ருடான் வோயேஜர்: எரிபொருள் நிரப்பாமல் 9 நாட்கள் உலகை வலம் வந்த விசித்திர விமானம்!

இடைநில்லாமல் உலகை வலம் வந்த ருடான் வோயேஜர் விமான வரலாறு, பர்ட் ருடான் வடிவமைப்பு மற்றும் விமானிகள் பற்றிய முழுத் தகவல்கள்.
ருடான் வோயேஜர் | Rutan Voyager flight
ருடான் வோயேஜர் | Rutan Voyager flightAI Image
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on
Kalki Strip
Kalki Strip

எங்கும் நிற்காமலும், நடுவானில் எரிபொருள் நிரப்பாமலும் உலகை முதன்முதலில் சுற்றி வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ருடான் வோயேஜர்’ (Rutan Voyager) விமானத்தைப் பற்றியும், அதை இயக்கிய வீரர்களைப் பற்றியும் அறிவோமா!

“எங்கும் நிற்காமல், இடையில் எரிபொருளும் நிரப்பாமல் உலகை ஒருமுறை முழுமையாகச் சுற்றி வருவது” ... 1980-களின் தொடக்கம் வரை, விமான உலகில் எட்ட முடியாத ஒரு சாதனையாக இருந்தது.

இந்த சாத்தியமற்ற சவாலை சாத்தியமாக்கிக் காட்டியதுதான் ருடான் வோயேஜர் என்ற விசித்திரமான வடிவமைப்பு கொண்ட விமானம்.

விமானத்தின் உருவாக்கம் மற்றும் வடிவமைப்பு:

பிரபல விமான வடிவமைப்பாளரான பர்ட் ருடான் (Burt Rutan) என்பவரால் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டது. வழக்கமான உலோகங்களுக்குப் பதிலாக, எடை மிகக் குறைவாகவும் உறுதியாகவும் இருக்க கார்பன்-ஃபைபர் கம்போசிட் (Carbon-fiber composite) பொருள்களால் இது கட்டப்பட்டது.

இதன் மொத்த எடை சுமார் 1,020 கிலோ (காலியாக இருக்கும்போது) எரிபொருள் எடை 3,180 கிலோவிற்கும் அதிகம் (விமான எடையை விட 3 மடங்கு!). முன் மற்றும் பின் பகுதியில் தலா ஒரு இன்ஜின் (Twin-engine design).

விமானத்தின் எடையில் பெரும்பகுதி எரிபொருளாகவே இருந்ததால், அதன் சிறகுகளுக்குள் மட்டுமே பெரும்பாலான எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது.

ருடான் வோயேஜர் | Rutan Voyager flight
ருடான் வோயேஜர் | Rutan Voyager flightAI Image

சாகசப் பயணத்தை மேற்கொண்ட வீராங்கனை மற்றும் வீரர்:

இந்தக் கடினமான வரலாற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்தவர்கள் இரண்டு தைரியமிக்க அனுபவமிக்க விமானிகள்:

1.டிக் ருடான் (Dick Rutan): வடிவமைப்பாளர் பர்ட் ருடானின் சகோதரர். அமெரிக்க விமானப்படையில் போர் விமானியாகப் பணியாற்றிப் பல போர்க்கள அனுபவங்களைப் பெற்றவர்.

2. ஜீனா யேகர் (Jeana Yeager): அனுபவமிக்க பெண் சோதனை விமானி (Test Pilot). விமானப் பொறியியல் மற்றும் பல்வேறு வேகச் சாதனைகளில் ஏற்கனவே முத்திரை பதித்தவர்.

இதையும் படியுங்கள்:
65 வயதில் 1009 தோல்விகளுக்குப் பின் உலகை வென்ற KFC நிறுவனரின் கதை!
ருடான் வோயேஜர் | Rutan Voyager flight

அனுபவித்த சவால்கள்:

விமானத்தின் காக்பிட் (Cockpit) பகுதி மிகச் சிறியது. ஒரு தொலைபேசி பூத் அளவே இருந்த அந்த சிறிய இடத்தில், இருவராலும் ஒரே நேரத்தில் நேராக நிற்கக்கூட முடியாது. தொடர் என்ஜின் இரைச்சல், உறக்கமின்மை, மற்றும் உடல் சோர்வு ஆகியவற்றைக் கடந்து 9 நாட்கள் அவர்கள் பயணிக்க வேண்டியிருந்தது.

வரலாற்றுப் பயணம் (டிசம்பர் 14 முதல் 23 வரை, 1986):

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப் படைத் தளத்திலிருந்து (Edwards Air Force Base) 1986 டிசம்பர் 14 அன்று வோயேஜர் புறப்பட்டது.

இதையும் படியுங்கள்:
பிளாக் ஐவரி காஃபி: யானை கழிவில் தயாராகும் சொகுசு காஃபி! விலை கேட்டா தலை சுற்றும்!
ருடான் வோயேஜர் | Rutan Voyager flight

தொடக்கத்தில் சிறு விபத்து:

ஓடுதளத்தில் டேக்-ஆஃப் (Take-off) ஆகும்போது, எரிபொருள் கனத்தால் தாழ்ந்திருந்த சிறகின் முனைகள் தரையில் உரசிச் சேதமடைந்தன. இருப்பினும், விமானிகள் தைரியமாகப் பயணத்தைத் தொடங்கினர். பசிபிக் பெருங்கடல், ஆசியா, இந்தியப் பெருங்கடல், ஆப்பிரிக்கா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தனர்.

இந்த பயணத்திற்காக எடுத்துக் கொண்ட நேரம் 9 நாட்கள், 3 நிமிடங்கள், 44 வினாடிகள். கடந்து வந்த தூரம் 40,212 கிலோமீட்டர் (24,986 மைல்கள்). டிசம்பர் 23, 1986 அன்று, டேங்கில் மிகக் குறைந்த அளவு எரிபொருள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், அவர்கள் பாதுகாப்பாகத் தரை இறங்கினர்.

வான்வழிப் போக்குவரத்து வரலாற்றில் 'the last major aviation record' என்று வோயேஜரின் பயணம் வர்ணிக்கப்படுகிறது. மனிதனின் அசைக்க முடியாத தன்னம்பிக்கைக்கும், நவீன பொறியியல் திறனுக்கும் சான்றாக விளங்கும் இந்த விமானம், தற்போது வாஷிங்டனில் உள்ள நேஷனல் ஏர் அண்ட் ஸ்பேஸ் மியூசியத்தில் (National Air and Space Museum) மக்களின் பார்வைக்காகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com