உச்ச நீதிமன்றம் அங்கீகரித்த 'Living Will': உங்கள் இறுதி முடிவு இனி உங்கள் கையில்!

Living hill
Living Will
Published on
Kalki Strip
Kalki Strip

2018 மார்ச் 9-ல், இந்திய உச்சநீதிமன்றம் (Supreme Court of India) தனது முக்கியமான தீர்ப்பில் Living Will-க்கு அரசு சட்ட அங்கீகாரம் அளித்து, passive euthanasia-வுக்கு அனுமதி அளித்தது.

Passive euthanasia என்பது (செயலற்ற கருணைக்கொலை) உயிரை நீட்டிக்கும் சிகிச்சைகளை நிலைத்திருக்காமல், இயற்கையான இறப்பை அனுமதிக்கும் செயல்.

மனித வாழ்நாளின் இறுதி கட்டங்களில், நம்முடைய சுயாதீனத்தையும் மரியாதையையும் பாதுகாக்கும் ஒரு சட்ட வசதியே 'Living Will' - 'வாழும் உயில்'.

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே, எதிர்காலத்தில் உங்களுக்குத் தீவிரமான, குணப்படுத்த முடியாத நோய் வந்து, படுத்த படுக்கையாகி, சுயநினைவே இல்லாம போனீங்கன்னா, பிள்ளைகள் யாரைக்கேட்டு உயரிய சிகிச்சை கொடுத்தீர்கள் என்று பிரச்சனை செய்ய வரலாம். அப்போது மருத்துவர்கள் குழம்புவாங்க. அத்தருணத்தில் 'Living Will' உதவும்.

Living Will என்பது, ஒருவர் ஆபத்தான மருத்துவ நிலையிலிருக்கும்போது அல்லது பரிசோதிக்க முடியாத நிலைமைக்கு (permanent vegetative state) மாறிய பிறகு, தன்னுடைய மருத்துவச் சிகிச்சை தொடர்பான விருப்பங்களை முன்பே எழுத்து வடிவில் தெரிவிக்கும் சட்ட ஆவணம் ஆகும்.

இதில், அந்த நபர் கடுமையான மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருப்பினும், உணர்வு திறனை இழந்திருந்தால், உயிரைக் காக்க தேவையான சில சிகிச்சைகள் தேவை இல்லை என்று சொல்லும் ஆவணம்.

இதையும் படியுங்கள்:
"மழை வருமா? வராதா?" துல்லியமாக கணிக்கும் புதிய பாரத் முன்னறிவிப்பு அமைப்பு!
Living hill

Living Will-இன் முக்கிய அம்சங்கள்:

சுய விருப்பத்தை உறுதிப்படுத்துதல்:

மாண்புடன் மரணிக்கும் உரிமை, இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் உள்ள வாழ்வுரிமையின் ஒரு பகுதியாக இந்திய உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அவசியமற்ற வலிமை கூடிய சிகிச்சைகள் தவிர்த்து, dignity-யுடன் இறக்கும் உரிமையை உறுதி செய்தல்.

குடும்பத்தாருக்கும் மருத்துவர்களுக்கும் ஒருவித தீர்மானத்தை எளிமைப்படுத்துகிறது.

இதன் அடிப்படையில், ஒரு 'Living Will' சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும்.

இந்த லிவிங் வில்லை எவ்வாறு செயல்படுத்துவது?

இது ஒரு வயது வந்த, நல்ல மனநிலையில் உள்ள ஒருவரால், எந்தவித கட்டாயமும் இல்லாமல் தயாரிக்கப்பட வேண்டும்.

இதில், சிகிச்சையை மறுக்கும் அல்லது நிறுத்தும் அதிகாரம் பெற்ற ஒரு பாதுகாவலர் அல்லது நெருங்கிய உறவினரின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும்.

இரண்டு சுயாதீன சாட்சிகள் முன்னிலையில் கையொப்பமிடப்பட வேண்டும்.

ஒரு நோட்டரி பப்ளிக் அல்லது கெசட்டட் அதிகாரி முன்னிலையில் சான்றளிக்கப்பட வேண்டும்.

உயில் செயல்படும் நிலை வரும்போது, மருத்துவக் குழு மற்றும் நீதித்துறை நடுவர் (JMFC) ஒப்புதல் தேவைப்படும்.

தற்போதைய உச்ச நீதிமன்றம் சட்டம் படி Living Will நிர்ணயமாக 18 வயதுக்கு மேற்பட்ட எந்த நபரும் எழுதலாம்.

மும்பை உள்ளிட்ட சில நகரங்களில், குறிப்பாகச் சிறந்த தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுயேச்சை வாழ்வு சார்ந்த சட்ட ஆதரவு அமைப்புகள் (end-of-life care NGOs) மூலம் இந்த Living Will நடைமுறை செயல்படுகிறது.

Tata Memorial Hospital, Hinduja Hospital போன்ற நிறுவனங்கள் awareness ஏற்படுத்தி வருகின்றன.

உச்சநீதிமன்ற தீர்ப்பு இருந்தாலும், நாட்டின் பல மாநிலங்களில் நடைமுறைக்கு இது இன்னும் பரவலாக வரவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் Living Will awareness பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
உலகத்தலைவர்களில் நம்பர்-1 இடத்தை பிடித்த பிரதமர் மோடி..! டிரம்ப் எந்த இடம் தெரியுமா..?
Living hill

ஆம்! இந்தியாவின் எந்தப் பகுதியிலும் ஒருவர் சட்டப்பூர்வமாக ஒரு 'Living Will'ஐ உருவாக்க முடியும். 'மரியாதையான முடிவை' மனிதனுக்கே ஒப்படைக்கும் சட்ட வசதி.

இது ஒரு உணர்வுப்பூர்வமான, ஆனால் சட்ட அடிப்படையிலான முக்கியமான விருப்பம்.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் முதியோர்களுக்கு நிச்சயம் இது ஒரு விழிப்புணர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com