தாஜ்மகாலின் ரகசிய இருண்ட பக்கம்: மறைக்கப்பட்ட உண்மைகள்!

Tajmahal
Tajmahal
Published on
Kalki Strip
Kalki Strip

தாஜ்மகால்: உலகின் 7 அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால். இது ஆக்ரா நகரில் ரம்மியமான யமுனா நதி கரையோரம் கட்டப்பட்டது. சுமார் கி.பி. 1631 தொடங்கி கி. பி. 1654ம் ஆண்டு கட்டுவது முடிவுக்கு வந்தது. அதாவது 23 வருடங்கள் எடுத்தது. சுமார் 22,000 தொழிலாளர்கள் வேலை செய்து உள்ளனர். கட்டடக் கலைஞர், உஸ்தாத் தலைமையில் கட்டப்பட்டது. ஷாஜகான் மும்தாஜ் நினைவாக கட்டியதுதான் இந்த தாஜ்மகால்.

தாஜ்மகால் பளிங்கு கட்டடம் கட்டுவதில் பல தொழிலாளர்கள் விபத்தில் தங்கள் உயிரை இழந்தனர். கணக்கு இல்லை.

சரித்திரம் எழுதியவர்கள் மக்களின் வாழ்நிலை பற்றி எதுவும் எழுதவில்லை. வெறும் ராஜாக்களைப் பற்றித்தான் எழுதி உள்ளார்கள். இது ஒரு தலை பட்சம்தான்.

கி. பி. 1649. தாஜ்மகால் கட்டப்பட்டு கொண்டு இருந்த சமயத்தில் ஒரு நடுத்தர வர்க்கம் சேர்ந்த தொழிலாளி தன் மனைவியுடன் பேசியது : (உரையாடல் இந்தி மொழியில் இருந்தது.)

“எனக்கு உடம்பு சரியில்லை… எப்படி வேலைக்கு செல்வது…?”

“நீங்கள் போக வேண்டாம்… உஸ்தாத்திடம் போய் நான் சொல்லி வரவா…?”

“வேண்டாம்… இரு தினங்கள் போகவில்லை என்றால் வேலையில் இருந்து தூக்கி விடுவார்கள். எனவே இன்று ஒய்வு எடுத்துக்கொண்டு நாளை வேலைக்கு சென்று விடுகிறேன்…!”

“நாளையும் காய்ச்சல் இருந்தால் என்ன செய்வீர்கள்..?”

“முடியாது. வேலையில் இருந்து தூக்கி விடுவார்கள்… !”

“இது அக்கிரமம்…!”

“இது வரை நூற்று கணக்கில் இறந்துவிட்டார்கள். போன வாரம் பளிங்கு கல்லை சுமந்து வந்த ஒரு தொழிலாளி திடீரென வழுக்கி வீழ்ந்தார். அதே இடத்தில் இறந்தார்…!”

“அவர் வீட்டிற்கு இழப்பீடு தொகை கொடுத்தார்களா…?”

“ஐயோ.. ஒரு நாணயம்கூட கொடுக்கவில்லை. பாவம் அந்த தொழிலாளிக்கு 4 மகன்கள். மனைவி பார்வை இழந்தவர். அவர் குடும்பம் அதோகதிதான்… ! ”

“ஆமாம்… மதியம் சாப்பாட்டிற்கு என்ன தருகிறார்கள்…?”

“இரண்டு டம்ளர் கஞ்சிதான்..!”

“அது எப்படி போதும்…?”

“ராஜாவுக்கு மும்தாஜ்தான் சிந்தனையில் எப்போதும். அவர் நினைவாகத்தான் இந்த பளிங்கு கட்டடம் கட்டப்படுகிறது… .!” .

“என்ன அயோக்கிய தனம்..?”

“அப்படி பேசாதே… ஒற்றர் யாரவது கேட்டால் ஷாஜகானிடம் சொன்னால் தலை துண்டிக்கப்படும்… !”

“ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் நிலைமையை யோசிக்காமல் நினைவு கட்டிடம் கட்டுவது எதற்கு…? மும்தாஜ் இறந்துவிட்டார். எதற்காக இந்த மண்டபம்..?"

“இல்லை… அவர் தனது காதலிக்காகவே கட்டுகிறார். அதனால்தான் எதிர்காலத்தில் இது காதலர் சின்னமாக மாறும்..!”

“அது சரி… நாளைக்கு வேலைக்கு போகாவிட்டால் வேலை போய்விடுமா… ?”

“ஆமாம்...!”

“இது அநியாயம்… மோசம்…!”

“எந்த ராஜா மக்கள் மீது அக்கறை வைத்து இருந்தார். அக்பர் மட்டுமே சற்று மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டார். நான் கேள்விபட்டு உள்ளேன்…!"

மறுநாள்...

அவருக்கு அதிக அளவில் காய்ச்சல். மனைவி போக வேண்டாம் என்று சொன்னார்..!

வேலை போய் விடுமோ என்ற பயம்… கிளம்பிவிட்டார்..

இதையும் படியுங்கள்:
கோமோரெபி (Komorebi): இயற்கை தரும் அருள் கொடை... எப்போ, எப்படி தெரியுமா?
Tajmahal

தாஜ்மகால் கட்டடத்தில் இன்று புதிதாக வந்து உள்ள பளிங்குக் கற்களை (tiles) தாஜ்மகால் மத்தியகூடத்திற்கு எடுத்து வர வேண்டும்.. உண்மையில் முடியாமல்தான் அவர் பளிங்கு கற்களை தூக்கி வந்தார். 3 சுற்று முடிந்ததும் அவர் உஸ்தாத்திடம் தனது நிலைமையை விளக்கினார். முடியவில்லை என்றார்.

