சிறுகதை: எதிர்முனையின் மௌனம்!

நாய்க்கு இருக்கும் அக்கறை தாய்க்கு இல்லையா? நெஞ்சை உருக்கும் சிறுகதை
சிறுகதை | family relationships
சிறுகதை | family relationshipsImage credit: Chatgpt
முகிலை இராசபாண்டியன்

கன்னியாகுமரி மாவட்டத்தின் முகிலன் குடியிருப்பு சொந்த ஊர். சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் உதவி இயக்குநராகவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளராகவும் பணியாற்றிப் பணிநிறைவு பெற்றவர். ஐந்து சிறுகதைத்தொகுப்புகள், ஐந்து நாவல்கள், மூன்று நாடகநூல்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை படைத்தவர். கல்கி, கலைமகள், கணையாழி, தினமணி கதிர், தாய் முதலான இதழ்களில் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. கல்கி ஆன்லைனிலும் தற்போது தடம் பதித்துள்ளார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

மணி எட்டு இருக்கும். இரவு நேரம் என்பதால் மறைமலை நகரின் அந்தக் குடியிருப்புப் பகுதியில் ஆள் நடமாட்டம் குறைந்திருந்தது.

“ஏய்…! டாமி…. நோ… நோ… கம்….! ஏய்…. டோண்ட் கோ தேர்…” என்று அந்த இறக்குமதி நாயுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தான் கிரிதர்.

அது அவனுக்குக் கட்டுப்படுவதாய் இல்லை. அவன் கூப்பிடும் குரல் கேட்டுத் திரும்பி ஓர் அடி எடுத்து வைப்பதும் மீண்டும் திரும்பி நான்கடி ஓடுவதுமாய் இருந்தது.

அதற்காகவே வாங்கியிருந்த ஐந்நூறு ரூபாய் விலையிலான கயிற்றை… இல்லை… இல்லை…. ரோப்பை எடுத்துக்கொண்டு அதன் பின்னால் ஓடினான்.

கயிற்றைப் பார்த்ததும் அந்த நாய் ஓடியது. ஓடிய வேகத்தில் எதிரே வந்தவரைக் கண்டதும் அது குரைப்பதா வேண்டாமா என்று ஒரு நொடி பதுங்கியது. எதற்கும் நமது வேலையை நாம் செய்து வைப்போம் என்று குரைத்தது. அந்தச் சத்தம், நாய் குரைப்பதுபோல் இல்லை. ஏதோ நரி ஊளையிடுவதுபோல் கேட்டது.

நாய் குரைத்தால் ‘லொள்…லொள்…’ என்னும் சத்தம் நமது காதைக் கிழிக்கும். இப்போதெல்லாம் இப்படித்தான் நாய் குரைக்கும் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

Loading content, please wait...