிரம் நன்றிகள் கூறி பத்திரத்தை வங்கி மேனேஜரிடம் தந்து லோன் பெற்றேன்.

இப்போதுதான் ஒரு சிக்கல். பத்திரத்தைக்காட்டி விட்டு வந்து விடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் பேங்க் மேனேஜர் லோனை அடைத்த பின்புதான் பத்திரம் திருப்பித்தருவோம் என்று சொல்லிவிட்டார்கள். என்ன செய்வது? வீட்டில் பெட்டியில் வீட்டுப்பத்திரம் இருக்கிறதா? என்று அப்பா செக் செய்தால் மாட்டிக் கொள்வோமே? இப்போதுதான் நிறைய க்ரைம் திரில்லர் சினிமாக்கள் பார்த்த அனுபவம் கை கொடுத்தது. ஒரு படத்தில் வில்லன் பத்திரத்தை கலர் ஜெராக்ஸ் எடுத்து பேங்கில் ஏமாற்றுவது போல் காட்சி வரும்.

ஆனால் ரிஸ்க் எடுக்க நான் தயார் இல்லை. ஒரிஜினல் பத்திரத்தை பேங்க் மேனேஜரிடம் கொடுத்தேன். அதன் கலர் ஜெராக்சை. வீட்டில் பெட்டியில் வைத்தேன் அம்மா அதைப்பார்த்து விட்டு நம் வீட்டுப்பத்திரம் 15 வருடங்களுக்கு முந்தையது. பழுப்பு நிறத்தில் இருக்கும். இது வெள்ளை வெளேர் என்று இருக்கிறதே? என்று கேள்வி எழுப்பினார். அம்மா 1950 ல் பிறந்திருந்தாலும் அறிவு ஜாஸ்தி. லாஜிக் மிஸ்டேக்ஸ் எல்லாம் கனகச்சிதமாக யோசிப்பார்.

இதையும் படியுங்கள்:
அழிந்த கலைகள்; அழியாப் பெருமைகள் - 4: கொறத்திக்களி!
son-business-dream

பிறகு என் நண்பனிடம் ஐடியா கேட்டு அதன்படி பிரிண்ட்டிங்க் பிரஸ் வைத்திருக்கும் நண்பரிடம் அந்த ஜெராக்ஸ் பத்திரத்தைக் கொடுத்தேன். அவர் ஏதோ கெமிக்கல் ஸ்ப்ரே செய்து வெள்ளை வெளேர் பக்கங்களைப் பழுப்பாக்கித்தந்தார். கமுக்கமாக அதைக்கொண்டு வந்து வீட்டில் வைத்து விட்டேன்.

இப்போது அடுத்த சிக்கல் எழுந்தது.பேங்க்கில் பத்திரம் யார் பெயரில் இருக்கிறதோ அவர் கையெழுத்துப்போட வேண்டும். பேங்க் மேனேஜருக்கு நான் செய்த தில்லு முல்லு தெரியாது. அப்பாவுக்கு பத்திரம் அடமானத்தில் இருக்கிறது என்பது தெரியாது என்பது பேங்க் மேனேஜருக்குத் தெரியாது.

அம்மா, அப்பாவை அழைத்துக்கொண்டு மேனேஜரைப் பார்க்க பேங்க் போனேன். அம்மாவும், நானும் மட்டும் பேங்க் மேனேஜர் அறைக்குள் போய் பேசினோம். அப்பாவை. வெளியே உட்கார வைத்தோம். அப்பா கூச்ச சுபாவம் அதனால் உள்ளே வரத்தயங்குகிறார். ஏசி வேற அவர்க்கு ஒத்துக்காது என அவரிடம் சமாளித்தேன்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; நினைவுகளே சுகமாக..!
son-business-dream

அப்பாவிடம் பி எம் ஆர் ஒய். ஸ்கீம் ல லோன் வாங்குகிறேன். பெற்றோர் கையொப்பம் தேவை என சொல்கிறார்கள் என அப்பாவை சமாளித்தேன். மேனேஜரும், என் அப்பாவும் சந்திக்காதபடி அம்மா பார்த்துக்கொண்டார். மேனேஜரிடம் பேச்சுக்கொடுத்தார். கையெழுத்துப்போட வேண்டிய ரெஜிஸ்டரில் நான் அப்பாவிடம் வெளியே போய் கையெழுத்து வாங்கி மேனேஜரிடம் கொடுத்து விட்டேன். அப்பாடா எனப்பெருமூச்சு விட்டேன். பிறகு அப்பாவுக்கு விபரம் தெரிந்து அம்மாவிடம் எதிர்த்துப்பேச முடியாமல் என்னிடம் முறைத்துக்கொண்டது வேறு விஷயம்.

logo
Kalki Online
kalkionline.com