மணமக்கள் கவனத்திற்கு! காதலை விட முக்கியம் ஆரோக்கியம்! திருமணத்திற்கு முந்தைய பரிசோதனைகள் மிக அவசியம்...

திருமணத்திற்கு முன்னால் மணமக்கள் செய்து கொள்ள வேண்டிய முக்கியமான 10 பரிசோதனைகளைப் பற்றி பார்க்கலாமா..
Bride and groom Medical Tests for Before Marriage
Medical Tests for Before Marriage
Published on
kalki strip
kalki strip

பொதுவாகவே திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது, என்ன நட்சத்திரம், பையன் என்ன பண்றான்? பொண்ணு என்ன பண்றா? எந்த கம்பெனில் வேலை செய்கிறான்? பிள்ளையோட background என்ன? பொண்ணோட background என்ன? கூட பிறந்தவங்க எத்தனை பேர்? சொத்து எத்தனை இருக்கு என இப்படி தான் நாம் எல்லாருமே விசாரிப்போம். அப்போதைய சூழ்நிலைக்கு ஆரோக்கியத்தை பற்றியோ அல்லது வியாதிகளை பற்றியோ கேட்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமே இல்லாமல் இருந்தது. ஏனென்றால் உணவுப் பழக்க வழக்கமும் சரியான முறையில் பின்பற்றப்பட்டது. உணவும் கலப்படமில்லாமல் ஆரோக்கியமாக இருந்தது.

ஆனால் இந்த காலத்தில் உணவின் தரமும், உணவு பழக்க வழக்கமும் சரி இல்லை, சாப்பிடும் முறையும் சரியில்லை. வாழ்க்கைத் தரமும் வாழும் முறையும் சரியில்லை. எதுவுமே சரியில்லை என்கிற பட்சத்தில் கண்டிப்பாக திருமணம் நிச்சயிக்கபட்ட பிறகு, திருமணத்திற்கு முன்பாக, மணமகனும் மணமகளும் கண்டிப்பாக ஒரு சில பரிசோதனைகளை செய்து கொண்டே ஆக வேண்டும்.

இதையும் படியுங்கள்:
திருமணத்திற்கு தயாராகும் பெண்களே... உங்கள் சருமம் பத்திரம்!
Bride and groom Medical Tests for Before Marriage

இரத்தக் குழு இணக்கத்தன்மை சோதனை: (Blood Group Compatibility) உங்கள் துணையின் இரத்தக் குழுவை அறிவது மிகவும் முக்கியம். தம்பதிகள் Rh காரணி இணக்கத்தன்மை பற்றி கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். ஒரு பெண் Rh-நெகட்டிவ் மற்றும் ஆண் Rh-பாசிட்டிவ் என்றால், கர்ப்ப காலத்தில் மருத்துவ மேலாண்மை தேவைப்படும். அதுமட்டுமில்லாமல் சிக்கல்களும் ஏற்படலாம். இந்த சோதனை மூலமாக விழிப்புணர்வோடும் முன்னேற்பாடாகவும் எந்த விதமான பிரச்னைகளும் வராதபடிக்கு தயாராக இருக்கலாம். மேலும் இந்த சோதனையை முன்கூட்டியே செய்து தேவையான நடவடிக்கையை எடுத்து கொண்டால், பிறக்க போகும் குழந்தைக்கு உண்டாகக் கூடிய பிரச்னைகளை தடுக்கலாம்.

தலசீமியா பரிசோதனை: (Thalassemia Test) தலசீமியா என்பது பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு பரவும் ஒரு மரபணு இரத்தக் கோளாறு ஆகும். தாய், தந்தை இருவருமே நோய் கடத்திகளாக இருந்தால், தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை பிறக்கும் அபாயம் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை இருவருக்கும் இந்த நோய் இருந்தால் முன்னெச்சரிக்கையாக மருத்துவரை அணுகி மரபணுவிற்கான மருத்துவ ஆலோசனையை பெறலாம்.

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பரிசோதனை: (HIV/AIDS Test) திருமணத்திற்கு முன் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரிசோதனை செய்வது மிக மிக அவசியம். ஒருவேளை, அவர்களில் யாராவது ஒருவர் வைரஸால் பாதிக்கபட்டிருந்தால், மேற்படி பரவலாமலிருப்பதற்கும் மற்றும் ஆரோக்கியத்தை முறையாக நிர்வகிப்பதற்கும் தேவையான அடுத்த கட்டநடவடிக்கைகளை எடுக்க இந்த சோதனை உதவியாக இருக்கும்.

ஹெபடைடிஸ் பி மற்றும் சி பரிசோதனை: (Hepatitis B & C) ஹெபடைடிஸ் பி மற்றும் சி ஆகியவை கல்லீரலைப் பாதிக்கும் தொற்று நோய்களாகும். மேலும் இவை, எச்சில், வியர்வை ஆகியவற்றின் மூலமாக அடுத்தவர்களுக்கு பரவுகின்றன. இந்த வைரஸ்கள் பிரசவத்தின்போது தாயிடமிருந்து குழந்தைக்கும் பரவக்கூடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், தேவையான சிகிச்சையை எடுத்து கொண்டு நிலைமையை கட்டுபடுத்தி, அவர்களுடைய துணை மற்றும் குழந்தைக்கு பரவுவதைத் தடுக்கலாம்.

பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (STIs) சோதனை: சிபிலிஸ், கோனோரியா, கிளமிடியா மற்றும் ஹெர்பெஸ் போன்ற STI நோய்கள்(sexually transmitted infection) கருவுறுதலையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். உங்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாவிட்டாலும், அது ஒரு கேரியராக இருக்க வாய்ப்புள்ளது. தேவையான சிகிச்சையை ஆரம்ப நிலையில் எடுத்து கொண்டால், அது இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மேலும் எதிர்கால சிக்கல்களைத் தடுக்கவும் உதவும்.

கருவுறுதல் சோதனை: (Fertility Test) இந்த கருவுறுதல் சோதனையானது, இரு துணைவர்களின் கருத்தரிக்கும் திறனைப் பற்றிய நுண்ணறிவை வழங்கும். ஆண்கள் விந்து பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படலாம், மேலும் பெண்கள் அண்டவிடுப்பின் மற்றும் ஹார்மோன் சோதனைகளை மேற்கொள்ளலாம். எதிர்கால கர்ப்பங்களைத் திட்டமிடுவதற்கும் இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கும் இந்த பரிசோதனை உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
Pap smear பாப் ஸ்மியர் பரிசோதனை கல்யாணம் ஆகாத பெண்மணிகளுக்கு மறுக்கப்படுகிறதா?
Bride and groom Medical Tests for Before Marriage

மரபணு அல்லது பரம்பரை நோய் சோதனை: (Genetic Screening) மரபணு சோதனையின் மூலமாக இருவருக்கும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ், அரிவாள் செல் இரத்த சோகை, டே-சாக்ஸ் நோய் அல்லது ஹண்டிங்டன் நோய் போன்ற பரம்பரை நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறியலாம். இதன் மூலமாக தம்பதியினருக்கு அவர்களின் குழந்தைகளைப் பாதிக்கக்கூடிய பரம்பரை வியாதிகளை குறித்து எச்சரிக்கையாக இருக்கலாம்.

மனநல பரிசோதனை: (Mental Health Screening) மனநலமும் உடல் ஆரோக்கியத்தைப் போலவே முக்கியமானது. மனச்சோர்வு, பதட்டம், இருமுனை கோளாறு அல்லது ஸ்கிசோஃப்ரினியா போன்ற நிலைமைகள் திருமண வாழ்க்கையை கணிசமாக பாதிக்கலாம். மனநல பரிசோதனையானது, இருவரின் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது மேலும் தம்பதிகளுக்கு உணர்ச்சி பூர்வமான சவால்களை சமாளிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங்கையும் கொடுக்க உதவுகிறது. மேலும் இருவருக்கும் பரஸ்பர புரிதலும் உண்டாகும்.

நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த பரிசோதனை: (Diabetes & Hypertension) நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நிலைமைகள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம், அதனால் இல்லற வாழ்க்கை முறை மற்றும் கருவுறுதல் பாதிக்கப்படலாம். இந்த நிலைமைகளை சரி செய்யாவிட்டால், அது நீண்டகால சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இந்த பரிசோதனையை முன்கூட்டியே செய்வதால், தம்பதிகள் ஒன்றாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் திட்டமிடவும், ஆரோக்கியத்தை முன்கூட்டியே நிர்வகிக்கவும் ஏதுவாக இருக்கும்.

காசநோய் (TB) பரிசோதனை: (TB Screening)காசநோய் இன்னும் பல நாடுகளில் பரவலாக உள்ளது மற்றும் இது மிகவும் எளிதில் பரவக்கூடிய தொற்றுநோய். திருமணத்திற்கு முன்பு காசநோய் பரிசோதனையின் மூலமாக (மாண்டோக்ஸ் சோதனை அல்லது மார்பு எக்ஸ்ரே மூலம்) ஆரம்பகாலத்தில் நோயை அறிந்து அதற்கான சிகிச்சையை பெற்றால் துணைக்கும் மற்றும் குழந்தைக்கும் பரவாமலிருக்கும்.

இதையும் படியுங்கள்:
திருமணத்திற்கு ரெடியாகிவிட்டால், செய்துகொள்ளுங்கள்!
Bride and groom Medical Tests for Before Marriage

திருமணத்திற்கு முன்னால் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டும், ஊரை சுற்றி கொண்டும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தால் மட்டும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியாது. மேலும் பிறக்க போகும் குழந்தைகளின் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். ஆகவே மணமகளும், மணமகனும் திருமணத்திற்கு முன்கூட்டியே மேற்கூறிய பரிசோதனைகளை செய்து கொண்டு, அதில் ஏதாவது குறையிருந்தால் அதை சரி செய்து கொண்டு ஆரோக்கியமான மற்றும் சந்தோஷமான புது வாழ்க்கையை வாழ தொடங்குங்கள்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com