

இந்திரனின் மந்திரி சபை அவசரக்கூட்டம்.
“எல்லாரும் வந்தஈச்சா?” சபை முழுதும் இந்திரனின் கண்கள் மேய்ந்தன.
“கிட்டத்தட்ட முக்யமானவர்கள் வந்தாச்சு. ஒரு சில 12த் மேன்கள் வரலை” அட்டன்டென்ஸ் மந்திரி சங்கு பொடி வைத்தார்.
“சங்கு முக்யமானவர் முக்கியமில்லாதவர் என்று யாரும் இங்கு கிடையாது என ஏற்கனவே சொல்லியிருக்கேன்” இந்திரன் பலவீனமாய் கர்ஜிக்க..
“ஆமாம் இங்கே எல்லோரும் முக்கியமில்லாதவர்களே” என்று சங்கு தேசலாய் குறைபட்டார்.
“என்ன முனகினீர்? உன் மைன்ட் வாய்ஸை கேட்டுவிட்டேன். உங்க மேலே உள்ள பழைய கேஸை தூசுதட்டி தூக்கனுமா?"
“ஐயோ மஹாராஜா..! அவரவர் வீட்டில் எல்லோரும் முக்கியமில்லாதவர்களே” என்று முனகினார்.
“இன்னும் ரொம்ப முக்யமானவர்கள் குழு வரவில்லை” மன்னன் ஏக்கமாய் கேட்க,
“சியர்ஸ் கேர்ள்ஸ் தானே. உங்க ஏக்கம் எனக்கு புரிகிறது. அவர்கள் புறப்பட்டு விட்டார்கள் என்ற நற்செய்தியை உங்களிடம் சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்”.
“நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் அவர்கள் உற்சாக டான்ஸ் ஆடுவது எமக்கு பிடித்துள்ளது”
“எவ்வளவு கேவலமான விஷயத்தை இவ்வளவு பகிரங்கமாய் ஒத்துக்கறான் பாரு"
“வந்துட்டாங்க வந்துட்டாங்க” இந்திரன் எழுந்து நிற்க,
“மன்னா உட்கார் மானம் போகுது” காப்பான் அதட்டினான்.
“நீ மட்டும் எழுந்து நிற்கலாமா?” அப்பாவியாய கேட்டான் மன்னன்.
“என் வேலையே அதுதான்”
“உட்கார்ந்து பார்த்தால் கடைசி வரை தெரியலை”
முகத்தை திருப்பிக்கொண்டான் காப்பான்.
சியர்ஸ் கேர்ள்ஸ் மன்னனை வணங்க,
“வணக்கம் உங்கள் க்ரூப்பில் ரெண்டு பேர் குறைகிறதே”
“ஆமாம் மன்னா நாங்கள் லேட்நைட் பர்சேஸ் பண்ண போனபோது யாரோ ஒரு கேடி ரெண்டு பேரை கடத்திட்டு போயிட்டான்”
நல்ல வேளை நான் மாறுவேடத்தில் போனதால் அடையாளம் தெரியலை” சங்குவிடம் கிசுகிசுக்க,
“உன்னை விட பெரிய கேடி நாட்டிலேயே இல்லை” சங்கு முனகினான்.
“புரியுது உன் வீட்டில் கண்டிப்பா ரெய்ட் தான்” சங்கு காதில் சொ்ல்ல,
“ஐயோ! மன்னா நான் வெகுளி. அந்தப்புரத்தில் ரெய்டு விட்டால், காணாமல் போன கடத்தபபட்ட ரெண்டு சியர்ஸ் கேர்ள்ஸும் கி்டைப்பாங்கனு சபையில் சொல்லவா?” பயமுறுத்தினான் சங்கு.
“ரெய்டு கேன்சல்” என்ற மன்னன் சபையோரே நம்மாள் நாரதர் பூலோகத்திற்கு சென்று மிகப்பெரிய லாபம் தரும் கேம்ஸ் பாத்துட்டு வந்து நம்ம லோகத்திலும் நடத்தலாமுனு சொல்றார்"
“எங்கே அந்த நாரதர்?” சங்கு கேட்க
“ப்ராப்பர்டிஸ் வாங்க மறுபடியும் பூலோ்கம் போனார். இன்னும் பத்தே நொடியில் வந்துடுவார். இதோ நாரதர்”
“20-20 20-20 20-20 “ என்றபடி நாரதர் வந்து வணங்க பதில் வணக்கம் சொன்ன இந்திரன், “என்ன இப்பவெல்லாம தம்புராவுக்கு பதில் எதையோ புதுசா தூக்கிட்டு அ்லையறீர்?”
“இந்திரா எனக்கும் வயசாகிட்டு போகுது.. சீசனுக்கு ஏத்தா மாதிரி கோஷத்தையும் இன்ஸ்ட்ரூமென்ட்டையும் மாத்திட்டேன். ஆன்ட்ராய்ட் செல்லில் பல கோஷங்களை ரெகார்டு பண்ணிட்டேன். வேணும்னா ஆன் பண்ணிப்பேன்”
“எங்கே ஆன்டிரியா செல்லைக்காட்டு”
“யோவ் அது ஆன்டிரியா செல் இ்ல்லை. ஆன்ட்ராய்ட் செ்ல்”.
“ஸாரி”.
“இந்த இன்ஸ்ட்ரூமென்ட் பேர் பேட்.
“பேட்” என்றால்
“பந்தை அடிக்க இன்ஸ்ட்ரூமென்ட்”
“பந்தை ஏன் அடிக்கனும்?”
