

சந்திரனில் மனிதன் மீண்டும் இறங்கும் போட்டியில் அமெரிக்கா, சீனா இரண்டும் தீவிரமாக களமிறங்கியுள்ளன. நாசா 500 கோடி டாலர் நிதி, ப்ளூ ஆரிஜின், ஸ்பேஸ் எக்ஸ் உதவி, அரசியல்-பொருளாதார சந்தேகங்கள் என சிக்கல்களில் சிக்கியிருக்க, சீனா ‘ஆய்வு, இறங்கு, தங்கு’ என்ற மூன்றடுக்குத் திட்டத்துடன் சாங்கே மிஷன்கள் மூலம் முன்னிலை பிடிக்க முயல்கிறது.
மீண்டும் சந்திரனுக்கு மனிதன் பயணப்பட தயார்!
இந்த 2026ம் ஆண்டு ஏப்ரல் மாரம் 6ம் தேதி ஜெர்மி ஹான்ஸன் சந்திரனுக்கு அருகே ஏழு மணி நேரம் பறந்து ஏராளமான படங்களை எடுத்துள்ளார்.
இப்போது சந்திரனில் மனிதன் இறங்க ஆகும் உத்தேச கூடுதல் பிரம்மாண்ட தொகையான 500 கோடி டாலரை நாஸா அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கிறது. (ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 95.66) இவ்வளவு தொகையை அரசாங்கம் தருமா என்பது கேள்விக் குறி தான். இதுவரை அளித்த நிதி என்ன ஆனது என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் இப்போது இரண்டு பெரிய நிறுவனங்கள் இந்தப் பயணத்திற்கு உதவத் தயார். ஆனால் அந்த நிறுவனங்களுக்கான லாப நோக்கும் இருக்கும் அல்லவா?
ப்ளூ ஆரிஜின் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களாலும் தங்கள் இலக்கை சரியாக எட்ட முடியவில்லை. இந்தக் கம்பெனிகளும் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துள்ளன.
நாஸாவின் நிர்வாக அதிகாரியான ஐஸக்மேன் சீனா அமெரிக்காவை முந்தி சந்திரனில் இறங்கிவிடக் கூடும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
சந்திரனில் மனிதன் இறங்கும் திட்டம் ஈரான் போர் போல முடிந்து விடக் கூடாது என்று பல அமெரிக்கர்களும் கிண்டல் செய்கிறார்கள்.
சரியான திட்டத்துடன், போட்ட பணத்திற்கான வெற்றியை உறுதி செய்து, களத்தில் இறங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
CHANGE 6
சீனாவோ முதலில் மிகத் துல்லியமாக திட்டத்தை வகுக்கிறது. மூன்று படித் திட்டம் என்று இதைச் சொல்லலாம். முதலில் ஆளில்லா விண்கலத்தை அனுப்பி ஆய்வு நடத்தல், அடுத்து விண்வெளி வீரர்கள் சந்திரனில் இறங்குவது, அடுத்து நீண்டகாலம் சந்திரனில் தங்கும் திட்டம் என்று இப்படி மூன்றடுக்குத் திட்டத்தை சீனா கொண்டுள்ளது. EXPLORE, LAND, INHABIT – ஆய்வு செய், இறங்கு, தங்கு – இது தான் சீனாவின் திட்டம்.
முதல் படி: ஆய்வு நடத்தல் 2004-2024 – இது வெற்றிகரமாக முடிந்து விட்டது.
இரண்டாம் படி: விண்வெளி வீரர்கள் சந்திரனில் இறங்குவது. 2023-2030 – இது இப்போது திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது.
மூன்றாம் படி: – சந்திரனில் நிரந்தரமாக தங்குவது – 2030-2040 – இதைத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.
சாங்கே -1: 2007ல் பெற்ற வெற்றியானது சீனாவை சந்திரனைச் சுற்றி வரும் ஐந்தாவது நாடாக ஆக்கியது. 494 நாட்கள் சந்திரனைச் சுற்றி சந்திரனின் வரைபடத்தையும் இடங்களையும் நன்றாகக் குறித்துக் கொண்டது.
சாங்கே என்பது சந்திர தேவதையைக் குறிக்கும் சீனச் சொல் ஆகும்.
சாங்கே 3 சீனாவின் ‘தரையிறங்குவதை’ சாதித்தது. யுடு ரோவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியது.
சாங்கே 4 2019ல் சந்திரனின் இன்னொரு பக்கத்தில் இறங்கி உலகை வியக்க வைத்தது.
சாங்கே – 5 2020ல் 1731 கிராம் சாம்பிள்களை பூமிக்குக் கொண்டு வந்தது. கடந்த 44 வருடங்களில் இந்த மாதிரிகளே புதியவையாகும்.
சாங்கே – 6: 1935 கிராம் சாம்பிள்களை சந்திரனின் இன்னொரு பக்கத்திலிருந்து எடுத்து வந்தது. எந்த நாடும் சாதிக்காத சாதனை இது.
1900 ஆய்வுப் பேப்பர்களை இதனால் சீனா தயாரித்து விட்டது.
தங்களது விண்வெளி வீரர் குழு சந்திரனில் இறங்கப் போவதாகவும் 2030 என்பதே இலக்கு ஆண்டு என்றும் சீனா அதிகாரபூர்வமாக 2023ல் மே மாதம் அறிவித்தது.
இதற்காக வடிவமைக்கப்பட்டவை இரண்டு விண்கலங்கள். ஒன்று லெங்யூ (சந்திரனைத் தழுவுதல் என்று அர்த்தம்) இன்னொன்று மெங்ஜோ.(கனவு வாகனம் என்று அர்த்தம்)
சந்திரப் பயணத்திற்குத் தயாராக நான்கு குழுக்களை சீனா பயிற்றுவித்துள்ளது. ஏற்கனவே விண்கலங்களில் பயணப்பட்ட அனுபவம் உள்ளவர்களே சந்திரனில் இறங்கப் போகின்றனர்.
இறங்குமிடத்தையும் சீனா ஆராய்ந்து வருகிறது. 30 இடங்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. அவற்றில் மூன்று இடங்கள் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் படியான ‘நிரந்தரமாகத் தங்குவதற்கு’ ரொபாட்டுகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
சாங்கே – 7 சந்திரனின் தென் பகுதியை ஆராயும். 18 அறிவியல் சாதனங்கள் இதற்குத் தயார்.
இப்படி வரிசையாக தனது திட்டங்களை சீனா வகுத்து முன்னேறி வருகிறது.
ஆக மீண்டும் சந்திரனுக்கு மனிதன் பயணப்பட்டு அங்கு இறங்கப் போகிறான்.
முதலில் சாதிக்கப் போவது, அமெரிக்காவா. சீனாவா – அது தான் இன்றைய கேள்வி.
காலம் தான் இதற்கு பதில் சொல்லும்!
நிலவுப் போட்டியில் அமெரிக்கா மற்றும் சீனாவின் வியூகங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு, விண்வெளித் துறையில் அடுத்த நூற்றாண்டில் நடக்கவிருக்கும் அறிவியல் திருப்பங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் தெளிவைப் பெறுவீர்கள்.