சிறுகதை: தெளிவில்லா முன்னும்... தெளிந்த பின்னும்!

வாழ்க்கையின் சிக்கல்களுக்கு இடையே நிம்மதியைத் தேடும் ஒரு எளிய மனிதனின் பாசிட்டிவ் கதை
தமிழ் கதை | a man and Sundal vendor
தமிழ் கதை | a man and Sundal vendorAI Image
பாலமுருகன்.லோ

பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம்.

Updated on
Kalki Strip
Kalki Strip

கடல் அலைகளைப் பார்த்தவாறு, தன்னை மறந்து அந்த மணல் பரப்பில் அமர்ந்திருந்தார் விநாயகம். எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கையில், “சார், சுண்டல் வேணுமா? சூடா இருக்கு, வெங்காயம், மாங்கா, தேங்காய் எல்லாம் போட்டிருக்கு சார்,” என்றார் சுண்டல் விற்பவர்.

விநாயகம் குரல் கேட்டு, ஒலி வந்த திசையில் திரும்பி, “என்ன பெரியவரே?” என்றார்.

“சார், சூடான சுண்டல் இருக்கு, வேணுமா?”

“இல்லைங்க, எனக்கு இப்ப சாப்பிடணும்னு தோணல,” என்றார்.

விநாயகத்திடம் பதிலைக் கேட்டு மனச்சோர்வுடன் தன் நடையை வேறு பக்கம் திருப்ப ஆரம்பித்தவரை, விநாயகம் பார்க்க மனதில் என்னமோ தோண, “பெரியவரே நில்லுங்க,” என்றார்.

“என்ன சார்?” என்றார் அந்த முதியவர்.

“சுண்டல் எவ்வளவு?”

“பொட்டலம் பத்து ரூபாய்.”

“சரி, ஒரு பொட்டலம் கொடுங்க,” என்று அவரிடத்தில் பத்து ரூபாயை நீட்டினார் விநாயகம்.

முக மகிழ்ச்சியுடன் விநாயகத்திடமிருந்து அந்தப் பத்து ரூபாயை வாங்கித் தன் சட்டைப் பையில் போட்ட பின், மீண்டும் கேட்டார் அந்த முதியவர், “ஒண்ணு போதுமா சார்?”

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com