“சாப்பாடு நேரம் வரை செய்யுங்கள்… பிறகு பார்ப்போம்…!” என்று அதிகார திமிருடன் பதில் அளித்தார்.

மீண்டும் பளிங்குக் கற்களை சுமந்தார். மத்திய மண்டபம் வந்ததும் சுமை பொறுக்கமுடியாமல் கீழே போட, அது உடைந்துவிட்டது. அப்போது தலை சுற்றி கீழே விழுந்தார். மண்டையில் நல்ல அடி. மூளையில் ரத்தம் ‘க்ளாட்’ ஆகி விட்டது. யாரும் வரவில்லை. அவர் இறந்துவிட்டார்.

தாஜ்மகாலின் ஒவ்வொரு பளிங்கும் பல பல சோக கதை சொல்லும். ராஜாக்கள் தங்களைப் பற்றி மட்டுமே யோசித்தார்கள். மக்கள் அவர்களுக்கு வரி கட்டும் இயந்திரங்கள். ஈவு இரக்கம் இன்றி நடந்துக்கொண்டார்கள். வேலைக்கு வருபவர்களை அடிமைபோல் நடத்தினார்கள். மக்களுக்கு வேறு வழி இல்லை. பிழைப்பிற்காக வேலைக்குப் போவது கட்டாயம் ஆகி இருந்தது.

ஷாஜகான் காதல் பாரட்டப்பட வேண்டியதுதான். ஆனால் மக்களின் வரி பணத்தில் இவ்வளவு பெரிய காதல் சின்னம் பிரம்மாண்டமாக கட்ட வேண்டிய அவசியம் இல்லை.

எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற கணக்கும் இல்லை. கூலி மிகவும் கம்மி. பல தொழிலாளிகள் கை, கால் இழந்தனர். அவர்களுக்கு இழப்பீடு என்பதும் இல்லை.

இதையும் படியுங்கள்:
இட்லிக்கு ஒரு சந்தையா? மாட்டுச் சந்தை இட்லி சந்தையாக மாறிய சுவாரசியம்!
Tajmahal

எல்லோரும் தாஜ்மகால் பார்த்தால் பிரமித்து போவார்கள். ஆனால் அதற்கு பின்னே உள்ள 1000 கணக்கான சோக கதைகள் தெரியாது. நமது சரித்திர பாடத்தில் தேடினாலும் கிடைக்காது. ஒரு தனி மனிதனின் காதல் சின்னமாக இவ்வளவு பொருட்செலவில், 1000 கணக்கான மக்கள் உழைக்க, மிகக் கடினமாக உழைக்க, வைக்க என்ன அவசியம்.

அது உலக காதல் சின்னமாக இருக்கிறது. உலக அதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது. இது ஷாஜாகானுக்கு பெருமை சேர்ப்பது இல்லை. இதை கட்டிய தொழிலாளிகளுக்கே அத்தனை பெருமையும் சேரும்.

மறைந்த காதலிக்காக ஒரு பிரம்மாண்ட நினைவு சின்னம் கட்ட வேண்டிய அவசியம் ஏன் வந்தது..? பொருட்செலவு, தொழிலாளி சுரண்டல் என விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் காதல் சின்னம் கட்ட அவசியம் என்ன.

ஒரு ராஜாவின் கடமை என்ன…? நாட்டில் உள்ள மக்களுக்கு நல்ல கூலி கொடுக்க வேண்டும். அவர்கள் நோய்வாய்பட்டால் சிறப்பு சிகிச்சை. ஆனால் நாட்டின் மக்களுக்கு எதுவும் செய்யாமல் காதல் சின்னம் கட்டியது வீண்.

இதையும் படியுங்கள்:
நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவன் மரணம்...நூடுல்ஸ் ஆபத்தானதா?... தெரிந்து கொள்ள வேண்டிய மறைக்கப்பட்ட ஆபத்துகள்..!
Tajmahal

ஆம்! மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் காதல் சின்னம் எதற்கு. நம் சரித்திர புத்தகங்களும் ராஜாக்களை மட்டுமே பேசுகிறது. மக்கள் நிலை பற்றி பேசாமல் ஊமையாகவே இருக்கிறது.

இப்போதுகூட மக்கள் தாஜ்மகாலை ரசித்து பார்க்கிறார்கள். வியப்பில் ஆழ்ந்து போகிறார்கள். ஆனால் இந்தச் சின்னம் கட்ட அந்தக் கால மக்கள் கொடுத்த உயிரை எண்ணிப் பார்ப்பது இல்லை.

ஆயிரக்கணக்கான மக்களின் உழைப்பும்… அவர்கள் சிந்திய வேர்வையையும் நாம் உணராமல் இருக்கக்கூடாது.

இதையும் படியுங்கள்:
‘சிங்கம் எப்போதுமே சிங்கம் தான்’- ஓய்வை அறிவித்த அஸ்வின்... CSK போட்ட ட்வீட் வைரல்...!
Tajmahal

கடைசியாக ஒன்று. மக்களை பற்றி ஏழுதாத சரித்திரம் நமக்கு தேவை இல்லை. மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்...? அவர்களின் கஷ்டங்கள், வேதனைகள், துன்பங்கள் பற்றி இல்லாத சரித்திரம் நமக்கு நிச்சயமாக தேவையே இல்லை. ஒருதலைபட்சமான கதைகள் தேவை இல்லை.

ஆம்! காதல் சின்னம் கட்டியதில் மனிதாபிமானம் இல்லை… !

இன்னும் இதுபோல் பல கலாச்சார பிரமாண்டங்களுக்குப் பின்னால் எத்தனையோ சோகக் கதைகள்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com