திகில் தொடர்: ட்ரோஜன் ஹார்ஸ் - அத்தியாயம் 2

மாரடைப்பு என நம்பப்பட்ட மரணத்தின் பின்னணியில் ஒளிந்திருந்த தொழில்நுட்பப் பொறி எது?
Trojan Horse - Tamil Horror Series Story | திகில் தொடர்: ட்ரோஜன் ஹார்ஸ்
Trojan Horse | ட்ரோஜன் ஹார்ஸ்Image Credit: ChatGPT
அசோக்குமார்

அசோக்குமார் - சென்னை சுங்கத்துறையில் பணிபுரியும் இவர் சோழவேங்கை கரிகாலன், கடவுள் தேசம் என பத்துக்கும் மேற்பட்ட நூல்களை விஜயா பதிப்பகம், ஜீரோ டிகிரி பதிப்பகங்களின் மூலமாக வெளியிட்டிருக்கிறார். உலகத் தமிழ் பண்பாட்டு மையம், சௌமா, கலைமகள் விருதுகளை பெற்றிருக்கிறார். குமுதம், ஆனந்த விகடனில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவரது அறிவியல் புனைவு சிறுகதைகள் ஆங்கிலத்தில் Metastellar, Electric spec மின்னிதழ்களில் வெளியாகியுள்ளன. Writers of the future போட்டியின் சிறப்பு பரிசை இருமுறை வென்றிருக்கிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

திகில் தொடர்: ட்ரோஜன் ஹார்ஸ் - அத்தியாயம் 2

அதர்வா போஸ்ட் மார்ட்டம் செய்தாகவேண்டும் என்றதும்,

 "மாரடைப்புல செத்ததுக்கு எதுக்கு போஸ்ட் மார்ட்டம் பண்றீங்க?" என்றான் அந்த இளைஞன்.

"உங்க பேரு?"

"வினய்."

"மிஸ்டர் வினய், நான் உங்ககிட்ட பர்மிஷன் கேட்கல. இன்பர்மேஷன் குடுத்தேன்." அதர்வாவின் குரல் இறுக்கமாக இருந்தது.

சிவராமன் அவசரமாக இடைபுகுந்தார். "சாரி சார். எல்லாருக்கும் இன்பார்ம் பண்ணியாச்சி. லேட்டாவுமேனு அப்படி பேசுறான். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா?"

"எதையும் மிஸ் பண்ணிடக்கூடாதுனு நினைக்கிறேன். உங்களுக்கு மறுப்பேதும் இல்லையே?"

"கண்டிப்பா இல்ல. பார்மாலிடீஸைக் கொஞ்சம் சீக்கிரம் முடிச்சிங்கன்னா பரவால்ல..."

"டாக்டர்ட்ட பேசி இன்னைக்கே தரச் சொல்றேன்."

"தேங்க்யூ..."

அதர்வா போனுடன் வெளியே நடந்தான்.

"தேங்க்யூ பார் கம்மிங்..." என்றது சிலிக்கான் குரல்.

"அத ஆப் பண்ணு" என்று சிவராமன் வேலைக்காரனிடம் கடுப்புடன் கைகாட்டினார்.

வினய் இன்ஸ்பெக்டரிடம் "லேட்டாகாதுன்னு சொன்னீங்க... இவர் இப்படி சொல்றார்," என்றான் கோபமாக.

Loading content, please wait...