சிறுகதை: வித்தியாசமான திருடன்!

Tamil Short Story - Vithiyasamana Thirudan
Thief
Published on

“ஒவ்வொரு வருடமும் நம்ம பிள்ளை அரவிந்த் டெல்லி வரச் சொல்லி அங்கிருந்து ரிஷிகேஷ் பத்ரி போகலாமுன்னு எவ்வளவு தடவை சொல்லிக்கிட்டே இருக்கான். இந்த வருடமாவது போயிட்டு வருவோம்.”

“நீ சொல்றது சரிதான் பங்கஜம். ஆனா இந்த வீட்டை யார் பாத்துப்பா, அது பெரிய கேள்விக்குறியா இருக்கே?”

“என்னவோ 100பவுன் எனக்குப் போட்ட மாதிரி... அவை காணாம போயிடும்னும் பயமா? காதிலும் கழுத்திலும் கைகளிலும் மொத்தமே 20 பவுன் தான். அதுவும் எங்க அப்பா போட்டது தானே..." சந்தடிசாக்கில் சந்தானத்தின் காலை வாரினாள் பங்கஜம்.

அந்த அக்ரஹாரத்தில், மொத்தம் 30 வீடுகள். அதில் ஒன்று இரண்டு வீடுகள் மட்டும் தான் பூட்டி உள்ளன. அவர்கள் கூட தங்கள் பையனுடன் சென்னையில் இருக்கிறார்கள்..

“எதுவுமே நம்ம வீட்டில் கிடைகலைனா பத்தாயாத்திலே நெல்லு ஒரு அஞ்சாறு மூட்டை இருக்கும். அதைச் சுத்தமா சுரண்டி எடுத்து போட்டு கொள்ளை அடிச்ச நெல்லை, கொல்லைப்பக்கமா எடுத்து போயுடுவான்.”

“நீ எந்தக் காலத்தில் இருக்கே பங்கஜம்? யாரு பத்தாயம் பூட்டை ஒடைச்சு, மெனக்கெட்டு நெல் மூட்டையை எடுப்பாங்க. இப்பவெல்லாம் ஈசியா உடம்பு நோகமா கொள்ளை அடிக்கறது தான் ஃபேஷன்.”

“ நம்ம வீட்டுக்கு விவசாய வேலை செய்ய வைச்சுருக்குமே ஆனந்தன், அவனைக் காவல் காக்க சொன்னா என்ன? “

“யாரு ஆனந்தனையா? சாயந்திரம் ஆச்சுன்னா முழுச் சரக்கையும் போட்டுட்டு படுத்துக் கிடப்பான். அவனை முழுசாவும் நம்ப முடியாது.”

“ஒவ்வொரு வருஷமும் தட்டி போகுது. அடுத்த வருஷம் இருப்போமா இல்லையோ?” சிணுங்க ஆரம்பித்தாள் பங்கஜம்.

“எப்படியாவது கிளம்புவோம்! சரி நிச்சயம் போகலாம். ஒரு வேளை திருடங்க யாராவது வந்தா ஒன்னும் கிடைக்காத மாதிரி ஒரு ஐடியா வைச்சுருக்கேன். முக்கியமா ஒன்னுடைய இருபது பவுன் திருட்டு போகாது. நான் காரண்ட்டி." என்றார் சந்தானம்.

இப்படிச் சந்தானம் சொன்னதும் சந்தோசம் அடைந்தாலும் “என்ன பிளான் என்கிட்ட கூடச் சொல்ல கூடாதா? “ என்றாள் பங்கஜம்.

"இன்னும் முடிவு பண்ணல. தெரியாது. டூர் கிளம்பும் போது நீ கவரிங் நகை போட்டுக்கோ. வடக்கே திருட்டுப் பயம் அதிகம். இப்போதே அக்ரஹாரம் பூரா பத்ரி போறோம்ன்னு டமாரம் அடிச்சுட்டு வராதே. புரிஞ்சுதா. டிக்கெட் கன்பார்ம் ஆகி வர வரைக்கும் நீ யார்கிட்டேயும் வாய் கொடுக்கக் கூடாது. ஆனந்தன் ஒரு களவாணி தான். விவசாயம் செய்யும் அவனை விட்டால் வேறு ஆள் கிடையாது. ஒரு மாதம் தானே கூடுதல் சம்பளம் கேட்பான். கொடுத்துடலாம். வேறு வழியில்லை" என்றார் சந்தானம்.

கிளம்புவதற்கு முதல் நாள் தன் வீட்டில் இருந்து இரண்டு வீடு தள்ளி இருக்கும் பால்ய நண்பன் சுப்புணியிடம், ”இரவு காவலுக்கு வரும் ஆனந்தனை கண்கானித்துக் கொள், வாசல் திண்ணையில் படுத்துக் கொள்கிறனா என்று பாரு?” என்று சொல்லிவிட்டு டெல்லி பயணமானர்கள் சந்தானம் - பங்கஜம் தம்பதியினர்.

