தொடர்கதை: ரோஸ் மில்க் - அத்தியாயம் 1

Man and Woman Talking - Rதொடர்கதை: ரோஸ் மில்க்
Man and Woman - தொடர்கதை: ரோஸ் மில்க்AI Image
தேஜூ சிவன்

என் பெயர் சந்தானகிருஷ்ணன். என் மகளின் பெயரையும், மகனின் பெயரையும் இணைத்து தேஜூ சிவன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளை இணைய இதழ்களில் எழுதிக் கொண்டிருக்கிறேன். வாசிப்பும், எழுத்தும் என்னை நிறைவாக வைத்திருக்கின்றன என்பதை இங்கே மகிழ்வுடன் குறிப்பிடுகிறேன். நான் ஆயுள்காப்பீட்டுக் கழகத்திலிருந்து பணி ஓய்வு பெற்று என் சொந்த ஊரான தஞ்சாவூரில் என் கும்பத்துடன் வசித்து வருகிறேன் நிறைய இலக்கியக் கனவுகளுடனும், அதற்கான செயல் முனைப்புடனும்.

Updated on
Kalki Strip
Kalki Strip

இவன் டேபிளில் இருந்த உலக உருண்டையை உருட்டிக்கொண்டே ஸ்வேதா சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் உதட்டசைவுக்கேற்ப அவள் காதுகளில் அணிந்திருந்த தங்க ஊஞ்சல்கள் ஆடிக்கொண்டிருந்தன.

''எத்தனை ஆடுகளை வெட்டப் போறாங்களோ தெரியல? மிகைப்படுத்திப் பேசறதே உன் வழக்கமாப் போச்சு ஸ்வே.''

கண் சிமிட்டி சிரித்தாள். அது அவள் விமேனரிசம்.

''நீ பச்சமண்ணு ஆதி.''

ஸ்வேதா இவன் பேட்ச் மேட். அதனால் இவனை ஒருமையில் விளிக்கும் சுதந்திரத்தை எடுத்துக்கொண்டவள்.

''சரிதான் சுட்ட மண்ணே.. நீ சொல். என்ன விஷயம்?''

அந்தக் கம்பெனியின் அனைத்து விஷயங்களும் அறிவாள். அவள் கணவன் வர்மா ஹெச் ஆர்ல இருக்கார்.

''இன்னைக்கு டிக்ளேர் பண்ணப் போறாங்களாம். நேத்துதானே ஹையர் லெவெல் மீட்டிங் நடந்தது. நேரம் அதிகமில்லை ஜென்டில்மேன் அதான்.''

ஒரு குளிர் கத்தி இவன் வயிற்றுக்குள் செருகியது போலிருந்தது. மூச்சை உள்ளிழுத்து நிதானமாக வெளிவிட்டான்.

ப்ரீத் இன்.. ப்ரீத் அவுட்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com