அகண்ட நெற்றி அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருமா? சாமுத்ரிகா லட்சணம் கூறும் ரகசியம்!

சாமுத்ரிகா லட்சண சாஸ்திரத்தின்படி அகண்ட நெற்றி கொண்டவர்களின் குணநலன்கள், அறிவு மற்றும் அதிர்ஷ்டம் பற்றிய முழுத் தகவல்கள்.
சாமுத்ரிகா லட்சணம் | woman with Broad forehead
சாமுத்ரிகா லட்சணம் | woman with Broad foreheadImage credit: Gemini AI
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 
MM strip
MM strip

மனிதர்களைப் பார்த்தவுடனேயே அவர்களின் குணங்களை நம்மால் யூகிக்க முடிகிறதா? இதற்குக் காரணம் நம் முகத்தோற்றமும் சாமுத்ரிகா லட்சணம் என்கிறது சாஸ்திரம். குறிப்பாக, ஒருவரின் அகண்ட நெற்றி அவரது எதிர்காலம், அதிர்ஷ்டம், அறிவு மற்றும் ராஜயோகத்தை எந்தளவுக்கு நிர்ணயிக்கிறது தெரியுமா? உங்களையோ அல்லது உங்களுக்குப் பிடித்தவர்களையோ பற்றி இந்த ஆன்மீக ரகசியங்களை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

தினம் தினம் நாம் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களை சந்திக்கின்றோம். சிலரைப் பார்த்தவுடனேயே காரணம் தெரியாமல் நமக்கு அவர்களைப் பிடித்து விடுகின்றது. சிலரைப் பார்த்தாலோ ஒதுங்கி போகத் தோன்றுகிறது. ஒருவரின் உருவ அமைப்பைக் கண்டு இவர்கள் இப்படித்தான், இவர்கள் குணம் இப்படித்தான் இருக்கும் என்று நாமே அவர்களைப் பற்றிய ஒரு புரிதலுக்கு வருகிறோம்.

சிலரிடம் நாமே வலியச் சென்று பேசத் தொடங்குவோம். உங்களை எங்கோ பார்த்தது போல் இருக்கிறது! எங்கிருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? என்று பேச்சை வளர்ப்போம். பலவிதமான கேள்விகளை கேட்போம். இவை எல்லாவற்றிற்கும் தோற்றப்பொலிவு தான் காரணம் என்கிறது சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம்.

இப்படி ஒருவரின் அங்க அமைப்புகளை வைத்து அவர்களுடைய எண்ணங்களை யூகிக்க நாம் முயற்சிகின்றோம். அது ஓரளவுக்கு சரியாக இருப்பதால்தான் சாமுத்ரிகா லட்சணம் சாஸ்திரத்தைப் பலரும் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துகின்றனர்.

சாமுத்ரிகா லட்சணம் சாஸ்திரத்தின்படி, அகண்ட நெற்றி (பெரிய அல்லது விரிந்த நெற்றி) என்பது ஒருவருக்கு மிகச்சிறந்த அதிர்ஷ்டம், அறிவு மற்றும் யோகத்தைக் குறிக்கும் அறிகுறியாகும். சாமுத்திரிகா லட்சணம் என்பது ஒரு மனிதனின் உடல் உறுப்புகளின் அமைப்பைக் கொண்டு அவர்களின் குணநலன்கள், எதிர்காலம் மற்றும் அதிர்ஷ்டத்தை கணிக்கும் ஒரு பண்டைய கலையாகும்.

இதையும் படியுங்கள்:
சண்டைகளைத் தாண்டி கணவன் - மனைவி மனதில் அன்பை வளர்க்கும் எளிய வழி முறைகள்!
சாமுத்ரிகா லட்சணம் | woman with Broad forehead

அகண்ட நெற்றிக் கொண்டவர்களுக்கான சாமுத்திரிகா லட்சண குணாதிசயங்கள்:

அதிர்ஷ்டம் மற்றும் செல்வம்:

அகண்ட நெற்றி உள்ளவர்கள் பிறப்பிலேயே நல்ல அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். சமுதாயத்தில் உயர்ந்த பதவிகளையும், மதிப்பையும் எளிதில் பெறுவார்கள். இவர்களிடம் பணப்புழக்கம் எப்போதும் நன்றாக இருக்கும். கைநிறைய சம்பாதிக்கும் திறமையும், சொத்துக்களை சேர்க்கும் யோகமும் இவர்களுக்கு இயல்பாகவே அமையும். இத்தகைய அமைப்பைக் கொண்டவர்கள் தங்களின் வாழ்க்கையில் செல்வ வளம், நிம்மதி மற்றும் ஆரம்பக் கால வாழ்க்கையிலேயே நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள்.

