சிறுகதை: அன்னவாசல் பசுமாடும் அறிவியல் அற்புதமும்!

காணாமல் போன பசு யாருக்குச் சொந்தம் என்பதை அறிவியல் நிரூபித்த நகைச்சுவை சிறுகதை.
சிறுகதை | Cow and people
சிறுகதை | Cow and peopleImage credit: Chatgpt
ஆனந்த் ஸ்ரீனிவாசன்

ஆனந்த் ஸ்ரீனிவாசன், தபால் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி 2010-ல் ஓய்வு பெற்றவர். 1985 முதல் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதி வருகிறார். 75 கதைகள், 5 கதைத் தொகுப்புகளின் ஆசிரியர். தினமலர் வாரமலர் டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப் போட்டியில் மூன்று முறை பரிசு வென்றவர்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

திருவாரூர் மாவட்டம் அன்னவாசல் என்கிற சிறிய கிராமம், வழக்கம்போல அமைதியான காலைப் பொழுதைச் சந்தித்துக்கொண்டிருந்தது.

பனிமூட்டம் நிறைந்த அந்த அதிகாலை வேளையில், கிராமத்துச் சந்தை முக்கில் அமைந்திருந்த பஞ்சாயத்து சாவடியின் முன்னால், ஊரையே கூட்டும் அளவுக்குப் பெரும் கூச்சலும் அலறல் சத்தமும் வெடித்தது.

அங்கே இரண்டு விவசாயிகள் பெரியண்ணனும் வீராசாமியும் ஒரு தடிமனான அந்தப் பசுமாட்டின் கயிற்றைப் பிடித்துக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாகத் தங்களது முழுப் பலத்தையும் கொடுத்து இழுத்துக் கொண்டிருந்தனர்.

அந்தப் பசு மாடோ, இரண்டு பக்கமும் நகராமல், ஊர் சந்தை நடுவில் அமைதியாக நின்றுகொண்டு தன் பெரிய காதுகளை ஆட்டி ஆட்டி அசைபோட்டுக்கொண்டிருந்தது.

"அடடே! ஊர் ஜனங்களே வந்து பாருங்கப்பா! இது என் செல்லலட்சுமி! மூணு மாசத்துக்கு முன்னாடி மேயப்போன மாடு வீடு திரும்பல. அன்னிக்கு வீராசாமி ஊரில் பார்க்கிறேன் என் லட்சுமி நின்னுகிட்டு இருக்கு.

என் மாட்டைத் திருடி தன் வீட்ல வச்சுக்கிட்டு, ஊர் மத்தியில வச்சு என்னையே மிரட்டுறியா நீ?" என்று தொண்டைத் தண்ணீர் வற்ற கத்தினார் பெரியண்ணன்.

Loading content, please wait...