நெதர்லாந்து கார் திருட்டு: டொயோட்டா, ரெனால்ட் கார்களுக்கு ஆபத்தா?

தொழில்நுட்ப வசதிகள் கொண்ட நவீன ரக கார்களை குறிவைக்கும் திருடர்கள்; காப்பீட்டுத் துறை எச்சரிக்கை!
கார் திருட்டு - car theft Netherlands
கார் திருட்டு - car theft Netherlands
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on: 

நெதர்லாந்தில் நாளுக்குநாள் பெருகிவரும் கார் திருட்டு ஒரு முக்கியப் பிரச்சினையாக கவனம் பெற்றுள்ளது. ஆனால் சமீபத்திய புள்ளிவிவரங்கள் ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தை காட்டுகின்றன. 2025-ல் கார் திருட்டு கணிசமாக அதிகரித்த நிலையில், 2026-ன் முதல் ஆறு மாதங்களில் பயணிகள் கார்கள் திருட்டு முந்தைய ஆண்டின் அதே காலத்தைவிட 9 சதவீதம் குறைந்துள்ளது.

இதனால் திருட்டு பிரச்னை முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை; மாறாக, திருடர்களின் இலக்குகளும் செயல்படும் முறைகளும் வேகமாக மாறி வருகின்றன என்று காப்பீட்டுத் துறையும் வாகனக் குற்றத் தடுப்பு அமைப்பும் எச்சரிக்கின்றன.

2025-ல் ஏற்பட்ட பெரிய உயர்வு

2025-ம் ஆண்டு நெதர்லாந்தில் மொத்தம் 7,497 பயணிகள் கார்கள் திருடப்பட்டன. இது 2024-ஐவிட 12 சதவீதம் அதிகம். திருடப்பட்ட கார்களால் ஏற்பட்ட மொத்த நிதியிழப்பு 127 மில்லியன் யூரோவைத் தாண்டியது; இது முந்தைய ஆண்டைவிட சுமார் 38 சதவீத உயர்வு. ஒரு திருடப்பட்ட காருக்கு ஏற்பட்ட சராசரி இழப்பும் சுமார் 17,061 யூரோ ஆக உயர்ந்தது.

2025-ல் அதிகம் திருடப்பட்ட கார்களில் டொயோட்டா RAV4 முதலிடத்தில் இருந்தது. இந்த மாடலில் 387 கார்கள் திருடப்பட்டன. கியா ஸ்போர்டேஜ் 162 திருட்டுகளுடன் அடுத்த முக்கிய இலக்காக இருந்தது. ஃபியர் 500, வோல்ஸ்வாகன் போலோ VI, டொயோட்டா C-HR ஆகியவையும் அதிகம் திருடப்பட்ட மாடல்களில் இடம்பெற்றன.

2026-ல் நிலைமை மாறியது

2026-ன் முதல் ஆறு மாதங்களில் 3,476 பயணிகள் கார்கள் திருடப்பட்டுள்ளன. இது 2025-ன் முதல் அரையாண்டுடன் ஒப்பிடும்போது 9 சதவீதம் குறைவு. காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த இழப்பும் 66 மில்லியன் யூரோவிலிருந்து சுமார் 57 மில்லியன் யூரோவாக, அதாவது 13 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் திருடர்கள் பழைய மாடல்களுக்கு பதிலாக புதிய மாடல்களைத் திருடுகிறார்கள்.

2026 முதல் பாதியில் டொயோட்டா கொரோலா கிராஸ் 87 திருட்டுகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. ரெனால்ட் காப்டர் மாடல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக திருடப்பட்ட மாடலாக மாறியுள்ளது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திருடர்கள்

நவீன கார்களில் Keyless Entry, மின்னணு பூட்டுகள், கணினி கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்ற தொழில்நுட்பங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் கார்த் திருடர்கள் இந்தத் தொழில்நுட்பங்களில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைப் பயன்படுத்தித் தங்கள் கைவரிசையைக் காட்டுகிறார்கள். ஆக, ஒரு கார் மிகவும் நவீனமானது என்பதாலேயே அது திருட முடியாதது என்று கருத முடியாது என்பதை இவர்கள் சொல்லும் பாடம்.

கார் திருட்டு - car theft Netherlands
கார் திருட்டு - car theft Netherlands

திருடப்பட்ட கார்கள் எங்கே செல்கின்றன?

திருடப்பட்ட வாகனங்கள் அனைத்தும் நெதர்லாந்திலேயே தங்குவதில்லை. மீட்கப்பட்ட வாகனங்களில் வெளிநாடுகளில் குறிப்பாக ஜெர்மனி, பல்கேரியா மற்றும் பெல்ஜியத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

கார் உரிமையாளர்கள் என்ன செய்யலாம்?

கார் திருட்டுகள் பெருகிகரும் நிலையில் கார் உரிமையாளர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. குறிப்பாக அதிக திருட்டு அபாயம் கொண்ட மாடல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்துவது அவசியம்.

இந்த அறிக்கையின் மூலம் நெதர்லாந்தில் மாறிவரும் வாகனக் குற்றங்களின் தன்மையைப் புரிந்து கொண்டு, Keyless Entry போன்ற நவீன தொழில்நுட்பக் குறைபாடுகளில் இருந்து உங்கள் காரைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வையும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நீங்கள் பெற முடியும்.

இதையும் படியுங்கள்:
பழைய மெக்கானிக் முதல் லேட்டஸ்ட் ECU வரை: உங்க கார் அடிக்கடி ரிப்பேர் ஆகாம தடுக்க என்ன பண்ணனும்?
கார் திருட்டு - car theft Netherlands
logo
Kalki Online
kalkionline.com