“அடிதடி உனக்கு பிடிக்காதில்லே?”
“ஆமாம் வன்முறை மன்னருக்கு பிடி்க்காது” சங்கும் ஒத்தூத..
“மட மனனா உனககாக செல்லில் 20-20 மேட்சை ரெகார்ட் பண்ணி வைச்சிருக்கேன் பாரு” நாரதர் நீட்ட..
இந்திரன் ஆச்சர்யமாய் பார்க்கிறான்
“இதை கிரிக்கெட் மேட்ச்னு சொ்லவாங்க.. இதில் 5நாள், ஒரு நாள், அரை நாள் மேட்ச்சும் உண்டு”
“இவன் ஏன் அவுட் கொடுத்தும் போகலை?”
“டி ஆர் எஸ் கேட்டிருக்கான்”
“அப்படினனா?”
“மேல் முறையீடு. கோர்ட் மாதிரி”
“இது நடுவரை அவமதிப்பது போலாகாதா?”
“ஆமாம் மானம் பார்த்தால் துட்டு பாக்க வேணாமா?
"ஓஹோ!”
“ஏதாவது ஒன்னு தான் கிடைக்கும்”. .
“புரியுது. எனக்கும் துட்டு வேணும்”
“அப்ப நீ களத்தில இறங்க தயாராயிட்டே. கிரிக்கெட் மே்ட்ச் பற்றி ஈமெயிலில் டிடெயிலா அனுப்பியிருக்கேன் படி”
“அவையோர் எல்லாருக்கும் தெரியும்படி க்ரூப்பில் போடு. மகளிர் அணி உண்டா?”
“உண்டு. மிக்ஸ்டு-11 கூட போட்டுக்கலாம்”
“ஒரே நாளில் படிச்சிட்டு பெரிய ப்ளேயர் ஆயிடறேன்”.
“மண்டு படிச்சால் பெரிய ப்ளேயர் ஆக முடியாது. ப்ராக்டிஸ் பண்ணனும். கோச்சிங் க்ளாஸ் போகனும். பெரிய கோச்சா பிடி”
“நீங்களே…"
“அடேடே. எனக்கு க்ரெளன்டில் விளையாட தெரியாது”
“வெறும் வாய் தான் போலிருக்கு” மன்னன் முனக,
“சரி விளம்பர தூதராய் என்னை நியமித்தால்….”.
“அப்ப நாங்க எதுக்கு இருக்கோம்?” சங்கு கோபமாய் கேட்க,
"அடிச்சிக்காதீங்க. நான் பாத்து செய்யறேன்” மன்னன் அடக்க,
“எனக்கும் எனக்கும்” என நூறு குரல் கேட்க,
“எல்லாரும் மந்திரிகள்” தலையிலடித்துக்கொண்டான் மன்னன்.
“எல்லோரும் ஈமெயிலில் வந்த மெஸேஜை படிச்சிட்டு மாலையில் விளையாட வாங்க”.
நாரதரே பயிற்சி ஆட்டத்துக்கு சியர் கேர்ள்ஸ் கிடையாதா?மன்ன்ன ஆசையாய் வினவ,
"கிடையாது. வழியுது. துடைச்சுக்க" கடுப்பானார் நாரதர்
“ராவது எனக்கு கொடுங்க காப்பான் கேட்க“ எவனாவது எப்படி விளையாடறதுனு கேட்கறானா பாரு. சபை கலையலாம்”
ஒரு மந்திரி, "எப்ப ப்ராக்டிஸ்" என்று கேட்க, "பாரு பழைய சரக்கை அடிச்சிட்டு இவ்வளவு நேரம் தூங்கியிருக்கான் நீ வரவேண்டாம்” கடுப்படித்தான் மன்னன்
மறைந்த கிரிக்கெட் ப்ளேயர்ஸ் பல பேரை ப்ராக்டிஸுக்கு அழைத்தி்ருந்தான். அவர்களுடன் சேர்ந்து மன்னனும் மந்திரிகளும் விளையாட, கண நேரத்தில் ஒவ்வொருவராய் முகம், கைகள், நெஞ்சு, தலை மற்றும் முதுகில் அடிபட்டு கவ்ர்மென்ட் ஆஸ்பத்திரி ரொம்பி வழிந்தது.
நாரதர் ஆஸ்பத்திரிக்கு வந்து மன்னனை தேட, கண்டபடி அடிபட்டு ஒரு பிச்சைக்காரனைப்போல் கண் மட்டும் வெளி்யே தெரிய மன்னன் படுத்திருக்க, அருகே மகாராணி அழுதபடி உட்கார்ந்திருந்தாள்.
“மன்னா கால் தடுப்பு, கை உறை, ஹெல்மெட் எல்லாம் போடலை்யா?” நாரதர் வினவ,
“அப்படின்னா? நீங்க பேட் மட்டும் தானே கொடுத்தீங்க”
“சுத்தம். நாலு பார்சல் கொடுத்தேனே பார்க்கலையா?” கோபமாய் கேட்டான்.
”நாலா? வழக்கமா வர பரிசுனு நமக்கு பாதி உங்க மந்திரி சங்குவுக்கு மீதினு பிரிச்சுக்கிட்டோம்” என்று மகாராணி சொல்ல, மன்னன் தலை சுற்றி மயங்கி பெட்டில் உருண்டான்“
"அவுட்” என கததியடி வெளியே ஓடினார் நாரதர்.