கார் நம்பர் பிளேட் வண்ணங்களின் ரகசியம்: எந்த நிறம் எதற்கு பயன்படும் தெரியுமா?

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள பல்வேறு வாகன நம்பர் பிளேட்களின் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யமான தகவல்கள்.
நம்பர் பிளேட் - Number Plate Rules
நம்பர் பிளேட் - Number Plate Rules
நடேஷ் கன்னா

என் பெயர் நடேஷ் கன்னா. எனது உண்மை பெயர் சிவராம சுப்ரமணியன். எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு. தற்போது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கடந்த 57 ஆண்டுகளாக பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறேன். சிறுகதை கட்டுரைகள் கவிதைகள் துணுக்குகள் ஜோக்ஸ் என எழுதி உள்ளேன். நான் கல்கி, தீபம், மங்கையர் மலர், குமுதம், விகடன், சாவி இதயம் பேசுகிறது முத்தாரம், ராணி, தேவி, ஜூனியர் விகடன், நக்கீரன், துக்ளக், தினமலர், போன்ற அனைத்து பத்திரிகைகளுக்கும் எழுதியுள்ளேன். எனக்கு ஆரம்ப காலத்தில் எழுத தூண்டியது கல்கி வார இதழ். அதில் நான் எழுதிய முதல் துணுக்கு இடம் பெற்றது அன்றிலிருந்து இன்று வரை எழுதி வருகிறேன். நான் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. என்னை எழுத தூண்டிய கல்கிக்கு வாழ்த்துக்கள்.

Updated on: 

இந்தியாவில் உள்ள வாகனங்களின் எந்த வகை கார் நம்பர் பிளேட்டுகள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதை பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

வெள்ளை பின்னணியில் கருப்பு எழுத்துக்கள்

இந்த வகை கார்கள் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படும் வகையில் நம்பர் பிளேட் பொருத்தப்படுகிறது. இதை வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது.

மஞ்சள் பின்னணிகள் கருப்பு எழுத்துக்கள்

வணிக ரீதியான பயன்பாட்டுக்கு உரிய வாகனமாகும். ஆட்டோ டாக்ஸி பேருந்து லாரிகள் இவைகள் அடங்கும் இதற்கு வணிக ரீதியான உரிமம் தேவை.

பச்சை பின்னணியில் வெள்ளை மஞ்சள் எழுத்துக்கள்

இவை மின்சார வாகனங்களை குறிக்கும் சொந்த பயன்பாட்டிற்கு வெள்ளை நிற எழுத்துக்களையும் வணிக பயன்பாட்டிற்கு மஞ்சள் நிற எழுத்துக்களையும் குறிக்கும்.

நீல நிற பின்னணியில் வெள்ளை எழுத்துக்கள்

வெளிநாட்டு தூதரக வாகனங்கள் ஐநா சபை அல்லது வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனமாகும். இத்தகைய வாகனங்களுக்கு இந்த நிறம் வழங்கப்படுகிறது. இந்த வாகனங்களில் தூதரக குறியீடு இருக்கும்.

கருப்புபின்னணியில் மஞ்சள் எழுத்துக்கள்

வாடகைக்கு ஓடக்கூடிய வாகனங்களாகும் வணிக வாகனங்கள் வாடகை வாகனங்கள் இதற்கு வணிக ரீதியான ஓட்டுநர் உரிமம் தேவை இல்லை.

சிவப்பு பின்னணியில் தங்க நிற சின்னம்

இந்திய குடியரசு தலைவர், மாநில ஆளுநர்கள் வாகனங்களில் இந்த நம்பர் இருக்கும். வாகன எண்ணுக்கு பதிலாக இந்திய தேசிய சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும்.

மேல் நோக்கிய அம்புக்குறி வாகனம்

இது பாதுகாப்பு அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்ட ராணுவ வாகனங்கள் ஆகும். எண்களுக்கு முன்னால் அம்புக்குறி ஈடு இருக்கும்.

இந்திய பிரதமர் காரில் நம்பர் பிளேட் சாதாரண கார் போல் வெள்ளை நிறத்தில் இருக்கும். வெளிநாட்டு தூதர்கள் பிரதிநிதிகள் பயன்படுத்தும் வாகனத்தில் நீல நிற நம்பர் பிளேட் வழங்கப்படுகிறது. ராணுவ வாகனங்களில் 11 இலக்க எண் காணப்படும் நம் நாட்டை பொறுத்தவரையில் 1988 படிதான் அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

நம்பர் பிளேட் - Number Plate Rules
நம்பர் பிளேட் - Number Plate Rules

ஒவ்வொரு வாகனத்துக்கும் முறையான லைசன்ஸ் பெறுவது அவசியம். இல்லை என்றால் சட்ட விரோதமானது வாகனத்தில் எண்கள் தெளிவாக தெரியவேண்டும். இந்த நம்பர் பிளேட் பல வண்ணங்களில் பொருத்தப்படுகிறது. சோதனை ஓட்டத்திற்கு சிவப்பு நிற நம்பர் பிளேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

மத்திய அரசு மாநில அரசு பயன்படுத்தும் வாகனங்களில் இந்திய அரசின் சின்னத்துடன் கூடிய சிவப்பு நிற நம்பர் பிளேட் பயன்படுத்தப்படுகிறது. இதை உயர்மட்ட அதிகாரிகள் பயன்படுத்துகிறார்கள். தங்க நிறத்தில் தேசிய சின்னத்துடன் இருந்தால் அது ஜனாதிபதி வாகனம் ஆகும்.

மேல் நோக்கி அம்புக்குறியீடு இருந்தால் அது ராணுவம் விமானப்படை கடற்படை வாகனமாகும். இந்த வாகனத்துக்கு போக்குவரத்து விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அமெரிக்கா சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது மிகப்பெரிய வாகன சந்தையாக இந்தியா திகழ்கிறது.

கருப்பு நிற பிளேட்டில் வெள்ளை நிறத்தில் பதிவு எண் இருந்தால் அது சொகுசு ஹோட்டலுக்கு சொந்தமானது.

பொதுமக்கள் தங்கள் வாகனத்தில் B. H பாரத் சீரிஸ் நம்பர் பிளேட்டுகளை பொருத்திக்கொள்ளலாம். இப்போது கார் நம்பர் பிளேட் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.

இதையும் படியுங்கள்:
ரோட்டில் இருக்கும் வெள்ளை மஞ்சள் கோடுகளுக்கு இதுதான் அர்த்தமா... இத்தனை நாள் தெரியாம போச்சே!
நம்பர் பிளேட் - Number Plate Rules

இந்த தகவல்களைத் தெரிந்து கொள்வதன் மூலம், சாலையில் செல்லும் எந்தவொரு வாகனத்தின் தன்மையையும், அது எந்த பயன்பாட்டிற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் உடனடியாக உங்களால் துல்லியமாக அடையாளம் காண முடியும்.

logo
Kalki Online
kalkionline.com