தொழில் மயமாகிக் கொண்டிருக்கும் யோகப் பயிற்சிகள்!?

Yoga
Yoga
Published on

நம் இந்திய நாட்டில் தோன்றிய உடல் நலம் காக்கும் யோகக் கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில், ஆண்டுதோறும் ஏதாவதொரு நாளை பன்னாட்டு யோகா நாளாக அறிவித்து கொண்டாட வேண்டும் என்று நம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஐநா பொதுச்சபையில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாளன்று வலியுறுத்தி உரையாற்றினார். அதன் பிறகு,193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஜூன் 21 ஆம் நாளை 'பன்னாட்டு யோகா நாளாக' அறிவிக்கும் தீர்மானத்தை 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று நிறைவேற்றியது. அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு முதல்ஜூன் 21 ஆம் நாள் பன்னாட்டு யோகா நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜூன் 21 ஆம் நாள் பன்னாட்டு யோகா நாளாக அறிவிக்கப்பட்ட பின்பு, உலகம் முழுவதும் யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதும், வேகமாக வளர்ந்து வரும் உடல் நலத்திற்கான நடைமுறைகளில் ஒன்றாக யோகா மாறியிருக்கிறது என்பதும் உண்மைதான்.

அண்மையில் எடுக்கப்பெற்ற ஒரு கணக்கெடுப்பின்படி,

  • உலக அளவில் சுமார் 300 மில்லியன் மக்கள் தொடர்ந்து யோகா பயிற்சி செய்கின்றனர்.

  • அமெரிக்கர்களில் 36 மில்லியன் பேர் யோகா பயிற்சியைச் செய்கின்றனர்.

  • கடந்த எட்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் யோகா பயிற்சியாளர்களின் எண்ணிக்கை 50% அளவில் அதிகரித்திருக்கிறது.

  • யோகா பயிற்சி செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 150% எனும் அளவில் அதிகரித்திருக்கிறது.

இதே போன்று, யோகா பயிற்சியாளர்கள், யோகா பயிற்சி பெறுபவர்களிடம் பயிற்சி குறித்துக் கேட்டறிந்தனர். அப்போது,

  • 86% பேர் மன அழுத்தத்தைக் குறைப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

  • 69% பேர் மனோபாவம் மற்றும் மனநிலையில் நேர்மறையான எண்ணம் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

  • 63% பேர் யோகா அவர்களை மனதளவில் அதிக உடற்பயிற்சி செய்யத் தூண்டுவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

  • 59% பேர் நல்ல முறையில் தூங்க முடிகிறது என்றும் தூக்கத்தின் நேரம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

  • 28% பேர் மனச்சோர்வு அறிகுறிகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

  • 79% பேர் தங்கள் சமூகத்துடன் நெருக்கமாக இருப்பதாகவும், சமூகத்துடன் சேர்ந்திருக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நல்ல விஷயங்கள் எல்லாம் ஒரு புறம் இருக்க, 'யோகா' என்பது இன்று தொழில் மயமாகிவிட்டது என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டியதாய் தான் இருக்கிறது!

இதையும் படியுங்கள்:
யோகா - ஆரோக்கியத்தின் திறவுகோல்!
Yoga

சந்தைப்படுத்தல் - சில புள்ளி விவரங்கள்:

ஜூன் 21 அன்று பன்னாட்டு யோகா நாளாக அறிவிக்கப்பட்ட பின்பு, யோகா தொழில் மயமாகிவிட்டது. யோகா பயிற்சி, யோகா பயிற்சிப் பொருட்கள், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் என்று புதிய சந்தை ஒன்று ஏற்பட்டுவிட்டது.

  • யோகப்பயிற்சி மேற்கொள்பவர்கள் பல்வேறு பொருட்களை வாங்க முடியும். எடுத்துக்காட்டாக, 'யோகா' என்ற வார்த்தைக்காக அமேசானில் தேடினால், ஆடைகள் முதல் வீடியோ படிப்புகள், யோகா பாய்கள் மற்றும் மிக அடிப்படையான அறிவுறுத்தல், கையேடுகள் வரை ஏராளமான பொருட்களைக் காண முடியும்.

  • யோகா துறையின் மதிப்பு சுமார் 88 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டளவில், யோகா தொழில் 215 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, யோகா தரவுகளின்படி, அமெரிக்க யோகா சந்தை ஒவ்வொரு ஆண்டும் 9.8% வேகத்தில் வளர்ந்து வருகிறதாம்.

  • யோகா பயிற்சிக்கான பாய்கள் நடைமுறையில் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் தேவை. இதன் விளைவாக, யோகா பாய்களுக்கான சந்தை 2020 இல் $ 1.4 பில்லியனில் இருந்து 2026 க்குள் $ 2.6 பில்லியனாக விரிவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  • மிகவும் பிரபலமான யோகா ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லுலுலெமன் Lululemon, 2017 மற்றும் 2018 க்கு இடையில் $929 மில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் இது ஒரே ஆண்டில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

  • இந்த ஆடை தயாரிப்பு தொடர்ந்து பிரபலமடைந்து வருகிறது என்ற போதிலும், யோகா ஆடை தயாரிப்பில் அத்லெட்டா மற்றும் ஃபேப்லெடிக்ஸ் போன்ற மற்ற வலுவான போட்டியாளர்களும் தங்களது தயாரிப்பைச் சந்தைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

  • இந்திய சந்தையில் யோகா விற்பனை மற்றும் பாகங்கள் பிரிவில் அடிடாஸ் நிறுவனத்திற்கு 30 சதவீதம் லாபம் அதிகரித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com