உங்கள் வாகன நம்பர் பிளேட்டில் மறைந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

TN 09 முதல் 4 இலக்க எண்கள் வரை ஒவ்வொரு எழுத்துக்கும் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான அர்த்தங்கள்.
நம்பர் பிளேட்
நம்பர் பிளேட்Gemini image
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிலும் லட்சக்கணக்கில் இரு சக்கர வாகனங்களும் , நான்கு சக்கர வாகனங்களும் வீதிகளில் உலா வருகின்றன. வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஒரே மாதிரி வடிவத்தில் பல வண்ணங்களில் வாகனங்களை உற்பத்தி செய்கின்றன. ஒரே வண்ணத்தில் ஒரே மாதிரி வடிவத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இருப்பதாலும் இந்த வாகனங்கள் ஏதேனும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டாலோ? அல்லது காணாமல் போனாலோ, அந்த குறிப்பிட்ட வாகனத்தை கண்டுபிடிக்க தனித்துவமான பதிவு எண் நடைமுறை சர்வதேச அளவில் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு வாகனத்தின் முகப்பிலும் பின்பகுதியிலும் தனித்துவம் மிக்க எண்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த எண்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் , மாவட்டம் போன்றவற்றை எளிதில் கண்டறியும் வகையும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.உதாரணமாக, "TN 09 AK 1234" என்ற பதிவு எண்ணை எடுத்துக் கொண்டால், அதில் உள்ள எண்ணும் எழுத்தும் பின்னணியில் எளிதில் கண்டறியும் வகையில் தகவல்களை உள்ளடக்கியுள்ளது.

இந்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988 (Motor Vehicles Act, 1988)-ன் படி, இந்தியாவில் பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்கள் அனைத்துமே கட்டாயமாக மத்திய மற்றும் மாநில அரசு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO - Regional Transport Office) பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு எண்கள் மனிதர்களின் கைரேகை போன்றே தனிப்பயன் கொண்டது. பதிவு எண்ணை பெற குறிப்பிடத்தக்க வரிகளைக் கட்ட வேண்டும். பதிவு எண் இன்றி வாகனங்களை சாலையில் இயக்குவது மோட்டார் சட்டப்படி குற்றமாகும் .

​எடுத்துக்காட்டாக "TN 09 AK 1234" என்ற எண்ணில் TN என்பது மாநிலக் குறியீடு , இது தமிழ்நாடு மாநிலம் என்பதன் சுருக்கமாகும். இதே இடத்தில் KL என்று பதியப்பட்டால் அது கேரளா , KA என்றால் கர்நாடகா , AP என்றால் ஆந்திர பிரதேஷ் என்று பொருள் கொள்க. இது போன்றே இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கும் இரண்டு எழுத்துக்களிலான தனித்துவக் குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

நம்பர் பிளேட்
நம்பர் பிளேட்Gemini image

இதன் மூலம் இரண்டு எழுத்து குறியீட்டை பார்த்த உடனே எளிதில் எந்த மாநிலம் என்று கண்டறிந்து விடலாம்.

இதையும் படியுங்கள்:
நெதர்லாந்து கார் திருட்டு: டொயோட்டா, ரெனால்ட் கார்களுக்கு ஆபத்தா?
நம்பர் பிளேட்

மாநில குறியீட்டை தொடர்ந்து , அடுத்து வரும் இரண்டு இலக்க எண்கள் RTO அலுவலகக் குறியீடாகும் (District / Zonal RTO Code). மாவட்டங்கள் மற்றும் நகரங்களின் பல RTO அலுவலகங்கள் இயங்குகின்றன. ​இங்கு உள்ள 09 என்ற எண், சென்னை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தைக் (Chennai Central RTO )குறிக்கிறது. உதாரணமாக TN 01 என்ற எண்ணில் இருந்து TN 22 என்ற எண் வரை சென்னை பகுதியில் பதிவு செய்யப்பட்டது என்று அறிந்துக் கொள்ளலாம். TN 31 என்றால் கடலூர், TN 91 என்றால் சிதம்பரம் என்று அறிந்து கொள்ளலாம்.

அடுத்ததாக மூன்றாவது பகுதியில் உள்ள ஆங்கில எழுத்துக் குறியீடு அல்பாபெடிக் சீரிஸ் (Alphabetic Series Code) எனப்படும் எழுத்துத் தொடர். இந்த எழுத்துக்கள் ​ஒரு குறிப்பிட்ட RTO அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இந்த எழுத்துக்கள் மாற்றப்படுகின்றன. இறுதியாக இருக்கும் 4 இலக்க எண்கள் 0001 முதல் 9999 எண்களை தாண்டினால் இரண்டு எழுத்து ஆங்கில குறியீடு மாற்றப்படும். ஆரம்பத்தில் ஒரு எழுத்தில் தொடங்கி (A, B, C... Z), பின்னர் இரண்டு எழுத்துக்களாக (AA, AB, AC ... AK) என்று குறியிடப்பட்டுள்ளது. ​AK என்ற குறியீடு இது போன்று வாகன எண்ணிக்கை அதிகரித்ததால் கொடுக்கப்பட்ட எண்ணாகும்.

இதையும் படியுங்கள்:
கார் நம்பர் பிளேட் வண்ணங்களின் ரகசியம்: எந்த நிறம் எதற்கு பயன்படும் தெரியுமா?
நம்பர் பிளேட்

இறுதியாக உள்ள நான்கு இலக்க எண்கள் வாகனத்தின் பிரத்யேக எண் (Unique Numerical Sequence) ஆகும். ​0001 முதல் 9999 வரையிலான எண்களுக்குள் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு தனி எண் வழங்கப்படும். இதில் விருப்பட்ட எண்களை வாகன உரிமையாளர் கேட்டுப் பெறலாம். சாதாரண எண்களாக இருந்தால் கூடுதல் தனிக் கட்டணம் கிடையாது. அதுவே 1111, 2222, 5555 , 7777 , 9999 , 3355 , 7799 போன்ற பேன்சி/ விஐபி ரக எண்களுக்கு தனியாக கூடுதல் கட்டணம் உண்டு.

இந்த எண்களைப் போல வாகன நம்பர் பிளேட் நிறத்திற்கும் தனித்துவமான காரணம் உண்டு.

வாகனப் பதிவு எண்களுக்குப் பின்னால் போக்குவரத்துத் துறையின் மூலம் பின்பற்றப்படும் முறையான குறியீட்டு முறைகளையும், அதன் துல்லியமான தர்க்கத்தையும் வாசகர்கள் இதன் மூலம் அறிந்து கொள்கிறார்கள். இதன் மூலம் தினசரி சாலையில் காணும் எண்கள் அவர்களுக்கு சாதாரணமானதாக இல்லாமல், பயனுள்ள தகவல்களாக மாறுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com