

நாமே பரம்பொருள் !
நாமே கடவுள் !
நமக்குள்ளே நம்
அமைதியை தேடுவோம் !
அந்தத் தேடுதல்,
நமக்கு அமைதியை,
கொடுக்கும்.
நம்மை பிரிந்தவர்கள்,
எங்கேயும் போகவில்லை.
நம் சிந்தனையில் ;
நம் செயலில் ;
நம் விளைவில் ;
நம் அனுபவத்தில் ;
நம் அனுமானத்தில் ;
நம்மை வழிநடத்தி
நம்மை முடக்காமல்
முன்னேற வைப்பவர்கள் .
நாமே பரம்பொருள் !
நாமே கடவுள் !!
ரகசியம் ஒன்று உங்களுக்கு சொல்கிறேன்.
நமக்கு உள்ளே செல்ல செல்ல நம்மை நாம் ஒரு பொருளாக , செயலாக, உயிராக , இதன் ஊடாக மனிதனாக நினைக்கிறோம்.
எதுவும் நம்மால் முடியும் என்கிற சிந்தனை பெரிது அல்ல.
என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?
ஆம் ! அது தான் உண்மை .
அந்த உண்மை இது தான்.
நாம் பிறப்பது தெரியாமல் பிறக்கிறோம்.
அதற்கு பெற்றோர்களின் அறவனைப்பு காரணம் ஆகிறது.
அதற்கு மேலே இந்த உலகில் வாழ , வழி தேட இந்த மனித சமுதாயம் நமக்கு பல வகையில் உதவிக் கொண்டு தான் இருக்கிறது.
இங்கே யாரும் யாருக்கும் அடிமை இல்லை. ஆனால் எல்லாம் சரியாக இருக்கிறாக நினைத்து நமக்கு நாமே ஒரு கடிவாளம் போட்டுக் கொள்கிறோம்.
'எல்லாம் என்னால்' என்று நினைத்து
இந்த நாடு,
இந்த வீடு,
இந்த தெரு,
இந்த குடும்பம்
என வகைப்பட்டாலும் , எந்த வகைமைக்கும் கட்டுப்படாத ஒரு
புயல்,
காற்று,
மழை,
சுனாமி,
தீ,
காட்டுத் தீ
தூரத்தில் நடக்கும் போது தெரியாது. பார்த்து பரிதப்பது நமது சுபாவம்.
அது நமக்கு நடக்கும் என்று தெரியாமல் போவது பாவத்தினும் பாவம்.
அந்த பாவம் அனுபவப்பட்டவனுக்கு மட்டும் தான் தெரியும்.
பணமே , காசோ மனித மனங்களுக்கு ஆறுதல் இல்லை.....
அவனுக்கு அவனே சாட்சி ;
அந்த சாட்சி இந்த சமுதாயம் வளர்த்து எடுத்த அடையாளம்.
அடையாளம் என்பது ?
ஒரு உடலுக்கு தேவை உணவு மட்டும் அன்று ; மாறுதலாக அது வெளியேறவும் வேண்டும்.
அந்த வீடு அமைந்து இருக்கும் கீழே ஒடும் சாக்கடை ஒழுங்காக , நேர்த்தியாக செல்ல என்ன நேர்மையை நாம் கடை பிடிக்கிறோம் ??
நாடு நலம் பெற ;
வீடு சுகம் பெற ;
பெற்ற பிள்ளைகள் வளம் பெற ;
கொடு ; உழைப்பை கொடு ;
உன் உழைப்பே உனக்கு நீ கொடுக்கும் சன்மானம்.
அந்த சன்மானம் நம் துப்புறிவு பணியாளர்கள் , நம் பணியாளர்கள் என விரிந்து போர் புரியவர்கள் வரை நம்மை விழும்பு நிலையில் இருந்து விழித்து பார்க்க வைத்து நம்மை ஆளாக்கியவர்கள்.
இந்த உலகம் பிரபஞ்ச சக்தியால் இயங்குகிறது.
காற்று மாசுபடாமல் இருக்க ;
நல்ல நீர் நிலைகள் உண்டாக,
நிலங்களில் வளம் பெற,
நாடும் வீடும் செழிக்க ,
மரங்கள் வனங்களாக மாற,
நாம் என்ன செய்தோம் ; செய்து கொண்டு இருக்கிறோம்.
பார்ப்பதும், படிப்பதும், படித்து உணர்வதும் தான் அறிவு என்றால் ஏன் இந்த நிலை .....
மனிதனின் மனதில் கோளாறு,
குணம் கெட்டு விட்டது,
அவசர கதி போராட்டம்.
பூமியின் சுரண்டல் ;
நாம் சுரண்டலாக மாற
சுனாமி வழி வகுக்கும்.
இங்கே ஆன்மா, மனசு, அறிவு, சிந்தனை , செயல் , விழிப்புணர்வு ,
மனம் எல்லாம் தாண்டி ஒன்று செயல் படவேண்டும்.
அது தான் பேச்சு வார்த்தை;
பேசுவதை கேட்பதும்,
பொறுமையாக இருப்பதும்,
நல்லது, கெட்டது ஆராய்வதும்
மனித பண்பு எனில்
அதை கடை பிடிப்போம்.
சகிப்புத் தன்மை என்பது அடிமைத்தனம் இல்லை.
பிறரிடம் அதை கடத்துவது.
இந்த சகிப்புத் தன்மை பெண்மையிடம் இல்லை என்றால் ஆண்மை அழிந்து போய் இருக்கும்.
பெண்மை என்பது பால் சார்ந்து மட்டும் இல்லை.
அது எல்லோரும் கடைபிக்க வேண்டிய ஒரு தர்மம்.
தர்மம் தலை காக்கும்.
காக்கட்டும் .
நம்புவோம்.
நடப்போம்.
நன்றியுடன் நாள் தோறும்...