மினி தொடர்கதை: மறக்க முடியுமா? அத்தியாயம் 2!

மனிதநேயத்தையும் அன்பையும் இணைக்கும் நெகிழ்ச்சியான தமிழ்ச் சிறுகதை
Tamil serial story - marakka mudiyumaa
Tamil serial story - marakka mudiyumaaImage credit: Chatgpt

லட்சுமி ராமானுஜம், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை. கடந்த ஓராண்டாகச் சிறுகதைகள் எழுதி வருகிறார். வாழ்வின் நிதர்சனங்களையும், துன்பங்களை வென்று மீளும் நம்பிக்கையையும் மையமாகக் கொண்டு இவரது கதைகள் அமைகின்றன.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

மினி தொடர்கதை: மறக்க முடியுமா? அத்தியாயம் 2

'ஹை.. அப்பா' குதூகலமாகக் கத்திகொண்டே வேணுவிடம் ஓடிவந்த அவனின் நான்கு வயது குழந்தையைக் கையில் தூக்கிக்கொண்டவன், "ஹை குட்டி எப்படி இருக்க?" என்று அவன் கன்னத்தைத் தட்டி அவனை இறக்கியபடி "செல்வி" என்றழைத்தான்.

உள்ளிருந்து, "வந்துடீங்களா?" என்றபடி ஓடி வந்த செல்வி அவனுடன் ஒரு பெண்மணி இருக்கவும், "இவங்க… இவங்களை நான் பார்த்துருக்கேனே... நம்ம பக்கத்து தெரு கடை வாசல்ல பார்த்திருக்கேன்.. அவங்க எப்படி இங்க..?" 

வேணு, "இதுதான் வேதாம்மா. நான் அடிக்கடி சொல்லுவேனே.." வேதா குடும்பத்தினரை செல்வி திருமணத்தின்போது பார்த்ததுதான்.

அதன்பின் வேணுவும் துபாய் சென்றதில், இவளும் குழந்தையுடன் அம்மா வீட்டில் இருந்ததாலும் செல்விக்கு அவரை யாரென்று தெரியவில்லை.

"முதல்ல இவங்களுக்குக் குடிக்க மோரு குடு" கூறியவனின் குரலில் இருந்த அவசரத்தைப் புரிந்தவளாய் உள்ளே ஓடினாள். 

உட்கார்ந்தும், எழுந்தும் தடுமாறிக்கொண்டிருந்த வேதாவிடம், "அம்மா இதை குடிங்க நானே உங்களை உங்க வீட்டில கொண்டுபோய் விடறேன்.. சரியா?" ஒரு குழந்தையிடம் பேசுவதுபோல் சொன்னான்.  

"இங்கயிருந்து அஞ்சு கிலோமீட்டர் நடந்தே வந்துருக்காங்க,  பாவம்..." என்று செல்வியிடம் சொன்னான்.  

Loading content, please wait...