அறிவு மற்றும் கூர்மையான புத்தி:

சாமுத்திரிகா லட்சணத்தின்படி, பெரிய நெற்றி பரந்த அறிவைக் குறிக்கிறது. இவர்கள் எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் கூர்மையான புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திப்பதில் வல்லவர்கள். எந்த ஒரு கடினமான சூழ்நிலையையும் தங்கள் புத்திசாலித்தனத்தால் சமாளிப்பார்கள். அகன்ற நெற்றி என்பது சிறந்த ஞானம், கூர்மையான புத்தி மற்றும் உயர்ந்த சிந்தனைகளைக் குறிக்கிறது.

சாமுத்ரிகா லட்சணம் | woman with Broad forehead
சாமுத்ரிகா லட்சணம் | woman with Broad forehead

குண நலன்கள் மற்றும் தலைமைப் பண்பு:

இவர்களிடம் இயல்பாகவே பிறரை வழிநடத்தும் தலைமைப் பண்பு (leadership quality) இருக்கும். நிர்வாகத் துறைகளில் இவர்கள் பெரிய உயரங்களை அடைவார்கள். பொதுவாக அகண்ட நெற்றி உள்ளவர்கள் வாழ்க்கையின் சவால்களை மிகவும் முதிர்ச்சியுடனும், நிதானத்துடனும் கையாள்வார்கள். அமைதியானவர்களாகவும், மற்றவர்களிடம் அன்பாகவும், சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள். தெளிவான சிந்தனையும், சிறந்த நிர்வாகத் திறனும் இவர்களிடம் இயல்பாகவே காணப்படும்.

பெண்களுக்கு அகண்ட நெற்றி:

மனிதர்களின் உடல் உறுப்புகளின் அமைப்பை வைத்து அவர்களின் குணம் மற்றும் எதிர்காலத்தைக் கணிக்கும் இந்த சாஸ்திரத்தில், நெற்றிக்கு முக்கிய இடம் உண்டு.

சாமுத்திரிகா லட்சணப்படி, பெண்களுக்கு நெற்றி அகலமாகவும், பிறை வடிவில் (அரைவட்ட வடிவம்) சற்று மேடிட்டு பிரகாசமாகவும் இருந்தால், அது மகாலட்சுமியின் அம்சம் என்று கூறப்படுகிறது.

இவர்களின் வருகை குடும்பத்திற்குப் பொருளாதார ரீதியாக பெரிய முன்னேற்றத்தைத் தரும். இத்தகைய நெற்றி கொண்ட பெண்கள் தங்கள் புகுந்த வீட்டிற்கு பெருமளவிலான அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் கொண்டு வருவார்கள் என்று நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மன அமைதிக்கும் உடல் நலத்திற்கும் யோகா தரும் பயன்கள்!
சாமுத்ரிகா லட்சணம் | woman with Broad forehead

சாமுத்ரிகா லட்சணப்படி, உயர்ந்த மற்றும் பரந்த நெற்றியானது தீர்க்கமான அறிவைக் குறிக்கிறது. இவர்கள் மிகவும் புத்திசாலிகளாகவும், தீர்க்கமாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தங்களுடைய பேச்சுத் திறமையால் சமூகத்தில் நல்ல பெயரையும், புகழையும், கௌரவத்தையும் எளிதாகப் பெற்று விடுவார்கள் குடும்பத்தை மிக அழகாக வழிநடத்தும் பொறுப்புணர்வும் கொண்டிருப்பார்கள்.

பரந்த நெற்றியில் 2 அல்லது 3 தெளிவான கோடுகள் இருப்பது நல்லது. அது அவர்களின் பன்முக அறிவைக் காட்டும். ஆனால் நெற்றியில் அதிக சுருக்கங்களோ அல்லது தேவையில்லாத முடிகளோ இருப்பது சாமுத்ரிகா லட்சணப்படி சுபமாக கருதப்படுவதில்லை. அகன்ற நெற்றியுடன் சேர்த்து புருவங்கள் வில்லைப் போல வளைந்து (பிறை வடிவம்) ஒன்றோடொன்று ஒட்டாமல் இருந்தால் அவர்கள் பேரதிர்ஷ்டசாலிகளாகவும் பெரும் செல்வந்தர்களாகவும் வாழ்வார்கள்.

உங்கள் உடல் அங்க அமைப்பில் உள்ள சிறப்பம்சங்கள் மூலம் மறைந்திருக்கும் உங்களின் எதிர்கால செல்வ வளத்தையும், அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் முழுமையாகப் புரிந்து கொண்டு வாழ்க்கையை உன்னத நிலைக்கு உயர்த்திக் கொள்ளலாம்.