ஒரு மாதம் கழித்து, சுற்றுப் பயணம் முடிந்து அவர்கள் வீட்டிற்கு வந்தபோது, ​​ ஹாலின் நடுவில் டீ பாய் மேஜையில் ரூ.1,00,000/- அத்துடன் மற்றொரு பணம்,1000 ரூபாயும் கையால் எழுதப்பட்ட குறிப்பும் இருப்பதைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார்கள் சந்தானமும் பங்கஜமும்.

“என்னன்னா செய்தேள்? ஒரு திருட்டு கும்பல் வீடு புகுந்து ஒரு பொருளையும் எடுக்காமல் எனது இருபது பவுன் நகையும் எப்படிக் காப்பத்தி வைச்சேள்? அதோடு ஒரு லட்சம் பணம் வேறே இருக்கு?"

“அதுவா ஒன்னோட இருபது பவுன் நகையையும் ஒரு மரப்பெட்டியில் போட்டு வைச்சு பத்தாயாத்து மூலையில் உள்ளே போட்டு வைச்சேன். மேலயும் பூட்டு கீழயும் பூட்டு போட்டேன். அப்புறமா கிளம்புவதற்கு முதல் நாள் இரவு ஒரு நீண்ட கடிதம் எழுதிவிட்டு மறு நாள் உன்னை டாக்ஸியில் உக்கார சொல்லி விட்டு, நான் எழுதிய கடிதத்தையும் ஆயிரம் ரூபாய் பணத்தையும் ஹாலின் நடுவில் டீ பாய் மீது வைத்து விட்டு வீட்டை பூட்டி விட்டு டாக்ஸியில் உக்காந்தேன். நான் கடிதம் எழுதினதும் பணம் வைத்ததும் உனக்குத் தெரியாமல் இருக்கவே உன்னை முதலில் டாக்ஸியில் ஏற சொன்னேன். நான் கடிதத்தில் என்ன எழுதி உள்ளேன் என்பதை இப்போது நீ படி.”

“அன்புள்ள திருடர்களே, பல ஆபத்துகளுக்கு உட்பட்டு வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கு இரவு நேரங்களில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருப்பதை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். இருப்பினும், நாங்கள் சுற்றுப்பயணத்திற்குச் செல்வதால் எங்கள் வீட்டைக் கவனிக்க யாரும் இல்லை.

எனவே, ஒரு திருடன் அல்லது இரண்டு மூன்று திருடர்கள் எங்கள் வீட்டிற்குள் நுழைந்தால், வீட்டைக் கொள்ளையடித்து, பெட்டிகள், மற்றும் அலமாரிகளைத் தீங்கிழைக்கும் வகையில் சேதப்படுத்தப்படலாம். மேலும் பணம் கிடைக்காமல் விரக்தியில் நீங்கள் மற்ற பொருட்களைச் சேதப்படுத்தலாம் என்று நான் பயப்படுகிறேன்.

எங்களிடம் வீட்டில் பணம் இல்லை. இந்த அக்ரஹாரத்தில் உள்ள எல்லா ஆடம்பரமான வீடுகளை விட இது சாதாரண வீடு. ஒரு வேளை நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்து கொள்ளை அடிக்க நேர்ந்தால், நீங்கள் துரதிர்ஷ்டவசமானவர்கள் நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தாலும் ஒன்றும் இருக்காது.

இருப்பினும், நீங்கள் உங்கள் நேரத்தையும், சக்தியையும், உழைப்பையும் வீணடிக்க வேண்டாம். ஏன் என்றால் விலை உயர்ந்த பொருள்கள் மற்றும் ரொக்க பணம் இந்த வீட்டில் இருக்காது. பென்ஷன் பணத்தில் மிச்சம் பிடித்து ஏழை குழந்தைகளுக்குப் பாட புத்தகங்கள் டிரஸ் வாங்கிக் கொடுப்பேன்.

எனவே உங்கள் ஆபத்தான தொழிலை மதித்து, உங்களுக்கான பயணப் பரிசாக ரூபாய் 1,000/- ஒதுக்கியுள்ளேன். அத்துடன் உங்களுக்காக ஒரு சிறிய பேப்பரில் சில விபரங்கள் எழுதி உள்ளதை விட்டுச் செல்கிறேன்.

ஒரு வேளை எல்லா இடத்திலும் தேடி ஒன்றும் கிடைக்காவிட்டால் நெல் பத்தாயத்தில் அஞ்சு மூட்டை அளவுக்கு நெல் இருக்கு. அதில் மூன்று மூட்டையும் ஆயிரம் ரூபாயும் எடுத்து கொல்லை புறமாகப் போய் விடுங்கள்.

உங்களுக்குப் பசி மற்றும் தாகம் ஏற்பட்டால் குளிர்சாதன பெட்டியில் மீதமுள்ள கேக் துண்டு மற்றும் முழு மாம்பழ ஜுஸ் பாட்டில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; மூன்று காதல்கள் +1
Tamil Short Story - Vithiyasamana Thirudan

ஏற்கனவே சொன்னபடி நான் ஒரு நடுத்தர வர்க்க தபால் துறை எழுத்தர் ஓய்வு பெற்றவன். நாங்கள் சொற்ப ஓய்வூதியத்தில் வாழ்கிறோம். பணவீக்கம் அதிகரித்தாலும் இன்னும் உயர்வு காணவில்லை. எட்டாவது சம்பள கமிஷன் எப்ப வரும் என்று தெரியவில்லை. இருந்தாலும் பொருளாதார ரீதியாக அதிகச் சிரமம் ஒன்றுமில்லை.

அன்புள்ள திருடர்களே! ஒரு வேளை இந்த நெல் முட்டையும் பணமும் பத்தவில்லை என்றால் அல்லது மேலும் கொள்ளை அடிக்க விரும்பினால் விரிவுபடுத்த விரும்பினால், நான் சில முக்கியத் தகவல்களை இன்னொரு பேப்பரில் எழுதி வைத்துள்ளேன் என்று சொன்னேன் அல்லவா, அந்தக் கடிதம் டிவி அருகில் உள்ளது படிக்கவும். படித்தவுடன் கிழித்துப் போடவும்.

எதிரே உள்ள மாடி கட்டிடத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனராக இருந்தவர் இப்போது கான்ட்ராக்டர் அத்துடன் கவுன்சிலர். மக்களை ஏமாற்றி நல்ல காசு பார்த்துள்ளார் பசையான பார்ட்டி.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; வனவிலங்கு!
Tamil Short Story - Vithiyasamana Thirudan

அதே சாரியில் கடைசி வீடு சாரயகடை நடத்தி ஊர் மக்கள் மது குடிக்கக் காரண மாணவன் அதுவும் கோயில் அருகிலேயே. அவனுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை அரசியல் செல்வாக்கு அதனால் நிறையப் பணம்.

இதே சாரியில் ஹெட்மாஸ்டர் டியூஷன் மூலம் வாங்கும் பணம் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகம் ஏழை மாணவர்களிடம் வசூலித்து இரண்டு மாடி கட்டி உள்ளார். டியூஷன் மூலம் வரும் வருமானம் கணக்கில் காட்டபடாதது.

அவர்களிடம் ஏராளமான பணம் உள்ளது. திருட்டு நடந்தால், போலீசில் புகார் செய்யாத அளவுக்குப் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள். எனவே உங்களுக்கு பாதிப்பு இருக்காது. அவர்களிடம் உள்ள பணம் கருப்புப் பணம். போனாலும் சம்பாதித்து விடுவார்கள். பணம் போய் விட்டதே என்று கவலப்படமாட்டர்கள். உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்."

சந்தானம் எழுதிய கடிதத்தைப் படித்து முடித்தாள் பங்கஜம். இன்னொரு கடிதம் எடுத்து அதை அவர் படித்த போது...

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கோடை மழை!
Tamil Short Story - Vithiyasamana Thirudan

“வணக்கம் அய்யா...

உங்கள் விலைமதிப்பற்ற உதவிக் குறிப்புகளுக்கு அன்பான ஏழை பங்காளன் எழுதும் கடிதம். முதலில் ஒங்களுக்கு நன்றி. பணி வெற்றிகரமாக நிறைவேறியது. எனவே, எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க உங்களுக்கு ஒரு பாராட்டுச் சின்னமாக ரூ. 1,00,000/- ஐ விட்டுச் செல்கிறேன்.

நீங்கள் நவீன ராபின்ஹுட் மாதிரி. இல்லாதவங்களுக்கு இருக்ககிற வங்ககிட்ட இருந்து எடுத்து கொடுக்கணும் என்கிற ஒங்க கொள்கை... அதை நாங்கள் பாராட்டுகிறோம் . ஃப்ரிட்ஜில் நாங்கள் ஒரு கிலோ சாக்லேட் கேக், 1 கிலோ உலர் பழங்கள் முந்திரி ஒரு கிலோ மற்றும் இரண்டு ஹார்லிக்ஸ் பாட்டில்கள் வைத்துள்ளோம். வாழ்த்துக்கள்.."

சாமார்தியமாகத் தன் நகையைப் பாதுகாத்த சந்தானத்தைப் பாரட்டினாள் பங்கஜம்.

அதே சமயம் எதிர்பாராமல் கிடைத்த அந்தப் பணம் ஒரு லட்சத்தை உள்ளூர் பள்ளிக்கட்டத்தின் மேம்பாட்டுக்கு நிதியாக அளித்தார் சந்தானம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com